ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

ஆவணி மாத ராசிபலன்

12 ராசிகளுக்கும் ஆவணி மாத ராசி பலன்


ஆவணி மாத கிரக நிலைகள்;

ஆவணி ஸ்திர மாதம் என்றைழைக்கப்படுகிறது..சிம்மத்தில் சூரியன் ஆட்சியாக இருப்பதால் இந்த மாதத்தில் எந்த சுப காரியம் செய்தாலும் அது நீண்ட நாள் நிலைத்து பலன் கொடுக்கும்..திருமணம்,கிரஹபிரவேசம் போன்றவை இந்த மாதத்தில் செய்வதால் மிக நல்லது...இந்த வருட ஆவணி மாதம் இரு அமாவாசை வருவதால் இது மலமாதம் அதனால் சுப காரியம் செய்யக்கூடாது என பஞ்சாங்கங்களில் போட்டிருந்தாலும்,சூரியனுக்கு 3ல் சனி இருப்பதால் எந்த தீங்கும் இல்லை என தணிகை பஞ்சாங்கம் விளக்கம் போட்டிருக்கிறார்கள்...

காலப்புருச லக்னத்துக்கு 7ல் சனி செவ்வாய் சேர்ந்திருப்பது குரு பார்வை இல்லாமல் இருப்பது திருமணம் போன்றவற்றுக்கு உகந்ததாக இருக்குமா என்பது ஆய்வுக்குறியது...இந்த நிலை சனி,செவ்வாய் சேர்க்கை நாட்டில் கல்வரம்,வறுமை,தொழில் ஸ்தானங்களுக்கு பாதிப்பு,மின் பற்றாக்குறையை உண்டாக்குகிறது..ஆட்சியாளர்களுக்கு பலவித பிரச்சினை...அதுவும் இன்று நிலக்கரி ஊழல் பெரிதாக பேசப்படுகிறது...நிலக்கரி என்பது சனி,செவ்வாய் தானே....தீவிபத்துகள் அதிகம் நடந்ததும் இந்த மாதத்தில்தான் என நினைக்கிறேன்...காரணம் சனி ,செவ்வாய் சேர்க்கையே..முக்கிய தலைவர்களுக்கு பாதிப்பும்,கண்டமும் உண்டாகும் மாதமாக இருக்கிறது..மூத்த அரசியல்வாதிகளுக்கு  உடல்நல பாதிப்புகள்,கண்டம்  வரலாம்...

மேசம்;

உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் சனியுடன் இணைந்து சுபர் பார்வை இல்லாமல் இருப்பது சுமாரான பலன்களை கொடுக்கும்..இந்த மாதம் தொழில் ரீதியாகவும்,வருமான ரீதியாகவும் பல தொல்லைகளை சந்திக்க நேரும்..உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை...குரு சாதகமாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை சமாளிக்கலாம்..மன சோர்வு இல்லாமல் செயல்படுங்கள்

ரிசபம்;

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்ததால் தாராள வருமானம் வந்து சேரும்..இதுவரை இருந்து வந்த பணக்கஷ்டம் தீரும்..நினைத்தது நடக்கும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..குரு சாதகமாக இல்லாவிட்டாலும் சுக்கிரன் அள்ளிக்கொடுப்பார்..

மிதுனம்;

ராசி அதிபதி புதன் மாத பிற்பகுதியில்  3ல் இருந்தாலும் சுக்கிரன்,ராகு,சூரியன் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறார்கள்..ஆவணி 13 ஆம் தேதி தாராள பண வரவு இருக்கும்...கவலை வேண்டாம் தொழில் செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்படி நல்ல செய்திகள் வந்து சேரும்

கடகம்;

உங்கள் ராசிக்கு அதிபதி சந்திரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று துவங்குவதால் இந்த மாதம் சுறுசுறுப்பாகவே செல்லும் பண வரவு தாராளமாகவே இருக்கும்..வீடு,நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருந்தாலும் மாத இறுதியில் சாதகமான முடிவுகள் உண்டாகும்...உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

சிம்மம்;

வக்கிர சனி நிவர்த்தியான பின் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பீர்கள்..ராசிக்கு அதிபதி சூரியன் உங்கள் ராசியில் ஆட்சி பெறும் மாதம் இது..எனவே தைரியம்,தன்னம்பிக்கை அதிகமாகவே காணப்படும்...செவ்வாய் சனியுடன் இருப்பதால் எதிரிகள் தொழில் ரீதியாக குழப்பம் இருந்தாலும் முன்பு அளவுக்கு இருக்காது..பண வரவு தாராளமாக வந்து சேரும்...குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..

(தொடரும்)




3 கருத்துகள்:

ndhilip சொன்னது…

Sir pls tell about KANNI RAASI.

ndhilip சொன்னது…

Sir pls tell about KANNI RAASI.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதிவாக்கி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...