சனி, 25 ஆகஸ்ட், 2012

குரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்


குரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்;


தேவகுருவாகிய குரு பகவான் லக்னத்தில் இருப்பாராகில் ஜாதகருக்கு அவருடைய பூரண கிருமையுண்டு. இவருக்குத் தெரியாத சாஸ்திரமே இல்லை என்று சொல்ல வேண்டும். பலரும் போற்றும் பாண்டித்யம் பெற்றிருப்பார். தீர்க்காயுள் உண்டு. தர்க்க சாஸ்திரம் அறிந்தவர். வாக்கு வன்மையுள்ளவர். சுக ஜீவனம் உண்டு.சகல தோசங்களும் நிவர்த்தி..
இரண்டாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் மிகவும் நிதானமாகப் பேசுபவர். நீதிமான். இவருக்கு பாலயத்திலயே விவாகமாகிவிடும். சுற்புத்ரர் பாக்கியம் உண்டு. மிகுந்த தனங்கள் சேர்ப்பார்.பிறருக்கு அறிவுறை வழங்குவதில் வல்லவர்
மூன்றாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் தன் சரீரத்தை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்பவர். தாஷண்யத்திற்காக பலதையும் செய்யக்கூடியவர். பந்து ஜனங்களுக்குப் பிரியமானவர். வுpத்தையில் அபிவிருத்தியடைபவர். சகோதரர்களுக்கு உதவிகள் செய்பவர்.நண்பர்கள் அதிகம் உண்டு..தனித்து இருந்தால் இல்லை
நான்காவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் தர்ம குணம் உள்ளவர். சுக ஜீவனம் செய்பவர். வாஹன யோகம் உடையோர். பந்துக்களுக்கு இனியவர். சுக சரீரம் உள்ளவர். பசுக்கள் பாக்கியம் உண்டு.வண்டி வாகன்ங்களில் செல்கையில் கவனம் தேவை தனியாக குரு இருந்தால் வீடு அமைவதில் சிக்கல் உண்டாகும்
ஐந்தாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் புத்திமான் என்னும் பெயர் பெறுவார். புத்திரர்கள் குறைவு. சேனைத்தலைவராக வரும் பாக்கியம் உண்டு. அதிகமாக செலவு செய்பவர். ஆனால், தனம் சேர்ப்பதில் கருத்துள்ளவராகவும் இருப்பார்.பித்ரு தோசம் உடையவர்
ஆறாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் ஞான ஹீனராக இருப்பார். பவுத்திர ரோகங்கள் பீடிக்கும். சந்துருக்களை ஜெயிப்பார். சாஸ்திர ஞானவிருத்தியுள்ளவர். செல்வம் அதிகமாகச் சேராது.பணம் தங்காமல் விரயமும் ஆகும்..
ஏழாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் சிறுவயதில் விவாகம் செய்துக்கொள்ளவேண்டியதாக ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவார். நல்ல மனைவியை அடைவார். அடிக்கடி விசனங்களால் பாதிக்கப்படுவார்.
எட்டாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் மூலரோகத்திற்கு ஆளானவர். புத்திமான். ஆசாரம் உள்ளவர். வெகு ஜனப்பிரியர்.நல்ல பேச்சுதிறனும் உடையவர்
ஓன்பதாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் தான தருமங்களைச் செய்வார். தீர்க்காயுள் உண்டு. விரதங்களை அனுஷ்டிப்பவர். தனவான். ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபாடு உண்டு.சட்டம்,நீதிதுறையில் புகழ்பெறுவார்
பத்தாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் திறன் பெற்றிருப்பார். கல்வியில் தேர்ச்சியுண்டு. வேசிப்பிரியர். தனவான். ஆஸ்வயோகமும் உண்டு.
பதினோராவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் ஞான சிகாமணியென்னும் பெயர் பெறுவார். தனவான் சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு. புத்திரப்பேறு உள்ளவர். ராஜ சன்மானம் பெறுவார்.
பன்னிரெண்டாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் மனைவி வார்த்தை கேட்பவர். தயவு தாஷண்யம் இல்லாதவர். வீட்டை விட்டோ ஊரை விட்டோ நெடுங்காலம் வாசம் செய்பவர். அற்பு புத்தியும் உள்ளவர்.


3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Dear Sir,
You have mentioned, what if Guru is in First house. Will it apply even if it is Pagai Veedu (enenmy) of Guru. Kindly clarify.
BALA RIYADH

'பரிவை' சே.குமார் சொன்னது…

நிறைய சொல்லுறீங்க...

நம்ம ஜாதகத்துல குரு எங்க இருக்காருன்னு தெரியலையே...

Unknown சொன்னது…

நல்ல தகவல் . நன்றி