வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்

புலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்;


கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கனமான கரும்பாம்பு கேந்திரகோணம்
ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட
அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்
சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த 
சிவசிவா கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க
குமரனுக்கு அனுதினமும் பலனைக் கூறே.

-புலிப்பாணி ஜோதிட பாடல்

விளக்கம்;

கரும்பாம்பு எனப்படும் ராகு ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களிலோ சுப கிரகங்களின் பார்வை இருக்குமானால் இந்த ஜாதகர் பெரும் யோகம் பெற்றவராவார்..சிவனருளினால் இவர் பெரும் செல்வந்தராக இருப்பார்..இதனை லக்னாதிபதி இருக்கும் இடத்தை கணித்து பலன் கூற வேண்டும்..

என்னுடைய கருத்து;

மேற்கண்ட அமைப்பு இருந்து ராகு திசை வந்தால் திடீர்னு பெரிய யோகத்தை ராகு கொடுத்துவிடும்..கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு ஒரே நாளில் ஆனவர்களை பார்த்திருக்கிறோம்..அதெல்லாம் ராகு திசை தரும் யோகம்தான் இது புதையல் யோகம் எனப்படும்...கிரானைட் மூலம் செல்வந்தர்,சாதாரணமாக ஆரம்பித்த வியாபாரத்துக்கு பெரிய பெரிய ஆர்டர்களாக வந்து குவிவது...திடீர்னு கிடைக்கும் மந்திரி பதவி போல..ராகு தரும் யோகம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்...!

ராகு 4ல் இருந்து சுபர் பார்வையும் இல்லைன்னா,அம்மாவுக்கு பாதிக்கும்..உங்க பேர்ல மாடி வீடு என்ன ஓட்டு வீடு கூட இருக்காது..இருந்தா அங்கு கெட்ட சக்தி நடமாட்டம் இருக்கும்..அவருக்கு எந்த சுகமும் கிடைக்காது..மனைவி கூட இவர்க்கு எந்த சுகமும் தரமாட்டார்...எல்லாம் குறுக்கு வழி சுகம்தான்...சைக்கிளில் போனால் கூட கீழே விழுவார்....மாடு வளர்த்தால் நோயில் படுக்கும்...அடிக்கடி உடல் பாதிக்கும்..சுபர் பார்வை இல்லைன்னா இது மாதிரி பக்க விளைவும் உண்டு..!!


கருத்துகள் இல்லை: