புலிப்பாணி ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலிப்பாணி ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்

புலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்;


கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கனமான கரும்பாம்பு கேந்திரகோணம்
ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட
அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்
சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த 
சிவசிவா கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க
குமரனுக்கு அனுதினமும் பலனைக் கூறே.

-புலிப்பாணி ஜோதிட பாடல்

விளக்கம்;

கரும்பாம்பு எனப்படும் ராகு ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களிலோ சுப கிரகங்களின் பார்வை இருக்குமானால் இந்த ஜாதகர் பெரும் யோகம் பெற்றவராவார்..சிவனருளினால் இவர் பெரும் செல்வந்தராக இருப்பார்..இதனை லக்னாதிபதி இருக்கும் இடத்தை கணித்து பலன் கூற வேண்டும்..

என்னுடைய கருத்து;

மேற்கண்ட அமைப்பு இருந்து ராகு திசை வந்தால் திடீர்னு பெரிய யோகத்தை ராகு கொடுத்துவிடும்..கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு ஒரே நாளில் ஆனவர்களை பார்த்திருக்கிறோம்..அதெல்லாம் ராகு திசை தரும் யோகம்தான் இது புதையல் யோகம் எனப்படும்...கிரானைட் மூலம் செல்வந்தர்,சாதாரணமாக ஆரம்பித்த வியாபாரத்துக்கு பெரிய பெரிய ஆர்டர்களாக வந்து குவிவது...திடீர்னு கிடைக்கும் மந்திரி பதவி போல..ராகு தரும் யோகம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்...!

ராகு 4ல் இருந்து சுபர் பார்வையும் இல்லைன்னா,அம்மாவுக்கு பாதிக்கும்..உங்க பேர்ல மாடி வீடு என்ன ஓட்டு வீடு கூட இருக்காது..இருந்தா அங்கு கெட்ட சக்தி நடமாட்டம் இருக்கும்..அவருக்கு எந்த சுகமும் கிடைக்காது..மனைவி கூட இவர்க்கு எந்த சுகமும் தரமாட்டார்...எல்லாம் குறுக்கு வழி சுகம்தான்...சைக்கிளில் போனால் கூட கீழே விழுவார்....மாடு வளர்த்தால் நோயில் படுக்கும்...அடிக்கடி உடல் பாதிக்கும்..சுபர் பார்வை இல்லைன்னா இது மாதிரி பக்க விளைவும் உண்டு..!!


செவ்வாய், 31 ஜனவரி, 2012

புலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்


அறிவித்தேன் அஞ்சுக்கு அஞ்சென்றாலும்
அப்பனே அப்பதிக்கு கோணந்தன்னில்
தெரிவித்தேன் திரவியம் காடியுண்டு
திடமான மனைகட்டி ஆளுவானாம்
குறிவித்தேன் ஆலயமும் பழுது பார்ப்பன்
கொற்றவனே ரஜிபர்த் திரமுங் கொள்வான்
புரிவித்தேன் பதியேனும் வியமா ரெட்டில்
பதறாதே பண்டு பொருள் விரயமாமே!

விளக்கம்;

ஐயனே! ஐந்திற்கு ஐந்தான பத்தாமிடத்ததிபதி அவனது ஸ்தானத்திற்கு  திரிகோணமான 1,5,9 ஸ்தானத்தில் நிற்க ஜாதகர் பொன் பொருள் நிலபுலன்கள் வாங்கி அதில் பெரிய வீடு கட்டிக் கொண்டு நலமுடன் வாழ்வான்.இவன் பழுதடைந்த கோவில்களை புதுப்பிப்பான்.பரோபகார சிந்தையுடன் பலருக்கு உதவியும் செய்வான்.ஆனால் லக்னாதிபதி 12,6,8 ஸ்தானங்களில் நின்றால் இந்த ஜாதகருக்கு எல்லா பொருள்களும் விரயமாகி பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறேன்!!




இன்னும் பல புலிப்பாணி ஜோதிட தகவல்களை பெற நல்ல நேரம் ப்ளாக்கின் வலது பக்கம் இருக்கும் கூகிள் சர்ச் கேட்ஜெட்டில் pulippaani jothidam  என தேடவும்!!

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம்-குழந்தை பாக்யம்

குழந்தை பாக்யம் இல்லாதவர் ஜாதகம் பற்றி புலிப்பாணி சித்தர் தன் ஜோதிட பாடலில் என்ன சொல்லியிருக்கிறார் என பர்ப்போம்....

பாடல்;

ஆரப்பா அயன்விதியை அரைய கேளு 
அப்பனே அஞ்சுள்ளோன் ஆரோன் கூடில்
சீரப்பா சென்மனுக்கு புத்திர தோசம்
சிவசிவாயிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூரப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும் 
கொற்றவனே கொள்ளிக்கு பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
பலதுண்டு பலதீர்த்த மாடச்சொல்லே.


விளக்கம்;பிரம்மன் விதித்த விதியை எவராலும் மாற்ற முடியாது .ஆதலின் இந்த ஜாதகத்தின் அமைப்பை கவனத்துடன் கேட்பாயாக.பூர்வ புண்ணிய அதிபதியான ஐந்துக்கு உரியவன் ஆறுக்குறியவருடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் புத்திர தோசம் உடையவர்.சிவனருளால் இவர்கள் மூன்றாம் இடத்தில் சேர்ந்திருந்தாலும் இவர்களை கொடிய கிரகங்கள் பார்த்தாலும் இந்த ஜாதகர் இறந்த பின்னர் கொள்ளி போடக்கூட பிள்ளைகள் இருக்காது..
ஆனால் குரு பகவானின் பார்வை இருந்தால் பலன் உண்டு.எனலாம்.இந்த ஜாதகர் பல ஸ்தலங்களுக்கு சென்ரூ தீர்த்த மாடி வரச்சொல்லலாம்..

வியாழன், 29 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம்;நாடி பார்த்தல்

நாடிபார்த்து சித்த வைத்தியம் செய்தது ஒரு காலம்.இன்று அப்படிப்பட்ட வைத்தியர்கள் இருக்கிறார்களா என்பதேகேள்விக்குறிதான்...இப்போதெல்லாம் சித்த வைத்தியர்களே மாத்திரையை போட்டுக்கொண்டு உடல் உபாதையை தீர்த்துக்கொள்கின்றனர்.


புலிப்பாணி ஜோதிடம்;நாடி பார்ப்பது எப்படி என சொல்கிறது.

பாடல்;
பாரப்பா இன்னமொரு விவரங்கேளு
பகர் புதனும் குரு சனியும் வாத நாடி
சீரப்பா துர்கிரகம் சூரி சேயும்
சிரப்பான பாம்புகளும் பித்த நாடி 
நேரப்பா பால்மதியும் சுங்கன் தானும் 
நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
வீரப்பா போகருடை கடாட்சத்தாலே 
விவரமெல்லாம் புலிப்பாணி விளம்ப கேளு.

விளக்கம்;மனிதனுக்கு உயிர் நாடியாக விளங்கும் மூன்று நாடிகளுக்கான கிரகங்களை கூறுகிறேன்.புதனுக்கும்,சனிக்கும் உரியது வாத நாடியாகும்.துர்கிரகம் எனப்படும் சூரியனும்,செவ்வாயும் சிறப்பு மிக்க பாம்புகள் எனப்படும் ராகுவும்,கேதுவும் ஆகிய இடங்களுக்கு உரியது பித்த நாடியாகும்.சந்திரன்,சுக்கிரன் போன்றவர்களுக்கு உரியது சிலேத்தும நாடியாகும்.இதனை என் குருவாகிய போகர் அருளினால் கூறினேன்.