சவுக்கு இணையதளம் நம் அனைவருக்கும் பரிச்சயம் ஆனதுதான்..பல காவல்துறை அதிகாரிகளின் நிழல் உலக வாழ்வை படம் பிடித்து காட்டி பிரபலமன தளம்..தமிழ் விக்கி லீக்ஸ் என்னும் அளவு பெயர் பெற்றது..இவர்கள் ஹிட்ஸ் ஒரு நாளைக்கு 10,000 க்கும் மேல் என்றால் அவ்ர்களின் வாசகர் வட்டத்தை நினைத்து பாருங்கள்.ஈழத்தமிழர்களுக்காக பல முறை குரல் கொடுத்த தளம்..அரசியல் பதிவு எழுதுவதில் முண்ணனியில் உள்ள தளம்...ராஜீவ் காந்தி கொலை வழக்கு சதியில் தொடர்புடையவர்களாக,குற்றம் சாட்டப்பட்டு ,தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள,சாந்தன்,முருகன்,பேரறிவாளன் விடுதலைக்காக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை சவுக்கு தளம் தயாரித்துள்ளது...அதற்காக அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.அந்த வேண்டுகோளை நாமும் நிறைவேற்றுவோம்.
அதனை பார்க்க;சவுக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக