d.m.k horoscope
திராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் ராபின்சன் பூங்காவில் 17.9.1949 ஆண்டு மாலை 7.20 க்குஅண்ணா மற்றும் தி.மு.க முண்ணனி தலைவர்களால் துவங்கப்பட்டது.அந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணித்துள்ளேன்.
அரசியல் கட்சி துவங்கினால் முக்கியமான அரசு கிரகங்களான குரு,செவ்வாய்,சூரியன் பலம் அவசியம்...இந்த கிரகங்கள் பலமுள்ள காலகட்டத்தில் துவங்கப்படும் கட்சிகளே தலைமுறை கடந்து வெற்றிகரமாக மக்கள் ஆதரவுடன் ஆட்சி செய்ய முடியும்.
இந்த அரசு கிரகங்கள் மிக சிறப்பாக தி.மு.க வின் ஜாதகத்தில் அமைந்ததால்தான் இக்கட்சி பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தும்,கோடிக்கணக்கான தொண்டர்களுடன் கட்டுக்கோப்பாக நடைபோடுகிறது.
தி.மு.க ஜாதகம்;
மீனம் லக்கினம்
புனர்பூசம் நட்சத்திரம்
மிதுனம் ராசி
தி.மு.க ஜாதகத்தில் அரசு கிரகமான குரு,செவ்வாய்,சூரியன்.. மிக சிறப்பாக அமைந்துள்ளது...
குரு,சந்திர யோகம்,நிபுணத்துவயோகம்,சிறப்பாக அமைந்துள்ளது..5க்குடையவன் சந்திரன் நாலில்..கட்சிக்கு மிகப்பெரிய அசையாத சொத்துக்களையும்,மதி யூகம்,புத்திசாலித்தனத்தையும் தரும்.6ல் சனி..எதிரிகளை வெற்றி கொள்ளும் தன்னம்பிக்கை இக்கட்சியினரின் பலம்.லக்னாதிபதி குரு..ராசியிலும்,அம்சத்திலும் ஆட்சிபலம்...ராஜயோக அமைப்பு.
தற்சமயம் இக்கட்சியின் லக்கினத்திற்கு எட்டுக்குடையவன் திசையில் ராகு புத்தி நடப்பதால், பெரும் சரிவை,கெட்ட பெயர்,அவமனத்தை சந்தித்து வருகிறது.
தற்சமயம் இக்கட்சியின் லக்கினத்திற்கு எட்டுக்குடையவன் திசையில் ராகு புத்தி நடப்பதால், பெரும் சரிவை,கெட்ட பெயர்,அவமனத்தை சந்தித்து வருகிறது.
சுக்கிர திசை மீனலக்கினத்திற்கு பாவி திசை ஆகும்.சுக்கிரன் எட்டுக்குடையவன் ஆகி,எட்டாம் இடமிடத்தில் நின்று திசை நடத்துபோது,கட்சி செல்வாக்கை இழந்து வருவதில் ஆச்சர்யம் இல்லை.எட்டாமிடம் ஒரு ஜாதகத்தின் வீழ்ச்சி,மரணம் பற்றி சொல்லும் இடம்..அந்த இடத்தின் அதிபதி கிரக திசை நடப்பது,இக்கட்சிக்கு பலவீனம்..
சுக்கிர திசையில்.. ராகு புத்தி.ராகு கூட்டத்தை கூட்டும் கிரகம்..என என் குரு சொல்வார்..அதாவது நல்லது,கெட்டது என மக்கள் கூட்ட்த்தை கூட்டும் இடம்.ராகுபுத்தி கட்சிக்கு விபத்தை,பெரும் அவமானத்தை தந்து கொண்டிருக்கிறது..ராகு லக்கினத்தில் அமர்ந்து இருப்பதால் லக்கினம்..தலையை சொல்லும் இடம்...கட்சிக்கு தலைமையகம்தானே..?அந்த வகையில் தலைவருக்கு கடும் நெருக்கடியை தந்தது என சொல்லாம்.இன்னும் கொடுக்கும்...தலைமைக்கு எல்லாம் ஆபத்து என்பதால்தான் அந்தந்த மாவட்ட முக்கிய தலைவர்கள் எல்லாம் நிலமீட்பு வழக்கில் சிறை செல்கின்றனர்..
எட்டுக்குடையவன் திசையில் ராகு புத்தி மனிதருக்கு வந்தால் மரணம் வரை வாய்ப்புண்டு என சொல்வோம்...ஏனென்றால் ராகு புத்தி வந்தாலே அந்த வீட்டில் கூட்டத்தை கூட்டி விடுவார்...ராகு கெட்டவர் என்பதால் ,கெட்டதுக்குதானே உறவினர் கூட்டம் கூடும்..?
எட்டுக்குடையவன் திசையில் ராகு புத்தி மனிதருக்கு வந்தால் மரணம் வரை வாய்ப்புண்டு என சொல்வோம்...ஏனென்றால் ராகு புத்தி வந்தாலே அந்த வீட்டில் கூட்டத்தை கூட்டி விடுவார்...ராகு கெட்டவர் என்பதால் ,கெட்டதுக்குதானே உறவினர் கூட்டம் கூடும்..?
2012 டிசம்பர் வரை கடும் சிக்கலை கட்சி சந்திக்கும்...வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரிக்கும்...முக்கிய தலைவர்களுக்கு கண்டம்தான்.இதனால் கட்சி பல உடையவும்,சிதறவும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
செவ்வாய் திசை,சூரிய திசை,ராகு திசை எல்லாம் இந்த ஜாதகத்திற்கு பெரும் புகழ்,செல்வாக்கு தந்தது..ஆனால் இந்த சுக்கிர திசை கிரகத்திற்கு ஏற்றவாறு பெரும் செல்வத்தை கட்சிகாரர்களுக்கு கொடுப்பினும்,லக்கினத்திற்கு சுக்கிரன் கெட்டவன் என்பதால் பலன் இல்லை.சுக்கிர திசை மிதுனம்,கன்னி,மகரம்,கும்பம் லக்கினத்திற்கே யோகம் தரும் கிரகமாகும்..
செவ்வாய் கடகத்தில் நீசமாகி நவாம்சத்தில் ஆட்சி பெற்றதால் நீசபங்க ராஜயோகம் பெற்றுள்ளது..இதனால்தான் கோடிக்கணக்கான தொண்டர்கள் அதன் தலைவருக்கு கட்டுப்பட்டு இருக்கின்றனர்..ஒரு கட்சிக்கு அரசியல்வாதிக்கு செவ்வாய் பலம்,குரு பலம், மிக முக்கியம்.
செவ்வாய் கடகத்தில் நீசமாகி நவாம்சத்தில் ஆட்சி பெற்றதால் நீசபங்க ராஜயோகம் பெற்றுள்ளது..இதனால்தான் கோடிக்கணக்கான தொண்டர்கள் அதன் தலைவருக்கு கட்டுப்பட்டு இருக்கின்றனர்..ஒரு கட்சிக்கு அரசியல்வாதிக்கு செவ்வாய் பலம்,குரு பலம், மிக முக்கியம்.
லக்கினமும் மீனம்..அரசு கிரகாமாகிய குருவின் லக்கினத்தில் அமைந்தது,மக்கள் வசியம்,தந்திரம் நிறைந்த மிதுனத்தில் ராசி..அமைந்திருக்கிறது.தந்திரம்,அடுக்குமொழி சாதூர்யம்,தரும் புதன் உச்சம் பெற்று இருப்பதால் கட்சி பேச்சால் வளர்ந்ததும்..புரிகிறது..நட்சத்திரம் புனர்பூசம்...ராமர் பிறந்த நட்சத்திரம்..பாதி நாள் வனவாசம் அவருக்கு...இந்த கட்சிக்கோ பாதிநாள் சிறைவாசம்....என பார்க்கும்போதே இந்த கட்சி தொண்டர்களின் கடும் உழைப்பால் வளர்ந்த கட்சி என்பதை அறியலாம்..ஆனால் வரும் காலங்களில் கட்சியை வழிநடத்த திறனில்லாத தலைவர்கள் கையில் கட்சி போக வாய்ப்புண்டு.இது திசா புத்தி அடிப்படையிலான கணிப்பு ஆகும்.
ஒரு கட்சி துவங்கும்போது எந்தெந்த கிரகங்கள் பலம் பெற்று அமைந்தால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும் என அறியவே இந்த பதிவு.
1 கருத்து:
Dear Sir:
Thanks for sharing.
When you have time please post what dasa will be good (and bad) for each lagna, with exceptions like Saturn, rahu in 3,6, 11.
I am happy to say that I have read some of your books and would request you to create a post giving the details of your books and where to buy it and bookmark the post so it will be useful for others in case they are interested.
All the best.
கருத்துரையிடுக