எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்!
ரஜினி என்பது மூன்றெழுத்துமந்திரம்..இந்த மந்திரம் பார்த்துதானோ என்னவோ...விஜய்,அஜீத்,சிம்பு,தனுஷ்,விஷால் என இளைய தலைமுறை நடிகர்கள் பெயர் அமைத்துக்கொண்டு ஜொலிக்கிறார்கள்...விவரம் தெரிந்த நாள் முதல் ரஜினி மட்டும்தான் எனக்கு பிடிக்கும்...மத்த நடிகர்கள் எல்லாம் எதுக்கு..?அவர்கள் படத்தையெல்லாம் போய் பார்க்குறாங்களே என்று கூட சின்ன வயதில் நினைத்திருக்கிறேன்.
முரட்டுகாளை
பொதுவாக எம் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம் என்ற பாடலை மறக்க முடியுமா...இன்றும் கூட...சின்ன குழந்தைகள் சிலிர்ப்புடன் பாடும் பாடல்..கிராமத்து இளைஞனாக ரஜினி கலக்கியிருப்பார்.எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த மசாலா படம்..இதில் முதன் முதலாக் ஜெய்ஷங்கர் வில்லனாக நடித்திருப்பார்.இது குறித்து ரஜினி,150 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜைஷன்கர் இதில் வில்லனாக நடித்திருக்கிறார் எனவே படத்தின் விளம்பரங்களில் அவருக்குறிய முக்கியத்துவத்தை குறைத்து விடாதீர்கள் என் கறாராக சொல்லி விட்டாராம்.
சங்கிலி முருகனின் மிரட்டும் தோற்றம் ,அவர் ஜெய்ஷங்கரிடம் காட்டும் விசுவாசம்,ரஜினியின் ரயில் ஃபைட்,மனதை இனிக்க செய்யும் இளையராஜா இசை என எல்லாமே படத்தை சூப்பர் ஹிட் ஆக்கியது..படம் முழுவதும் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும்..ரஜினியை முழுமையான மாஸ் ஹீரோ ஆக்கிய படங்களில் முதலிடம்...ரஜினியின் ஹேர்ஸ்டைல் ,காஸ்டியூம் எல்லாமே கிராமத்து மனிதனாகவே இருக்கும்..ஏ.வி.எம் மின் முரட்டுகாளை என ஏ.வி.எம் க்கு புகழ் சேர்த்த முத்துக்களில் ஒன்று
பாயும் புலி
இந்த படம் செம ஹிட்டாக தமிழகத்தில் ஓடிக்கொண்டிருந்த போது இலங்கையில் இதை வெளியிட முயன்றபோது..தலைப்பில் புலி என வருவதால் இலங்கையில் அனுமதி மறுக்கப்பட்டது..அதன் பின் இரும்பு கரங்கள் என பெயர் மாற்றி வெளியிட்டார்களாம்.
படத்தின் சண்டை காட்சிகளின் போது எம்.ஜி.ஆர் போஸ்டர் இருக்கும்படி செய்தார்களாம்..இதனால் அதிக விசில் ,கைதட்டல் அந்த சீனுக்கு கிடைக்கும் என்ற ஐடியா இயக்குனருக்கு...ஆனால் அந்த போஸ்டரை ரஜினி எடுக்க சொல்லிவிட்டார்..காரணம் கேட்டதற்கு ,என் படத்திற்க்கு வருபவர்கள் எனக்காக கை தட்ட வேண்டும்..எம்.ஜி.ஆர் புகழை பயன்படுத்தி கைதட்டல் வாங்க விருப்ப மில்லை..என்று சொல்லி விட்டாராம்...ரஜினியின் முடிவின் படி அந்த போஸ்டர் அகற்றப்பட்டது...
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்,ஆடி மாசம் காத்தடிக்க வாடி புள்ள சேர்த்தனைக்க போன்ற இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் படத்திற்கு பக்க பலம்..
தம்பிக்கு எந்த ஊரு
ஆக்சன் ஹீரோவாக இருந்த ரஜினிக்கு காமெடியும் வரும் என நிரூபித்த முதல் படம்..முழுக்க காமெடி தோரணம் இருந்தாலும் காதல் காட்சிகள் அருமையாக இருக்கும்..காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் இன்றும் கிறங்கடிக்கும் காதல் மெலடி...பாம்புக்கும் ரஜினிக்கும் அப்படி ஒரு ஒற்றுமையோஎன்னவோ..ரஜினிபடங்களில்பாம்புவரும்சீன்கள்உள்ளஎல்லாபடமும்செமஹிட்.எந்திரன்,சந்திரமுகியில் கூட கிராஃபிக்ஸ் பாம்பு சீன்இருக்கும்..தம்பிக்கு எந்த ஊரு படத்தில் பனக்கார இளைஞனாக ,முரட்டு சுபாவத்துடன் இருப்பார்..அவரை திருத்த அவரது அப்பா தன் நண்பரின் கிராமத்துக்கு அனுப்பி வைப்பார்..கிராமத்தில் ரஜினிக்கு கிடைக்கும் அனுபவங்களே கதை..கிராமத்தில் ரஜினி படும் அவஸ்தைகள் செம சிரிப்பு ரகம்..ராஜ்டிவில்லட்சம்முறையாவதுஒளிபரப்பிஇருப்பார்கள்..அவர்களிடம் இருக்கும் ஒரே ரஜினி படம் என நினைக்கிறேன்...
அன்புள்ள ரஜினிகாந்த்
ஊனமுற்ற குழந்தை..ரஜினி ரசிகையாக இருக்கிறது...தாயை ஒதுக்கும் அக்குழந்தையின் பிடிவாத குணத்தை மாற்றி அவர் அம்மாவுடன் சேர உதவுவார் ரஜினி..இதுதான் கதை...இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்திருப்பார்..அவரே பின்னாளில் ரஜினியுடன் எஜமான் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.என்ன ஒரு விசித்திரம்?
எம்.ஜி.ஆருக்காக உருவாக்கப்பட்ட கதை.அவர் நடிக்க முடியாததால் ரஜினி நடித்தார் படத்தின் டைட்டிலில் ரஜினி படம் இது ஒன்றே என நினைக்கிறேன்...அன்புள்ள ரஜினிகாந்த் வசீகரமான தலைப்பு..ரஜினி அங்கிள் என மீனா ஓடி வரும் காட்சியும் முத்து மணி சுடரே வா என்ற பாடலும் மறக்க முடியாதவை..பாக்யராஜ நட்பு முறையில் தெனாலிராமன் எனும் படத்திலேயே வரும் நாடகத்தில் நடித்திருப்பார்...நகைச்சுவை நிறைந்த அந்த சீன் பெரிதும் பாராட்டப்பட்டது...
லதா ரஜினிகாந்த் கருணை உள்ளமே கடவுள் இல்லமே என்ற பாடலை பாடி இருக்கிறார்..ரஜினி வீட்டில் சில சீன்கள் எடுக்கப்பட்ட படம்..
கைகொடுக்கும் கை
கண் தெரியாத ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்திருப்பார் ரஜினி..மஹேந்திரன் இயக்கத்தில் வந்த படம்..கண் தெரியாத பெண்ணாக ரேவதி சிறப்பாக நடித்த படம்..இளையராஜாவின் இசையில் தாழம்பூவே வாசம் வீசும் பாடலை மறக்க முடியுமா..?
.
ஸ்ரீ ராகவேந்திரா
ரஜினியின் 100 வது படம்..ஆக்ஷன் ஹீரோ ரஜினி, சாமியாராக நடிப்பார் என எவருமே யூகிக்க முடியாத காலகட்டத்தில் வந்த படம்...ஆனால் சிறப்பான திரைக்கதை..சுவையான சம்பவங்கள்,அருமையான பாடல்கள் நிறைந்த படம்..நான் அடிக்கடி பார்த்த படம்..ராகவேந்திரராக நடித்த ரஜினிக்கும்,ராகவேந்திரரின் முதன்மை சீடராகிய பத்ம பாதர் வேடத்தில் நடத்த டெல்லி கணேஷ் க்குமான க்ளைமாக்ஸ் காட்சிகள் கண்களை குளமாக்கும்.
விடுதலை
பாக்யராஜுடன் தாவணி கனவுகள் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துகொடுத்த நடிகர் திலகம் சிவாஜி ,ரஜினிக்காக விடுதலை படத்திலும் கவுரவ வேடத்தில் நடித்து கொடுத்தார்..சிவாஜி போலீஸ்,அவரிடம் மாட்டிகொள்ளும் கைதியாக ரஜினி..அவரிடமிருந்து தப்பிக்க ரஜினி போடும் திட்டங்களை எல்லாம் சிவாஜி தவிடு பொடி ஆக்கும் சீன்கள் ரசிக்க வைக்கும்..
நாட்டுக்குள்ளே என்னை பத்தி கேட்டு பாருங்க..அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க..கலக்கலான் இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் சந்திரபோஸ்..
.
மிஸ்டர் பாரத்
நாட்டுக்குள்ளே என்னை பத்தி கேட்டு பாருங்க..அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க..கலக்கலான் இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் சந்திரபோஸ்..
.
மிஸ்டர் பாரத்
சத்யராஜ் வில்லன்..ரஜினி ஹீரோ இந்த காம்பினேசன் செம ஹிட் ஆன படம்..காக்கி சட்டை போன்ற படங்களில் கமலை பல சீன்களில் ஓரம் கட்டிய சத்யராஜ் ..இந்த படத்திலும் ரஜினிக்கு நிகராக சில சீன்களில் கலக்கி இருப்பார்..காக்கி சட்டையில் தகடு தகடு என்றால் இதில் என்னமா கண்ணு சவுக்கியமா...சூப்பர் பஞ்ச்..இதே வரியில் ஆரம்பிக்கும் பாடல் அப்போது பட்டி தொட்டி,சிட்டியெல்லாம் கலக்கி எடுத்தது.இளையராஜா இசை..
தனது தாயை ஒதுக்கி விட்டு சென்ற ,தனது தந்தை யை எதிர்த்து அவருக்கு நிகராக உயர்ந்து அவருக்கு செக் வைக்கும் மகனாக ரஜினி நடித்த படம்...
ஊர் காவலன்
ராதிகா இரவு ஒரு மணிக்கு ரஜினியை எழுப்பி எண்ணை தேய்த்து குளிப்பாட்டி ஆவி பறக்க இட்லியை பரிமாறி...சாப்பிடு மாமா என கொஞ்சும் காட்சிகள் சூப்பராக இருக்கும்...அடிப்பாவி ..ராத்திரி ஒரு மணிக்கு என்னை சாப்பிட சொல்றியே போடி..என விரட்டும்போது..ராதிகா மறுக்கும் மேனரிசம்...நமக்கு இது மாதிரி ஒரு மாமன் பொண்ணு இல்லையே என ஏங்க வைக்கும்..கிராமத்து மூட நம்பிக்கைகளை வைத்து வில்லன் செய்யும் அட்டகாசத்தை எதிர்க்கும் வேடத்தில் ரஜினி..நடித்திருப்பார்..
மாசி மாசம்தான் சொல்லு சொல்லு மேல தாளம்தான்....பாடல் கிறங்கடிக்கும்..
பாட்ஷா
எல்லா ரஜினி ரசிகர்களுக்கும் பிடித்த படம்..பாட்ஷாவின் பெரிய வெற்றிக்கு ரகுவரனும் ஒரு முக்கிய காரணம்..ரஜினிக்கு நிகரான ஒரு வில்லன் என்றால் அது நிச்சயமாக ரகுவரன் தான்..ரஜினி,ரகுவரன் சந்திக்கும் காட்சிகள் எல்லாம் தீப்பொறிதான்...ரஜினியை பார்த்து ரகுவரன் பேசும் நக்கலான சீன்கள் ரஜினி ரசிகர்களை கூட கைதட்ட வைத்துவிடும்.
திரைக்கதை இவ்வளவு வேகமாக அமைக்க முடியுமா என அமைந்திருக்கும்..அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள்தான்...தன் தங்கையின் உதட்டில் வழிந்த ரத்தத்தை பார்த்து அதிர்ந்து...பாட்ஷா வாக அப்பாவி ரஜினி மாறும் காட்சி...தன் தங்கைக்கு சீட் தர,மறுத்து அடாவடி செய்யும் வில்லன் அறையில் தன்னை பற்றி சொன்னதும் வில்லன் வேர்வையை துடைக்கும் போது, யார்கிட்டியும் சொல்லிட மாட்டீங்களே என ரஜினி பேசும் சீன், நம் பல்ஸை எகிற வைக்கும்..
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி என்ற பாலகுமாரன் எழுதிய வசனம். தமிழ் சினிமாவில் பஞ்ச் டயலாக் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது.. நக்மாவின் சொக்க வைக்கும் அழகு அப்போது ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்த நேரம்...ஸ்டைலு ஸ்டைலு தான் நீ சூப்பர் ஸ்டைலுதான்..பாடல் கூட கலக்கலான ஒளிப்பதிவாக இருக்கும்..
3 கருத்துகள்:
சூப்பர் ஸ்டார் பற்றி
சூப்பரான பகிர்வு. பாராட்டுக்கள்.
தளபதிய விட்டுடீங்க
அண்ணாமலை இல்லையே
கருத்துரையிடுக