ஜோதிடம்,திருமண பொருத்தம் பார்ப்பதில் கெட்டிக்கார ஜோதிடர்கள் என பெயர் எடுத்த ஜோதிடர்களிடம் கூட்டம் வருவதில்லை...ஆஹா ஓஹோ சூப்பர் என நட்சத்திர பொருத்தத்தை மட்டும் பார்த்து ஒன்பது பொருத்தமும் அம்சமா இருக்குதுங்க..இது பார்வதி மஹேஸ்வரன் பொருத்தம்,,,,ராமர் சீதை பொருத்தம் என்று பூ சுற்றும் ஜோதிடர்களிடம் கூட்டம் அலை மோதுகிறது...அப்படி கூட்டம் அலைமோதாத ஜோதிடர்தான் என் குரு.நாகப்பன்.ஜோதிடர்....(காலமாகிவிட்டார்)இவருக்கென்று தனி கூட்டம் உண்டு.இவரது திருமண பொருத்தம் நச்சுன்னு இருக்கும்...
ஜாதகத்தில் சனி பனிரெண்டில் இருந்து சுக ஸ்தானங்கள் பலமிழந்து,சுக்கிரன் பகை கிரகங்களுடன் கூடியிருந்த ஒரு ஜாதகத்தை பெண்ணின் தகப்பனார் ஒருவர் கொண்டு வந்திருந்தார்.
அந்த ஜாதகத்தை பார்த்துவிட்டு,இதை எதுக்கு கொண்டு வந்த..?புள்ளையை பட்டினி போட்டுட்டு,சொந்தமா சுகம் அனுபவிக்கிறவன்...தூக்கியெறி என்பார்...ஒருவர் பொருத்தம் பார்க்க வரும் நேரத்தை கவனித்து...பூசம் நட்சத்திர பொண்ணு ஜாதகம் கொண்டு வந்துருக்கியா..உன்னுது ரோஹிணி...ஆட்டை கொண்டு வந்து வீட்ல கட்ட போறியா...ஓடிரு..நல்ல ஜாதகம் வந்ததும் வா இவ்வளவுதான் பதில்.
பொறுத்து நிதானமாக பத்து பொருத்தமும் பார்த்து விட்டு,பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கிருக்கிறது...பெண்ணின் கற்பு,ஒழுக்கம் எப்படிப்பட்டது...மாமியார் வீட்டில் எப்படி நடந்து கொள்வாள்..?,கலயாணத்துக்கு பின் வேறு ஆண்களுடன் பழக்கம் உண்டாகுமா..,கல்யாணத்துக்கு பின் இருவரின் ஒற்றுமை என்ன..?
திருமணம் ஆன ஒன்று இரண்டு வருடங்களில் மனைவியின் ராசி தெரிந்துவிடும்....என்பார்.பொருத்தம் பார்க்கும் போது என்னையும் அருகில் அமர்த்திக்கொண்டு,என் குரு சொல்ற மாதிரிதான் நான் பார்ப்பேன்..இதை நீயும் தெரிஞ்சுக்கோ..நாளைக்கு நீ யாருக்காவது பொருத்தம் பார்க்கும்போது,பணத்துக்காகவோ ,சூழ்நிலைக்காகவோ தப்பான ஜோடியை சேர்த்து வெச்சிடாதே என்பார்.
நல்லா ருசியா சமைக்க தெரிஞ்ச பொண்ணுதான் புருசனை சந்தோசமாவும் பார்த்துக்கும் என்பார்.
இதுக்கும்,அந்த மேட்டருக்கும் என்னய்யா சம்பந்தம் என்றால்.,
அதுலதான் விசயமே இருக்கு.தாம்பத்தியத்துக்கும்,சமையல் ,சாப்பாடு ருசிக்கும்,கிரகங்கள் அமைப்பு ஒண்ணுதான்.சுக்கிரன்,குரு கிரகங்கள் நல்ல அமைப்பில் இருக்கும் பெண்தான் இந்த இரண்டு விசயத்திலும் கெட்டிக்காரியா இருப்பா என்பார்.
நெற்றி உயர்ந்த (முன் வழுக்கை) ஆண் நிறைய யோசிப்பவனாக இருப்பான்.அதே சமயம் முன் நெற்றி முடி இறங்க..இறங்க..பெண் அதிர்ஸ்டசாலியா இருப்பா என்பார்.
பொருத்தம் பார்ப்பதில் இவர் காட்டும் கறார் பல சம்யம் மணமகன் வீட்டாரை கடுப்படிக்கும்..எத்தனை ஜாதகம் கொண்டு வந்தாலும் குறை சொல்றாரே என பலர் சலித்துக்கொண்டு வேறு ஜோதிடர்களிடம் போய் விடுவார்கள்.
நீங்கள் ரொம்ப கண்டிப்பா இருக்கிறதால்,வேற பக்கம் போறாங்களே அய்யா என்று நான் சொன்னால்,அவன் தலையெழுத்து அதுதான்..நான் நல்ல பொண்ணை அமைக்க முடியுமா...எதையாவது கட்டிகிட்டு திரியட்டும் என்பார்.
திருமண பொருத்தம் பார்ப்பதில் ,மனப்பொருத்தம் ரொம்ப முக்கியம்...அதே சமயம் சம்பந்தி ஒற்றுமை அதை விட முக்கியம்..சம்பந்திங்க..கலயாண மண்டபத்துல கட்டி புரண்டு சண்டை போடுறதை பல இடத்துல பார்த்திருக்கோம்..மாப்பிள்ளைக்கு எல்லா சீர் வரிசை பொருளும் கொடுத்தாச்சு..அதை ஏத்திட்டு போய் வீட்டுல இறக்க,வேன் வாடகியும் நம்ம தான் தரணுமாம்.என்னடா அநியாயமா இருக்கு..என சண்டை போட்டவர்களையும் பார்த்திருக்கேன்..
பொண்ணையே கொடுத்துட்டாராம்..வேன் வாடகை தரமாட்டாராம்..வேடிக்கையா இல்ல..? ஆனா பொண்ணோட அப்பா வை மாப்பிளை வீட்டாரை கசக்கி பிழியறது இருக்கே ..அப்பா அது இன்னும் கொடுமை...
பெண்ணின் ஜாதகத்தில் முதலில் பார்க்க வேண்டியது என்ன என சில ஜோதிடர்களிடம் கேட்டு பாருங்கள்.மாங்கல்ய பொருத்தம் இருக்கா,கழுத்து பொருத்தம் இருக்கான்னு தான் பார்ப்போம் என்பார்கள்..கிராமத்து ஜோதிடர்கள் முதலில் இதைதான் பார்க்கிறார்கள்...அப்புறம் செவ்வாயும்,சூரியனும் சேர்ந்திருப்பது,செவ்வாய்+சனி அல்லது சூரியன்+சனி அல்லது செவ்வாய்+சூரியன் இவை பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால் விதவை அமைப்பு என்கிறார்கள்...பல ஜோதிட பாடல்களும் அதைத்தான் சொல்கின்றன...
அதன் பின் நான்காம் இடம் என்னும் பெண்ணின் கற்பு ஸ்தானம்....இதை பெரும்பாலும் யாரும் பார்ப்பது இல்லை! எனினும் அதை உறுதி படுத்த ! முடியாது என சொல்லிவிடுவர்.சீதைக்கே நாலில் மாந்தி இருந்ததாலதான் ராவணன் தூக்கிட்டு போனான் என்பார் கிராமத்து ஜோதிடர்..அப்படிப்பட்ட நான்காம் இடத்தில் பாம்பு கிரகம் இருந்தால்..?பாதிப்புதான் கண்காணிப்பு அவசியம்..சில சமயம் மோசமான சூழலில் வளர்பவர்கள்..அதாவது இலங்கை போல பல தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்..அவர்கள் எல்லோருக்கும் நான்கில் ராகுவா இருந்தது..?என கேட்டால்,நாடு,மொழி,ஜாதி பார்த்துதான் ஜாதகம் சொல்ல வேண்டும் என ஜோதிட அலங்காரம் ஜோதிடர்களுக்கு அறிவுறை சொல்கிறது...ஒட்டுமொத்த அழிவு ஏற்படும் காலம்,நாடு என இருக்கும்போது அங்கு இருப்பவனுக்கு சோதிடம் சொன்னால் அது ஒத்து வராது..எனவேதான் அவனவன் சாதி,மதம்,நாட்டுக்கும்,வாழும் இடம் அறிந்து சோதிடம் சொல்ல வேண்டும்...சாமியாருக்கும்,பைத்தியத்துக்கும்,கடவுள் மறுப்பாளனுக்கும் சோதிடம் சொல்லாதே என்கிறார் அகத்தியர்...
3 கருத்துகள்:
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
அருமையான பதிவு உண்மைகள்பேசுகின்றன.
அருமை ஐயா!👍
கருத்துரையிடுக