புதன், 24 ஆகஸ்ட், 2011

உங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..?-ஜோதிடம்


உங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..?-ஜோதிடம்

இராசிகளும்- நோய்களும்
நல்ல நேரம்
மேஷம்http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQRjFepN5jgLq5P8WcVvFx4wMzKFoTyo7CXuTAB-t9XypvDlHP6
வான தேவனின் முதல் இராசி இது. இதன் அதிபதி செவ்வாய், சர ராசி
வகையும், ஆண் இனத்தையும் சார்ந்தது. உடலில் இதன் அங்கம் தலை மெலிந்தபலம் வாய்ந்த தேகம்.



மேஷ இராசிக்கும் ஆறாமதிபதி புதன். இவர் யார் கூட சேருகின்றாரோ
அவரின் குணத்தை பெற்று நோயினை தருவார். இந்த புதன் சனியுடன் கூடினால்நரம்பு சம்பந்தமான நோயினை தருவார். இவர்கள் மூளை சம்பந்தமானநோயினால் மரணமடைவார்கள்.
நல்ல நேரம்
ரிஷபம்
இது காளை உருவத்தை உடையது. பெண் இராசி ஸ்திரவகையைச் சார்ந்தது.
நாற்கால் இராசி கழுத்து உடல் பகுதியை குறிக்கும். இதன் இலக்கினாதிபதி சுக்கிரன்.இந்த இராசிக்கு 6ம் இடம் துலாம். அதன் அதிபதி சுக்கிரன். எனவே
இவர்களுக்கு பெண் நோய்கள் அல்லது சுபம் சம்பந்தமான நோய்கள் வரும்.
இவர்கள் அந்திப்பொழுதில் காய்ச்சலால் மரணமடைவார்கள்.(பயப்பட
வேண்டாம் சாஸ்திரம் சொல்கிறது)
நல்ல நேரம்
மிதுனம்
காலதேவனின் மூன்றாவது இராசி. ஆண் இனத்தையும் உபய வகைகளையும்
சார்ந்தது இது. உடலில் மார்பினை குறிக்கும். இதன் இலக்கினாதிபதி புதன். இந்தஇலக்கினத்தில் பிறந்தவன் புகழுடையவன்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய்.
செவ்வாய் என்பதால் பித்த இரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். செவ்வாய்எட்டாமிடத்தில் இருந்தால் ஆயுளோடும் யோகத்தோடம் கூடிய அறுவை சிகிச்சைகள்ஏற்படும்.
நல்ல நேரம்
கடகம்
மேஷத்தை போன்றே சர இராசி. பெண் இனத்தைச் சேர்ந்தது. இது உடலில்
இருதயம், தோள்பட்டை ஆகியவற்றைக் குறிக்கும். பெண் தன்மையுடையவன்.குளிர்ச்சி பொருந்தியவன். வெண்மை நிறத்தை உடையவன்.இந்த இராசிக்கு ஆறாமிடம் தனுசு. இதன் அதிபதி குருபகவான்.எனவேவாத சம்பந்தமான நோய்கள் வரும்.
நல்ல நேரம்
சிம்மம்
இது வெட்பமான இராசி. இது ஸ்திரி வகையைச் சார்ந்தது. ஆண்
இனத்தையும் சார்ந்தது. இதன் அதிபதி சூரியன். இந்த இலக்கினத்தில் பிறந்தவன்சிவப்பாகவும் ஒல்லியாகவும் இருப்பான். இந்த இராசி வயிற்றுப் பகுதியைக்குறிக்கும்.

இந்த இராசிக்கு ஆறாமிடம் மகரம். அதன் அதிபதி சனி. எனவே
சகலவிதமான நோய்களும் இந்த இராசிக்கு வரலாம். ஏற்கனவே இலக்கினாதிபதிசூரியன் என்பதால் உடல் சுட்டுக்கொண்டே இருக்கும். பலம் குறைந்தவனாகஇருப்பான். அல்லது வயிற்று தொல்லைகள் நிறைந்தவனாக இருப்பான்.
நல்ல நேரம்
கன்னி
வான மண்டலத்தில் இந்த இராசியைப் பார்த்தால் இரு பெண்கள் நிற்பது
போன்று இருக்கும். இது பெண் இராசியைச் சேர்ந்தது. உபய இராசி. அதிபதி புதன்.இது உடலில் அடி வயிறு, இடை ஆகியவற்றைக் குறிக்கும்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் கும்பம். இதன் அதிபதி சனி. ஆனால் சிம்ம
இலக்கினத்திற்கு சனி படுத்தும் கெடுதல்கள் இந்த இராசிக்கு இராது. ஆனால்
பித்த, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தோன்றலாம்.
நல்ல நேரம்
துலாம்
தராசின் அமைப்பினை உடையது. சர இராசி ஆண் இனத்தைச் சார்ந்தது.
இதன் அதிபதி சுக்கிரன். உடலின் முதுகு பகுதியைக் குறிக்கும்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் மீனமாகும். அதன் அதிபதி குரு. இந்த
குருபகவான் தான் நின்ற இடத்திற்கு தகுந்தாற்போன்று வாத ரோகங்களைத்
தருவார்.
நல்ல நேரம்
விருச்சிகம்
வான மண்டலத்தில் எட்டாவது இராசி. இதனைப் பார்க்கும் போது
தேளின் அமைப்பு போன்று இருக்கும். ஸ்திரி இராசி. பெண் வகையைச் சார்ந்தது.இது உடலின் ஆண் குறியையும், பெண் குறியையும் குறிக்கும் இந்த இராசிநேயர்கள் விளையாட்டாக கடுஞ்சொற்களை கூறுவர். ஆனால் நிலையானமனத்தை பெற்றிருக்க மாட்டார்கள்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் மேஷம். அதிபதி செவ்வாய். அதே நேரம்
இந்த இராசிக்கு இலக்கினாதிபதியும் செவ்வாயே. எனவே இவர்களுக்கு
செவ்வாயினால் ஏற்படும் நோய்கள் குறைவே. ஆனால் இந்த இராசியில்
சந்திரன் இருக்க பிறந்தவர்கள் கபநோய் உடையவர்களாக இருப்பார்கள்.
நல்ல நேரம்
தனுசு
தனுசு என்றால் வில் அம்பு என்று ஒரு பொருள் உண்டு. இந்த இராசி
இத்தகைய அமைப்பை உடையது. இது உபய வகையில் ஆண் வகையைச்
சார்ந்தது. உடலின் தொடையைக் குறிப்பதாகும். இதன் அதிபதி குருபகவான்.
இந்த இராசியின் ஆறாமதிபதி ரிஷபம். அதிபதி சுக்கிரன். ஆனால்
இலக்கினாதிபதி குருவாக இருப்பதால் இவர்களுக்கு மறைமுக நோய்கள்
அதிகம் ஏற்படாமல் சிலேத்ம நோய்களே அதிகம் தோன்றும்.
மகரம்வான மண்டலத்தில் பத்தாவது இராசி. சர இராசியில் பெண் வகையைச்சார்ந்தது. துஷ்டன் என்று கஷ்டப்படுத்துபவனுமான சனிபகவான் இந்த இராசிக்குஅதிபதியாகின்றார்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் மிதுனமாகும். இதன் அதிபதி புதனாவார்.
எனவே இந்த இராசிக்காரர்களுக்கு வாத சம்பந்தமான நோய்கள் வரும். ஆனால்பதன் யாருடன் சேருகிறார் என்பதைப் பொருத்து நோயானது மாறக்கூடும்.
நல்ல நேரம்
கும்பம்
கும்பம் போன்ற அமைப்புடைய இராசி. ஆண் வகையைச் சார்ந்தது.
மகரத்தின் அதிபதியாகிய சனிபகவான் இதற்கு காரகம் வகிக்கிறார். இது உடலில்கணுக்காலை குறிக்கும். இதனை இலக்கனமாகக் கொண்டவர்கள் தன்னையேபுகழ்வார்கள். புpறரை நிந்திப்பார்கள். மிகவும் அமைதியானவர்கள்.
இந்த இராசிக்கு ஆறாமிடம் கடகம். அதன் அதிபதி சந்திரன். எனவே
இவர்களுக்கு பித்தம், வாதம், கபம் சம்பந்தமான நோய்கள் தோன்றும்.
நல்ல நேரம்
மீனம்
வான மண்டலத்தில் கடைசி இராசி. இரண்டு மீன்கள் ஒன்றெயொன்று
பார்ப்பது போல் அதாவது தற்போதைய தூரதர்ஷன் சின்னம் போன்று இருக்கும்.உபய இராசி. பெண் இனம். இது நீர் இராசி.

இந்த இராசிக்கு ஆறாமிடம் சிம்மம். இதன் அதிபதி சூரியன். எனவே உடல்
எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். பித்த சம்மந்தமான நோய்களைக்
கொடுக்கும்.


மேலே சொல்லப்பட்டவை பொதுவானவை. அவ்வப்போது நடக்கும் திசைகளுக்கு
ஏற்ப நோயின் தன்மைகள் மாறுபடக்கூடும்.
இருந்தும் உழைப்பிற்கேற்ற பலன் இருக்காது....இவர்கள் வருடம் 
ஒரு முறை திருப்பதி அல்லது திருநள்ளாரு சென்று வருவது நல்லது....


கருத்துகள் இல்லை: