வியாழன், 6 அக்டோபர், 2011

ஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்

குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும்

சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும்

செவ்வாய் தான் இருக்கும் இடத்தில் இருந்து 4,7,8 ஆம் இடங்களை பார்க்கும்.

மற்ற கிரகங்கள் 7 ஆம் இடத்தை பார்க்கும்.


சந்திரன்,குரு 7ஆம் இடத்தில் இருந்தால் திருமண தடை ஏற்படும் என புலிப்பாணி ஜோதிடம் சொல்கிறது,


சந்திரன்,சுக்கிரன் இணைவு மனைவி மூலம் லாபம் தரும்.ஆனால் ஒழுக்கம் இருக்காது..செக்ஸ் ஆசை அதிகம்.சனி,சுக்கிரன் சேர்க்கையும் சுக்கிரன்,சனி சேர்க்கையும் இதே பலந்தான்.
சந்திரன் ,சனி சேர்க்கை எதை பற்றியும் கவலைப்படாத ஓய்வறியா உழைப்பு.மன சிதறல்,மன நோய் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.

லக்கினத்திற்கு மூன்றாமிடம் காம என்ணங்களை ,ஆசைகளை தூண்டும்.

சந்திரனும்,புதனும் இணைந்திருந்தால் நிறைய பொய் பேசுவார்கள்.அது உண்மை போலவே இருக்கும்.புலவர்களும் இதில் அடக்கம்.கற்பனை உண்டு பண்ணும் கிரக சேர்க்கை.

சந்திரன்,செவ்வாய் இணைவு விவசாயத்தில் நல்ல அதிர்ஷ்டம்,லாபம் உண்டு.

உச்ச கிரகம் பாவ கிரகத்துடன் சேர்ந்தால் பலம் இழக்கும்.

சூரியன்,புதன் இணைந்திருந்தால் நல்ல கவி அறிவு,ஆராய்ச்சி,பதவி பெறும் யோகம் தரும்.
சூரியன்,சுக்கிரன் இணைவு திருமண வாழ்வில் சந்தோசம் இல்லாத நிலை.

சூரியன்,கேது சேர்க்கையுடன் குழந்தை பிறந்தால் தந்தைக்கு பாதிப்பு உண்டாகலாம்.

சந்திரன்,கேது தாய்க்கு பாதிப்பு உண்டாகலாம்..கிரகண தோசம்.

ராகு சந்திரன்,சூரியனுடன் இணைந்தாலும் இதே பலன் தான்.

செவ்வாய்,சுக்கிரன் இணைவு மனைவி மூலம் யோகம்...காம எண்ணங்கள் எப்போதும் இருக்கும்.

குரு,ராகு சேர்க்கை..அயல்நாட்டு யோகம்...நாத்திக எண்ணமும் உண்டு.பெண்களிடம் அதிகம் பழகுவர்.

குரு,கேது சேர்க்கை;ஆன்மீகத்தில் உயர்வு

சனி,கேது ;ஆன்மீக எண்ணம்

சுக்கிரன்,சனி சேர்க்கை;காம எண்ணத்தை செயலில் கொண்டு வருவர்.வாகன வசதி,செல்வ சேர்க்கை உண்டாக்கும்.

சுக்கிரன்,ராகு அல்லது கேது;குடும்ப வாழ்வில் சிக்கல்

செவ்வாய்,சனி;சகோதரனுடன் பகை..ரத்தம் சம்பந்தமான நோய்;நிலம் சம்பந்தமான வில்லங்கம்;

(தொடரும்)

2 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

நல்ல பதிவு .. நன்றி

latestcinema சொன்னது…

சார், வணக்கம் நான் ரசிகன்.நீங்கள் எழுதும் ஜோதிட குறிப்புகள் நன்றாக இருகின்றன. எனக்கு சிறிய சந்தேகம் இருகிறது. அது என்ன வென்றல் .என்னுடைய ஜாதகத்தில் 10-ஆம் இடத்தில், சந்திரன் ,புதன் , சுக்கிரன் ,கேது , செவ்வாய், ஆகிய 5 கிரகங்கள் இருகிறது எது நல்லதா? இல்லை கெட்டதா? இதன் பலன் என்ன ? விடையளிக்கவும்.