செவ்வாய், 20 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மிதுனம்,கடகம்


மிதுனம் ராசி பலன்;

பாரப்பா இன்னொன்று பகரக் கேளு
பஞ்சமத்தில் கருநாகம் அமைந்தவாறும்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோசம் 
தீர்ப்பதற்கு வகைவிவரம் சொல்வேன் மைந்தா
கூரப்பா கோதையுமே அரசு சுத்தி 
குற்றமில்லான கன்னியர்க்கு நன்னீராட்டி
வீரப்பா விலகுமடா நாகதோசம் 
விதியுள்ள ஜென்மனவன் பிறப்பான் பாரே’’

என புலிப்பாணி சித்தர் பாடுகிறார்....

ராகு 5ஆம் இடத்தில் அமரும்போது புத்திர தோசம்,நாகதோசம் என்கிறார்..இது பிறந்த ஜாதகத்தில் ராகு லக்னத்தில் அமர்ந்த பலனாக எடுத்துக்கொள்ளலாம்...பொதுவாக ராசியாகிலும்,லக்னமாக இருந்தாலும் 5ல் ராகு வருகிறார் என்றால் பூர்வபுண்ணிய தோசம்,நாகதோசம் எனலாம்..இதன் பலன் என்ன..? 5ஆம் இடம் அறிவு ஸ்தானம்,முன்னோர் ஸ்தானம்,வெற்றி ஸ்தானம்,லட்சுமி ஸ்தானம் ,தாய்க்கு தன ஸ்தானம்,தகப்பனுக்கு அஷ்டம ஸ்தானம் எனப்படும்...இந்த இடத்தில் ராகு நிழல் கிரகம் அமரும்போது இவை எல்லாம் பாதிக்கப்படும்...குழந்தைகளால் மன நிம்மதி கெடலாம்..சீக்கிரம் நடக்க வேண்டிய காரியம் வீண் அலைச்சல் ஏற்படுத்தி முடியலாம்..பூர்வீக சொத்து இருப்பின் அதன் மூலம் புது பிரச்சினைகள் வரலாம்...வழக்குகள் ஏற்படலாம்...

நாகதோசமாக உண்டாவதால் நாகர் வழிபாடு, காளி வழிபாடு, துர்க்கா பரமேஸ்வரியை ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம்.


கடகம் ராசிபலன்;


பேசுமந்த கேந்திரத்தில் ராகு நிற்க 
பிரபலனாம் ராஜாக்கள் சேவையுள்ளோன்
வீசுகின்ற தனம் படைத்து சீமானாகி 
விதரனையாய் வாழ்ந்திடுவான் இன்னம் கேளு.


என்று 4ஆம் இடத்து ராகு பற்றி புலிப்பாணி சித்தர் புகழ்ந்து தள்ளுகிறார்..ஆனால் இதற்கு திசா புத்தி பலமும் ஏதாவது சுபகிரகத்தின் பார்வையும் அவசியம்...இல்லையேல் வெறும் 4 ஆமிட ராகு உடல்நலன்குறைவையும்,சொத்து சம்பந்தமான வில்லங்கங்களையும் உண்டாக்குவார்..நிம்மதி குறைவும் ,பண விரயமும்,தாயால் மன நிம்மதி கெடுவதும்,வண்டி வாகனங்கள் முதல் குடியிருக்கும் வீடு வரை எதையாவது கழட்டி மாற்றுதல்,பழுது பார்த்தல் என செலவு ஆகிக்கொண்டே இருக்கும்....4ல் ஏற்கனவே சனி இருக்கார்...ராகுவும் சேர்ந்து இருக்கார்..நடந்து போனா க்கூட தடுக்கி விழும் நேரம்..கவனமா இருங்க..வெளியூர் பயணம்,இரவில் பயணம் கவனம் அதிகம் தேவை...திருப்பதி போக முடியாட்டி முருகனை செவ்வாய் தோறும் தரிசனம் செஞ்சிட்டு வாங்க..

கருத்துகள் இல்லை: