ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மேசம்
வரும் 23.12.2012 முதல் ஒன்றரை வருசத்துக்கு,ராகு உங்க ராசிக்கு 7ல் பெயர்ச்சியாகி வருகிறார்..இதுவரை 6ல் இருந்தார்..அமைதியா போய்க்கிட்டு இருந்துச்சு..இப்போ 7ஆம் இடம் அதுவும் அங்க ஏற்கனவே சனி வேறு இருக்கார்..இரண்டு பேரும் சேர்ந்து 7ல் இருக்காங்க.7ஆம் இடம் கூட்டுறவு,நல்லிணக்கம்,காதல்,மண வாழ்க்கை,தொழில் பார்ட்னர்,நட்பு,என்பதை குறிப்பது..இவற்றில் எல்லாம் குளறுபடி,குழப்பம்,பிரச்சினை வரலாம்
பாரப்பா பன்னிரண்டு எட்டு ஏழில்
பலமுள்ள படவரவு அதிலே தோன்ற
வீரப்பா வேல்விழியால் கலகம் மெத்த
விளங்குகின்ற கணவனுக்கு ரோகம் சொல்லு
என புலிப்பாணி முனிவர் பாடியிருக்கிறார்
பெண்ணால் கலகம்,மனைவியால் குதர்க்கம்,மணவாழ்க்கையில் குழப்பம்,கணவனுக்கு நோய்,உடல் பாதிப்பு என்பதே இதன் கருத்தாகும்..
வரும் 23.12.2012 முதல் ஒன்றரை வருசத்துக்கு,ராகு உங்க ராசிக்கு 7ல் பெயர்ச்சியாகி வருகிறார்..இதுவரை 6ல் இருந்தார்..அமைதியா போய்க்கிட்டு இருந்துச்சு..இப்போ 7ஆம் இடம் அதுவும் அங்க ஏற்கனவே சனி வேறு இருக்கார்..இரண்டு பேரும் சேர்ந்து 7ல் இருக்காங்க.7ஆம் இடம் கூட்டுறவு,நல்லிணக்கம்,காதல்,மண
பாரப்பா பன்னிரண்டு எட்டு ஏழில்
பலமுள்ள படவரவு அதிலே தோன்ற
வீரப்பா வேல்விழியால் கலகம் மெத்த
விளங்குகின்ற கணவனுக்கு ரோகம் சொல்லு
என புலிப்பாணி முனிவர் பாடியிருக்கிறார்
பெண்ணால் கலகம்,மனைவியால் குதர்க்கம்,மணவாழ்க்கையில் குழப்பம்,கணவனுக்கு நோய்,உடல் பாதிப்பு என்பதே இதன் கருத்தாகும்..
-----------------------------------
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;ரிசபம்
திருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 அன்று மாலை விருச்சிகம் ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார்..
ரிசபம் ராசிக்கு இது 6 வது ருண ரோக ஸ்தானம் ஆகும்..ராகு இங்கு மறைந்துவிடுவது உங்களுக்கு
யோகமான காலம் எனலாம்..அதாவது 6ல் ராகு 12ல் கேது...இருக்கிறார்கள் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அல்லவா.அதன் படி இது நல்ல பலன்களையே கொடுக்கும்..கடன் தொல்லைகள்,உடல் பாதிப்புகள்,மனக்குழப்பங்கள் நீங்கும்..குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்..பணம் தாராளமாக வந்து சேரும் எதிரிகள் பிரச்சினை இருக்காது...
கருராகு ஆறில் நிற்க
கடுகியே பகைநோய் ஏகும்
வருவிடர் நில்லாதோடும்
வன்மையாய் வெற்றி சேரும்
பகை ருணரோக ஸ்தானமான 6ல் 12ல் ராகு கேது வருவதால் விரோதம்,விவகரம்,வழக்கு,போட்டி,எதிர்ப்பு ஆகியவற்றை முடக்கியும் முறியடித்தும் வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்கு முடியும் என புலிப்பாணி முனிவர் ஜோதிடம் சொல்கிறது!!
கருராகு ஆறில் நிற்க
கடுகியே பகைநோய் ஏகும்
வருவிடர் நில்லாதோடும்
வன்மையாய் வெற்றி சேரும்
பகை ருணரோக ஸ்தானமான 6ல் 12ல் ராகு கேது வருவதால் விரோதம்,விவகரம்,வழக்கு,போட்டி,எதிர்ப்பு ஆகியவற்றை முடக்கியும் முறியடித்தும் வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்கு முடியும் என புலிப்பாணி முனிவர் ஜோதிடம் சொல்கிறது!!
1 கருத்து:
நல்ல குறிப்புகள். மிக்க நன்றி
கருத்துரையிடுக