செவ்வாய், 20 நவம்பர், 2012

திருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்

திருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்


திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவரது ஜாதகத்தையும் ஜோசியரிடம் காண்பித்து சிலர் பொருத்தம் பார்ப்பார்கள்...ராசிக்கட்டமும் பொருந்தனும்..இருவருக்கும் நல்ல திசையும் நடக்கணும் என நினைப்பவர்கள் இவர்கள்..

சிலர் பெண் நட்சத்திரமும்,பையன் நட்சத்திரமும் மட்டும் சொல்லி பொருந்துமா சார் என்பார்கள்...இவர்கள் நட்சத்திர பொருத்தம் இருந்தால் போதும் ராசிக்கட்டத்தையெல்லாம் பார்த்தா அதுல கோளாறு...இதுல கோளாறு என சொல்லிடுவார்..அப்புறம் நல்ல இடம் தட்டி போயிடும் என அவசரத்தில் இருப்பார்கள்...ஓகேன்னு சொன்னா போதும்..ஜோசியத்தை சும்மா ஃபார்மலிட்டிக்கு ஊறுகாய் போல தொட்டுக்கொள்பவர்கள் இவர்கள்..இது மட்டும் எதுக்கு..? அதையும் இவர்கள் விட்டுடலாம்..படிப்புக்கு படிப்பு,வேலைக்கு வேலை ,சொத்து சொத்து என பொருத்தம் பார்த்தாலே போதுமே..இவர்களை போன்ற ஆட்களுக்கு..?

கோடிக்கணக்குல பணம் இருக்கு பையனுக்கு...என கிளி போல பொண்ணை அவனுக்கு கட்டி கொடுத்தார்கள்..பணம் இருக்கு..ஆனா ஆம்பளைக்கு முக்கியமானது அவன்கிட்ட இல்ல..அந்த பொண்ணுக்கு மகாராணி மாதிரி எல்லா சுகமும் கிடைச்சது..ஆனா பருவ பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய சுகம் கிடைக்கல..விளைவு...அவங்க வீட்டு கார் டிரைவர் தான் அதை கொடுத்தான்....என்ன செய்றது..நிறைய வீடுகளில் இன்று அதுதான் நிலைமை..

உண்மையான காதல் 90 சதவீதம் தோற்று விடுகிறது..ஆனால் கள்ளக்காதல் 90 சதவீதம் ஜெயித்து விடுகிறது என பேஸ்புக்கில் டிமிட்ரி எனும் நண்பர் எழுதியிருந்தார்....பெரும்பாலான கள்ளக்காதல்களுக்கு முக்கிய காரணம் உடல்,மன பொருத்தம் இல்லாத தம்பதிகளை சேர்த்து வைப்பதுதான்...!!

யோனி பொருத்தம் என்பது இருவரது தாம்பத்ய சுகம் பற்றி உடலுறவு நிலை பற்றி சொல்லக்கூடிய ஜோதிடத்தில் முக்கிய பொருத்தம் ஆகும்...ராசி பொருத்தம்,கண பொருத்தம் எல்லாம் இருவருக்கும் மன ரீதியாக உணர்வு ரீதியாக ஒத்து போவார்களா என நம் முன்னோர் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களையும் ஆய்வு செய்து எழுதியது ஆகும்..

இருப்பினும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று ஒவ்வொரு ஊரிலும் ஓராயிரம் பேர் இருக்கிறார்கள்...எனவே பிறந்த ஜாதகத்தில் லக்னத்தையும்,சுக்கிரனையும்,செவ்வாயையும்,7ஆம் இடத்தையும் ஆய்வு செய்து இருவர் ஜாதகத்தில் நாலாம் இடம் எனும் சுக ஸ்தானம்,ஒழுக்க ஸ்தானம் எப்படி...? இருவரின் தாய்,தந்தையர் நிலை அறிந்து திருமணம் செய்வது நல்லது..

ஆணுக்கு 3 ஆம் இடம்..வீரியம்..அவன் உடலுறவு கொள்ள தகுதியானவன் தானா கண்டு பிடிக்கும் இடமாக இந்த ஸ்தானத்தை ஜோதிடம் சொல்கிறது.எட்டாமிடம் ஆண் உறுப்பு பற்றி சொல்வது எட்டு கெட்டால் கொட்டை போச்சு..என கிராமத்தில் சொல்வார்கள்....இந்த ஸ்தானங்கள் ஆண் ஜாதகத்தில் நன்றாக இருக்கா என பார்த்துதான் பெண்ணை கட்டிக்கொடுக்கணும்..

பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் இடத்தை கொண்டு ஒழுக்க நிலையை கண்டறியலாம்...தாயை போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்கள்...தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள்..அது போல பெண் ஜாதகத்தில் நான்காம் இடம் அப்பெண்ணின் ஒழுக்கத்தையும் சொல்கிறது அவளது அம்மாவை பற்றியும் சொல்கிறது...அது போல செவ்வாய் நீசம்,வக்ரம் இல்லாமல் ராகு,கேதுவுடன் சேராமல் இருக்கணும்..சேர்ந்திருந்தா..? கணவன் டம்மிதான்..

திருமண பொருத்தம் பார்க்கும்போது எத்தனையோ உண்மைகள் வெளிப்படும்..அதையெல்லாம் தெரிவிக்காமல் சில ஜோதிடர்கள் ,இது ஒரு ஓட்டை வாய்..இது ஒரு உளறுவாய் இரண்டும் சேரட்டும்..என்றோ...இது ஒரு ஊர் சுத்தி ,இது ஒரு ஊரை முழுங்கி இரண்டும் சேரட்டும் நமக்கு என்ன..என மனதுக்குள் நினைத்தபடி சேர்த்து வைப்பார்கள்...அருமையான பொருத்தம் என்றும் சொல்லி விடுவர்..

ஒரு ஜோசியரிடம் பேசியபோது..அவர் சொல்றார்..அந்த பொண்ணுக்கு கல்யாணத்து முன்னாடியே கசமுசா ஆகிடுச்சி ஜாதகத்தை பார்த்தா தெரியுது...அவன் ஜாதகத்தை பார்த்தா தெருவுல இரண்டு சின்ன வீடு இருக்கும் போலிருக்கு..இந்த இரண்டும் சேர்ந்தா இதுக்கு தெரியாம அது போகும் அதுக்கு தெரியாம இது போகும்..உன்னை நான் கண்டுக்க மாட்டேன்...என்னை நீ கண்டுக்காதே னு தான் பொழப்பு ஓடும் நல்லா தெரியுது ...அதனால அருமையான பொருத்தம்னு சொல்லி அனுப்பிட்டேன் என்றார்..

ஜோதிடர்கள் காட்டும் அலட்சியம் சில அழகான,தெய்வாம்சம் பொருந்திய வர்களையும், சாக்கடை போன்றவர்களுடன் கலக்க செய்து விடுகிறது!!



கருத்துகள் இல்லை: