ஆவி ஜோசியர் சொன்னது பலித்தது
இந்த வாரம் குமுதத்தில் எங்கள் (சித்தோடு)ஊரில் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த ஆவி ஜோசியர் சாமிநாதன் பற்றி செய்தி வந்திருக்கிறது...1984ல் ஒருவருக்கு ஆவி மூலம் ஜோதிடம் கேட்டு பலன் சொல்லி இருக்கிறார்..இன்னும் 12 வருடம் கழித்து நீ சினிமா துறைக்கு செல்வாய்...அதன் பின் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் நீ கொல்லப்படுவாய் என சொல்லி இருக்கிறார்..ஜோதிடம் கேட்டவருக்கு ஆல்ப்ஸ் மலை எங்கிருக்கிறது என்பது கூட அப்போது தெரியாதாம்..சரியாக 15 வருடம் கழித்து அவர் சினிமாவில் கனவே கலையாதே என்னும் சினிமா மூலம் நுழைந்திருக்கிறார்..அவர் பெயர் தேவி பாரதி எழுத்தாளர்...அதே போல போனமாதம் சுவிட்சர்லாந்தும் சென்றிருக்கிறார்...அங்குள்ள ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் தான் தங்கி இருந்திருக்கிறார்..நல்லவேளை கொல்லப்படவில்லை..பேட்டி கொடுத்திருக்கிறார்;-)
------------------
சில பேர் பூர்வீக சொத்து,தந்தை,முப்பாட்டன் சொத்து வெச்சி பொழச்சுக்கிறாங்க...இதுதான் பாக்கிய ஸ்தானம் நல்லாருக்கணும் என்பது..(உதாரணம் கலைஞர் குடும்பம் ;-))சில பேர் சுயமா சம்பாதிச்சு பொழச்சுக்குவாங்க...உதாரணம் கலைஞர் தான் ;) இதுக்கு லக்னாதிபதி,தனாதிபதி நல்லாருக்கணும்..தன்னம்பிக்கையா ல் ஜெயிப்பவர்கள் இவர்கள்..இவர்கள் தான் தன்னம்பிக்கை ஓவராகி போய் சாமியாவது பூதமாவது என்பார்கள்...சில பேர் மனைவி வந்த யோகத்
தால் முன்னேறுவார்கள் 7ஆம் இடம்,சுக்கிரன் நல்லாருக்கணும்..எல்லாம் என் பொண்டாட்டி ராசி என்பார்கள்...சில பேர் குழந்தையால் முன்னேறுவார்கள் என் பொண்ணு பொறந்தா என் கஷ்டமெல்லாம் தீர்ந்துடுச்சி என்பார்கள்...சில பேர்க்கு இரண்டவது குழந்தை பிறந்த பின் முன்னேற்றம் உண்டாகும்...இரண்டாவது பொண்ணுக்கு பின்னாடி தான் இவ்வளவு சொத்து சம்பாதிச்சேன் என்பார்கள்...சிலருக்கு இது எதுவுமே கிடைக்காது...அவர்கள்தான் கடைசி வரை துன்பத்தில் வாடுகிறார்கள்..விதி,மதி,பதி கெட்டவர்கள்!!
---------------------------
ஒவ்வொரு கிரகத்தின் கதிர் வீச்சும் ,ஈர்ப்பு சக்தியும்,பூமியில் கூடுதல் குறைதல் பொறுத்து அச்சமயத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல்,மூளை,செல்களில் பதிவாகி குணாதிசயமாக மாறுகின்றன...சுக்கிரன் ,குரு,செவ்வாய் கிரகங்கள் நாம் பிறக்கும்போது பூமியில் எவ்வளவு கதிர்வீச்சின் அளவு இருந்ததோ அதை பொறுத்து நம் ஜாதக கட்டத்தில் கிரக பலம் குறிக்கப்படுகிறது...அதை பொறுத்து நம் வாழ்வில் அந்த கிரகங்களின் காரகத்துவம் கூடும் குறையும்..சந்திரன் தாயின் நிலை குறிக்கும்...சூரியன் தந்தை நிலை குறிக்கும் செவ்வாய் சகோதரன் நிலை புதன் தாய்மாமன் குறிக்கும்..இவர்களுடன் உங்கள் பாசம்,ஒற்றுமை எப்படி இருக்கும்..நாம் பிறந்த பின் இவர்கள் நிலை எப்படி இருக்கும் என அறிய முடியும்..
--------------------
செவ்வாய் கிரகத்தின் நிலை பொறுத்து ஒரு பெண்ணின் கணவன் நிலை அறிய முடியும்..சுக்கிரன் அமைப்பை பொறுத்து மனைவி நிலை அறிய முடியும்...நம்மால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்...பணம் தங்குமா அழியுமா...சொத்துக்கள் சேர்க்கை உண்டா இல்லையா என்பதை லக்னத்துக்கு இரண்டாம் அதிபதியையும்,சுக்கிரனையும் பார்த்து பலன் சொல்லலாம்...
1 கருத்து:
நல்ல தகவல்கள்! பயனுள்ள பகிர்வு! நன்றி!
கருத்துரையிடுக