வியாழன், 15 நவம்பர், 2012

நாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..?-மகா பெரியவர் காட்டும் ஆதாரம்


மெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாக லோகம்தான்

இதயம் பேசுகிறது" மணியன் ஒருமுறை மெக்ஸிகோ செல்ல ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கும்போது, பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். எப்போதுமே வெளிநாட்டுப் பயணம் போகும்முன் பெரியவாளை தர்சனம் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

"மெக்ஸிகோ போறதுக்கான வேலை இருக்கு... பெரியவா அனுக்ரகம் பண்ணனும்" வினயமாக மணியன் நமஸ்கரித்தார்.

"க்ஷேமமா போயிட்டு வா! இந்த.....பூகோள உருண்டையை எடுத்து பாத்திருக்கியோ? இல்லேன்னா எடுத்துப் பாரு! இந்தியாவுக்கு நேர் கீழ நீ போகப்போற நாடு இருக்கும்!" மணியனுக்கோ ஒரே வியப்பு! இதுவரை அவர் அப்படி ஒரு கண்ணோட்டத்தில் க்ளோபைப் பார்த்ததில்லை.

"நம்ம புராண இதிஹாசங்கள், ராஜா கதைகள்ள எல்லாம் பாதாளலோகம்...ன்னு சொல்றோமே! அப்டி வெச்சுக்கோ! பாதாள லோகத்லதான் நாகலோகம் இருக்கு. நாகர் வழிபாடு உண்டு, நரபலி உண்டு...நம்மளையெல்லĬ 6;ம் விட ரொம்ப பழமையான நாகரீக ஆட்சி முறை, இதுமாதிரி எல்லாமே உண்டு..." மணியன் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டார்!

"...நமக்கு உலோகங்களைப் பத்தின நாகரீகம் தெரியறதுக்கு முன்னாலேயே அவாளுக்கு தெரிஞ்சிருக்கு! சுமார் ரெண்டாயிரம் வர்ஷத்துக்கு முன்னாலேயே ரொம்ப நாகரீகத்தோட இருந்திருக்கா...."

ஆசிர்வதித்து அனுப்பினார். மெக்ஸிகோ நாட்டின் தேசீயச் சின்னமே பாம்பை அடக்கும் கருடன்தான்! அங்கே இன்றும் நாகங்களை வழிபடுவார்கள். பிரமிட் கோபுரங்களில் இறக்கைகள் கொண்ட பாம்பு வடிவங்களும், கண் உள்ள இடத்தில் கிளிஞ்சல்களை வைத்து தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். மழையை உண்டாக்கும் தேவனுக்கும் இங்கே உருவங்கள் உண்டு. ஹிந்துக்களைப் போல், இவர்களும் இயற்கையை வழிபடுகிறார்கள். 9000 வர்ஷங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் வில் அம்பு, மண், உலோக பாத்திரங்களை உபயோகித்து இருக்கிறார்கள். 3000 வர்ஷங்களுக்கு முன்பே "காலண்டரி" என்ற அட்டவணையை உபயோகித்து இருக்கிறார்கள். மெக்ஸிகோவின் ஆதிகுடிமக்கள் [ரெட் இண்டியன்ஸ்] சூரியனை அடிப்படையாக வைத்து 20 நாளுக்கு ஒன்றாக 18 மாசங்களை உருவாக்கினார்கள். ஹிந்துக்களைப் போலவே சூரியன், பூமி, ஜலம், வாயு,அக்னியை வழிபடுகிறார்கள். இதற்கான பண்டிகைகளும் மாசாமாசம் உண்டு. கலைகளுக்காக ஒரு பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். 20 லக்ஷம் மக்கள் 1000 வர்ஷங்களுக்கு முன்னால் நிர்மாணித்த "மாயன் " புதைவுகளில் எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள்தான்!


மாயன் நாகரீகத்தில் உள்ள கலை, கலாச்சாரம் எல்லாமே மத அடிப்படையில் உண்டானதுதான். பிறப்புக்கு முன்னும் பின்னும் ஆத்மாவின் நிலை என்று ஒன்று உண்டு என்று அவர்களும் நம்பினார்கள். உலகில் வாழும்போது உண்டாகும் வெற்றி, தோல்வி, வாழ்கை முறை எல்லாமே க்ரஹங்களின் நிலையைப் பொருத்தது என்று நம்பினார்கள்.

மணியனின் மெக்ஸிகோ பயணக் கட்டுரையைப் படித்த ஒரு அன்பர் "மெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாகலோகம்தான்..ன்னு பெரியவா சொன்னாளே! அது அப்டியே இருக்கு போல இருக்கே!" என்றார்.

"ஆமா...அது ரொம்ப நெஜம். அதோட,நம்மளோட சனாதன தர்மம் உலக அளவில் எல்லா இடத்திலும் இருந்தது.ன்னு கூட பெரியவாள்ளாம் சொல்லுவா. அது நெஜம்தான்னு புரிஞ்சுண்டேன்" என்றார் மணியன்.
 

2 கருத்துகள்:

arul சொன்னது…

very informative article

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஆச்சர்யமான தகவல்! பகிர்வுக்கு நன்றி!