ராகு கேது பெயர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராகு கேது பெயர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 மே, 2018

நாக தோசம் போக்கும் பரிகார கோயில்கள்

ராகு தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள்
 
தமிழ்நாட்டில் ராகு - கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் உள்ளது. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

*1. ஸ்ரீகாளஹஸ்தி* : இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை.

மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது.

மேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

ராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.

*2. ராமேஸ்வரம்* : திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங் களிலும் ராகு ஈசனை வழிபட்டுள் ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.

*3. திருப்பாம்புரம்* : அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.

*4. நாகர்கோவில்* : இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.

*5. திருச்செங்கோடு* : ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.

*6. பேரையூர்* : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது.

கோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன.

மேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.

*7. ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி* : புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம்.

ஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.

*8. ஸ்ரீஅரியநாச்சியம்மன்* : சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சி யம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.

*9. காளிவழிபாடு* : மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

*10. பஞ்சமிதிதி* : நாகங் களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார்.

பஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதை களை வணங்கினால் நாக தோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.

*11. ஸ்ரீரங்கம்* : ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன் களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத் தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும்.

*12. ஆதிசேஷன்* : பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் சென்னை திருவொற்றியூர்.

-- 1) இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

-- 2) கும்ப கோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிரா மங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

*13. கும்பகோணம்* : - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை
அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

*14. சிவகங்கை* : அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன் ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும்.

*15 காஞ்சிபுரம்* : - ஸ்ரீசித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.

*16. ஸ்ரீவாஞ்சியம்* : நன்னிலம் - குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி நாகநாத சுவாமியையும் நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

*17. விருத்தாசலத்திற்கு தெற்கே* சுமார் 7கி.மீ தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் *கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை* வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷங்கள் விலகும்.

*18. திருப்பத்தூர்* - திண்டுக்கல் சாலையில் சிங்கம்புனரிக்கு அருகில் உள்ள ஸ்தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங் குன்றீசரை தேன் - தினைமாவு கலந்து படைத்து வழிபடவும்.

*19. சென்னை மைலாப்பூரில்* கோயில் கொண்டுள்ள அருள்மிகு முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

*20. திருச்சி* சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.

*21. சர்ப்பதோஷமுள்ளவர்கள்* : பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும்.

நாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம் மகப்பேறு சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.

*22. திருவண்ணாமலை* மாவட்டம் செஞ்சி அருகில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வணங்கி வழிபட்டு வர நினைத்ததை சாதிப்பீர்.

*23. திருத்தணிக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு* இங்கு சென்று முஞ்சிகேசமுனிவரும் கார்கோடகனும் (நாகம்) வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர வளம் பெருகும்.

புதன், 26 ஜூலை, 2017

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள் 2017-2019

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள் 2017-2019 மேசம் முதல் சிம்மம் வரை



வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி வருகின்ற 27.7.2017 அன்று நடக்கிறது..சிம்ம ராசியில் இருந்து ராகு பெயர்ச்சியாகி கடகம் ராசிக்கு செல்கிறார் கேது கும்பம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு செல்கிறார்..திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி  ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.


.இதன் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக மட்டும் பார்ப்போம்...

பொதுவாக ராகு கேது என்பது கிரகங்கள் இல்லை...இவை நிழல் கிரகங்கள் எனப்படும்...சூரியன்,சந்திரனையே மறைக்கும் நிழல்கள்...எல்லா கிரகங்களையும் சூரியனும் சந்திரனும் வெற்றி கொள்வர்..இவர்களை ராகு கேது வெல்வர்..சூரியனுடன் ராகு கேது ஜாதகத்தில் இருந்தால் பிதுர் தோசம் என சொல்வது வழக்கம்..தந்தை வர்க்கத்துக்கு ஆகாது.சந்திரனுடன் இருந்தால் மாதுரு தோசம்...தாய் வர்க்கத்துக்கு ஆகாது.

ராகு கேதுக்கள் ஜாதகத்தில் நன்றாக அமைந்தால் அதன் திசாபுத்தியில் நல்ல பலன்களை கொடுப்பர் ராகுவை போல கொடுப்பார் இல்லை கேதுவை போல கெடுப்பார் இல்லை இருவரும் எதிரெதிர் குணங்கள்..ராகு முரட்டுதனம் ,துணிச்சலால் நிறைய சம்பாதித்து கொடுத்துவிடுவார்.. கேது பயம் தாழ்வு மனப்பான்மை விரக்தியால் வாழ்வில் துவள வைத்துவிடுவார்..கேது தனிமையில் அமர்ந்து வாழ்க்கை அனுபவத்தை யோசித்து யோசித்து முக்தி அடைய செய்பவர்...ராகு ஆராய்ச்சி,செயல்,வேகம்,குறுக்கு வழியில் பயணிக்க வைத்து வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வைக்கும் போகக்காரகன்..அவருக்கு நேர்வழி, குறுக்கு வழி பற்றி கவலை இல்லை...

ராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் ஜாதகத்தில் அவர்கள் இருக்குமிடம் நிழல் போல மறையும்..லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகர் இருளில் மறைந்தார்போல தன் வலிமை அறியாமல் இருப்பார்...திறமை இருந்தும் வெற்றி பெற முடியாமல் தவிப்பார்...இது போல ராகு கேதுக்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த ஸ்தானம் பாதிக்கப்படும்...ராகு வீரியம் எனில் கேது பலவீனம்...4ல் கேது இருப்பின் உடல் ஆரோக்கியம் பலவீனம்...4ல் ராகு இருப்பின் அதிக ஒழுக்க குறைப்பாட்டை உண்டாக்கி கெட்ட பெயரை உண்டாக்கும்...கேது படுக்க வைக்கும் எனில் ராகு ஊர் சுத்த வைக்கும்.

இந்த ராகு கேது பெயர்ச்சியால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் தரும் என பார்த்தால் காலப்புருச லக்னத்துக்கு பாக்யத்துக்கு எட்டில் ராகு வருவதால் மதம் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் உண்டாக வாய்ப்புகள் அதிகம்..அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்சினை பெரிய அளவில் மாறும்..

ராகு கேதுவை பொறுத்தவரை ஜாதகத்தில் சரி கோட்சாரத்திலும் சரி 3,6,8,10,11 ,12ல் இருப்பது நல்லது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது நிழல் கிரகங்கள் மறைந்து இருப்பது நல்ல பலனை தரும்...சுபர் பார்வையில் இருந்தால் நல்லது. சுபருடன் சேர்ந்தால் கெட்டது இதுதான் அடிப்படை.இதன் அடிப்படையில் மட்டும் பலன்கள் கொடுத்திருக்கிறேன்.

ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை வருவதாகும்..ராகு கேதுக்கள் பின்னால் சுற்றுபவை..முன் ராசிக்கு செல்ல மாட்டார்கள் ...அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகாமல் பின்னுள்ள ராசிக்கு செல்வார்கள்.ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் பலன் கொடுப்பர்..

மேசம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்..

மேசம் - உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் ராகுவும் பத்தாம் ராசிக்கு கேதுவும் மாற இருக்கிறார்கள் ..நான்கில் ராகு சுகத்தை கெடுக்கும் தாய்க்கு மருத்துவ செலவினம் தரும்...பத்தில் வரும் கேது தொழிலில் கொஞ்சம் பாதிப்பு தருவதால்  புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது .சொத்துக்கள் சார்ந்த வில்லங்கம்,சிக்கல் உண்டாக்கும் என்பதால் வீடு ,வாகனம் சார்ந்த விசயத்தில் கூடுதல் கவனம் தேவை.

அலைச்சல் அதிகரிக்கும்..பண வரவில் குறை இருக்காது....வரும் டிசம்பர் மாதத்துடன் அஷ்டம சனி முடிகிறது...ஆவணி 10 முதல் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு யோகமாகவே இருக்கிறது...இதனால் பல நல்ல மாற்ரங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் எதிர்பார்க்கலாம் பல பிரச்சினைகள் இந்த வருடக்கடைசிக்குள் தீரும்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வீட்டில் சுபகாரியம் நடைபெறும்..செவ்வாய் தோறும் முருகன் வழிபாடு நல்லது.

ரிசபம் -உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது ஒன்பதாம் இடத்துக்கு மாறுகிறார்..மூன்றாமிடத்து ராகு யோகமானது என பழைய ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன...மூன்றில் ராகு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பெரிய லாபங்களை அடைவீர்கள்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்..கேது ஒன்பதாவது ராசிக்கு வருகிறார்..

 இது தந்தைக்கு மருத்துவ செலவினத்தை உண்டாக்கும்..மகான்களின் ஆசி கிடைக்கும் நீண்ட நாள் விரும்பிய தீர்த்த யாத்திரைக்கு செல்வீர்கள்.பண வரவு திருப்தி தரும்.அஷ்டம சனி பற்றி பெரிதாக கவலை வேண்டாம்...சுக்கிரன் ராசியினருக்கு பெரிதாக சனி கெடுதல் செய்ய மாட்டார்..குரு சாதகமற்ற நிலையில்தான் வருகிறார் உடல்நிலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.நம்பியவர்களால் ஏமாற்றம் உண்டாகும் காலம் என்பதால் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்களால் சிக்கல்கள் நேரும் என்பதால் பங்குதாரர்களிடன் கவனம் தேவை.

 புதிய ஆட்களிடம் எசரிக்கையாக இருங்கள் வீட்டில் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள் மனைவி /கணவனுக்கு உடல் ஆரோக்கியம் பாதித்து மருத்துவ செலவு செய்யக்கூடும்..புதிதாக இடம் வீடு சொத்துக்கள் சிலர் வாங்குவர் அஷ்டம சனி வரும்போது பண முடக்கம் இப்படி சுப செலவாக செய்து கொண்டால் நல்லது...தான் சகோதரர்கள் வழியில் விரய செலவுகள் காணப்படும்... பெளர்ணமி தினத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு நல்லது

மிதுனம் -உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்துக்கு ராகு வருகிறார்..கேது ராசிக்கு எட்டில் வருகிறார் ..இது வாழ்க்கை துணைக்கு அதிக பாதிப்புகளை தரும்...பெரிய மருத்துவ சிகிச்சை ஒன்று காத்திருக்கிறது...குடும்பத்தில் சின்ன வாக்குவாதங்கள் பெரிய பிரச்சினையில் கொண்டு போய் முடிக்கும்.

தன ஸ்தானத்தில் ராகு வருவது கடக ராகுவாக வருவதால் வருமானத்தை பல மடங்கு பெருக்கும்.அதே சமயம் உங்கள் பேச்சால் பல குழப்பங்களும் குடும்பத்தில் உண்டாக்கும்.பணம் நிறைய வரும்.. தண்ட செலவும் அதே அளவில் வரும்.காரணம் ராகு நிழல் கிரகம்...

தன ஸ்தானத்தை நிழல் போல் மறைப்பதால் சேமிப்பில் இருந்த பணத்துக்கு ஆபத்து உண்டாக்கும் காலம் .நம்பிக்கையான முதலீடுகள் பிரச்சினை இல்லை..தந்தைக்கு விரயத்தில் கேது வருவதால் தந்தைக்கு அதிக மருத்துவ செலவுகள் உண்டாக்கும் எட்டாம் இட கேது சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் தரும் பெண்களுக்கு கர்ப்பபை சார்ந்த பாதிப்புகளை தரும்.

ராசிக்கு அஷ்டம சனி ஏழரை சனி எதுவும் இல்லை.குருபெயர்ச்சியும் நன்றாக இருக்கிறது அதனால் பெரிய அளவில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை பாதிக்காது.சனி தோறும் பெருமாளை வழிபடுவதும் கண்ணனை வழிபடுவதும் நல்லது.

கடகம் -உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் ராகு வருவது நல்ல பலன் என சொல்ல இயலாது. மனக்குழப்பம்,கவலை அதிகரிக்கும்.. உங்கள் திறமைகள் மதிக்கப்படாது.நம் சொல் அம்பலத்தில் ஏறவில்லையே என்ற வருத்தம் உண்டாக்கும்.தன்னம்பிக்கை, தைரியம் குறைவு உண்டாக்கும் காலம் என்பதால் பிறர் விமர்சனங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்...பணம் கொடுத்தால் திரும்பாது. பணம் வாங்கினால் கட்டுவது கடினம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.பாசமாக பழகுவதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை.உண்மையாக அன்பு காட்டினால் அவர்களுக்கு எதையும் செய்வீர்கள் விட்டு கொடுப்போர் கெட்டுப்போவதில்லை என்பீர்கள்...மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டீர்கள் ஆனால் உங்களின் இந்த நல்ல குணத்தையே அசைத்து பார்க்கும்படி வருகிறது ஜென்ம ராகு.

ராசிக்கு ஜென்மத்தில் ராகு வருவது அதிக பதட்டம்,முன்கோபத்தை உண்டாக்கும்..உணர்ச்சிவசப்பட்டு பிறர் மனம் நோகும்படி பேசிவிட நேரும் பேச்சில் கவனம் தேவை.கடகம் சந்திரனின் ராசி அதனுடன் ராகு சேரும்போது கிரகண தோசம் ஆகிறது.இதனால் குழப்பங்கள் தடைகள் ,கெட்ட பெயர் உண்டாகிறது.

ராசிக்கு எழரை சனி ,அஷ்டம சனி இல்லை அதனால் பெரிய பாதிப்பு இல்லை.குருபெயர்ச்சியும் உங்க ராசிக்கு ஆறுதல் தரும்படி இருப்பதால் கவலை வேண்டாம்.7ஆம் இடத்துக்கு வரும் கேது குடும்பத்தில் குழப்பத்தையும் வாக்குவாதத்தை உண்டாக்குவார் மனைவிக்கு மருத்துவ செலவை உண்டாக்குவார் நண்பர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.கவனமாக செயல்படுங்கள்...வெள்ளிதோறும் அம்பாளை வழிபடுங்கள்



சிம்மம் -இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் இருந்து வந்த ராகு விலகிவிட்டார் ..இப்பவாவது வழிவிட்டாயே என நிம்மதி பெருமூச்சு விடும்படி இனி அடுத்தடுத்து நல்ல பலன்கள் நடக்கும்..புதிதாக சொத்து ஒன்றை வாங்கப்போகிறீர்கள் இடம்,வீடு ,வாகனம் வாங்கும் யோகம் விரைவில் வர இருக்கிறது...

ராசியில் நின்ற ராகு உங்கள் திறமைகளை பிறர் குறைத்து மதிப்பிட வைத்துவிட்டது சில அவமான நிகழ்வுகள் ,மன அழுத்தம்,கவலைகளை கடந்த காலங்களில் ஜென்ம ராகு உண்டாக்கியது.இனி அந்த மனக்கஷ்டங்கள் அனைத்தும் விலகும்..ராசிக்கு 12ல் செல்லும் ராகு திடீர் அதிர்ஷ்டங்களை உண்டாக்குவார் பண வரவை அதிகபடுத்துவார் ..பயம் விலகி துணிச்சல் தைரியம் உண்டாக்குவார் ..

இழந்த நட்புகள் ,பகையான உறவுகள் ஒன்று சேர்வர்.நீண்ட நாள் வராது இருந்து வந்த தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்..தொழில் செய்யுமிடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.6ஆம் ராசிக்கு செல்லும் கேது சில உடல் பாதிப்புகள் தந்தாலும் அவை விரைவில் குணமாகும்.வருமானம் அதிகரிப்[பதால் சேமிப்புகள் உண்டாகும் காலம்..சிவ வழிபாடு சிறப்பு தரும்.






திங்கள், 24 மார்ச், 2014

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன்

ராகு கேது பெயர்ச்சி 2014 ஆம் ஆண்டில் ஜெய வருசம் ஆனி மாதம் 13.7.2014 அன்று இரவு 9 மணிக்கு உண்டாகிறது....ராகு கன்னி ராசிக்கும் கேது மீனம் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்...இதனால் 12 ராசியினருக்கும் என்ன பலன் உண்டாகும் என பார்ப்போம்.

மேசம்;இதுவரை மேசம் ராசியில் இருந்த கேது மீனம் ராசிக்கு போகிறார் ராசியில் இதுவரை கேது அமர்ந்து உங்களை படாத பாடு படுத்தி இருப்பார் மனக்குழப்பம்,டென்சன் உடல் ஆரோக்கிய பாதிப்பு,காரிய தடை ,வருமான தடை உண்டாக்கி இருப்பார் சிலருக்கு தொழில் ,பணி முடங்கி இருக்கும்..என்னன்னே தெரியல வேலையை விட்டு நின்னுக்கோன்னு சொல்லிட்டாங்க என புலம்பியவர்கள் அநேகம்..இனி பிரச்சினை இல்லை கேது ராசிக்கு 12ல் மறைவதால் நல்லதே நடக்கும்.ராசிக்கு 6ல் மறையும் ராகு எதிரிகள் பிரச்சினை இல்லாமல் செய்யும்.கடன் தீரும்.

ரிசபம்;ராசிக்கு இதுவரை 12ல் கேது இருந்தார் 6ல் ராகு இருந்தனர் மறைந்திருந்த இருவராலும் இதுவரை பாதிப்பு இல்லை..இப்போது ராகு உங்க ராசிக்கு 5ஆம் இடத்துக்கு வருகிறார் 5ல் ராகு இருந்தால் குழந்தைகளால் விரய செலவு,பாதிப்பு,காரிய த்டை உண்டாக்கும்..பூர்வீகம் சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும்..11ல் இருக்கும் கேதுவால் லாபத்தில் தடங்கல் உண்டாக்கும்..

மிதுனம் ;மிதுனம் ராசிக்கு 10 கேது வருகிறார் தொழில் ஸ்தானம் ஆகிவிட்டதால் பணி செய்யுமிடத்தில் சங்கடங்கள் வரும் அதிக வேலைப்பளு அலைச்சல் உண்டாக்கும் சிலருக்கு இடமாறுதல் வரலாம்..ராசிக்கு 4ல் ராகு வருவதால் உடல்நலனில் கவனம் தேவை..சொத்துக்கள் சம்பந்தமான செலவுகள் ,பிரச்சினைகள் உண்டாகலாம்

கடகம்;ராசிக்கு 9ல் கேது வருகிறார் தந்தைக்கோ தந்தை வழி உறவுகளுக்கோ பாதிப்பு உண்டாகும்..தந்தையால் பிரச்சினை,கருத்து வேறுபாடு வரும்..ஆன்மீக பயணம் செய்வீர்கள்.. மருத்துவ செலவுகள் வரலாம்..பிள்ளைகள் வழியில் சங்கடங்கள் வரும்...பூர்வீகம் சார்ந்த பிரச்சினைகள் தலைதூக்கும்..ராசிக்கு 3ல் மறையும் ராகுவால் பாதிப்பு இல்லை..சகோதரனுக்கு பாதிப்பு,சகோதரனுடன் கருத்து வேறுபாடு வரும்.

சிம்மம் ;ராசிக்கு 8ல் மறையும் கேதுவால் நற்பலன்களே உண்டாகும் என்றாலும்..விஷக்கண்டம் இருப்பதால் சாப்பிடும் உணவில் கவனம் தேவை.2ஆம் இடத்து ராகு முன்கோபம்,பிடிவாதத்தை அதிகப்படுத்துவார்...பணம் எவ்வளவு வந்தாலும் ஆடம்பர செலவால் கரைய வைப்பார் பேச்சில் கடின தன்மையை உண்டாக்குவார்..குடும்பத்தில் வீண் வாக்குவாதம் உண்டாக்கி குழப்பத்தை தருவார் கவனம் தேவை கடன் உண்டாகாமல் பார்த்துக்கொள்வது நலம்..

கன்னி;ராசியில் இருக்கும் ராகு கோபம்,டென்சனை அதிகப்படுத்துவார் அம்மாவுக்கு பாதிப்பு உண்டாக்கும்..மருத்துவ செலவுகள் வரலாம்..ராசியில் அமரும் ராகு குணத்தை கெடுக்கும்..கெட்ட பெயர் உண்டாகும் என்பதால் கவனம் தேவை...7ல் இருக்கும் கேதுவால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு நிம்மதியின்மையை உண்டாக்குகிறது..அவர்களுக்கு மருத்துவ செலவு ,உடல்நலன் பாதிப்பும் கொடுக்கும்..

பரிகாரம்;அருகில் உள்ள ராகு கேது இருக்கும் வினாயகருக்கு அருகம்புல் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்..ராகு காலத்தில் செவ்வாய்,அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்யலாம்..

மீதி ராசிக்கான பலன்கள் விரைவில்....



பங்குனி உத்திர அன்னதானம்;

பங்குனி உத்திரம் வரும் 13.4.2014 அன்று வருகிறது அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம் விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..

நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த கணக்கிற்கு அனுப்பலாம்..

k.sathishkumar,20010801181,state bank of india,bhavani

cell;9443499003



சனி, 10 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்


ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மேசம்

வரும் 23.12.2012 முதல் ஒன்றரை வருசத்துக்கு,ராகு உங்க ராசிக்கு 7ல் பெயர்ச்சியாகி வருகிறார்..இதுவரை 6ல் இருந்தார்..அமைதியா போய்க்கிட்டு இருந்துச்சு..இப்போ 7ஆம் இடம் அதுவும் அங்க ஏற்கனவே சனி வேறு இருக்கார்..இரண்டு பேரும் சேர்ந்து 7ல் இருக்காங்க.7ஆம் இடம் கூட்டுறவு,நல்லிணக்கம்,காதல்,மணவாழ்க்கை,தொழில் பார்ட்னர்,நட்பு,என்பதை குறிப்பது..இவற்றில் எல்லாம் குளறுபடி,குழப்பம்,பிரச்சினை வரலாம்

பாரப்பா பன்னிரண்டு எட்டு ஏழில்
பலமுள்ள படவரவு அதிலே தோன்ற
வீரப்பா வேல்விழியால் கலகம் மெத்த
விளங்குகின்ற கணவனுக்கு ரோகம் சொல்லு

என புலிப்பாணி முனிவர் பாடியிருக்கிறார்

பெண்ணால் கலகம்,மனைவியால் குதர்க்கம்,மணவாழ்க்கையில் குழப்பம்,கணவனுக்கு நோய்,உடல் பாதிப்பு என்பதே இதன் கருத்தாகும்..


-----------------------------------





ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;ரிசபம்



திருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 அன்று மாலை விருச்சிகம் ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார்..

ரிசபம் ராசிக்கு இது 6 வது ருண ரோக ஸ்தானம் ஆகும்..ராகு இங்கு மறைந்துவிடுவது உங்களுக்கு

யோகமான காலம் எனலாம்..அதாவது 6ல் ராகு 12ல் கேது...இருக்கிறார்கள் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அல்லவா.அதன் படி இது நல்ல பலன்களையே கொடுக்கும்..கடன் தொல்லைகள்,உடல் பாதிப்புகள்,மனக்குழப்பங்கள் நீங்கும்..குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்..பணம் தாராளமாக வந்து சேரும் எதிரிகள் பிரச்சினை இருக்காது...

கருராகு ஆறில் நிற்க
கடுகியே பகைநோய் ஏகும்
வருவிடர் நில்லாதோடும்
வன்மையாய் வெற்றி சேரும்

பகை ருணரோக ஸ்தானமான 6ல் 12ல் ராகு கேது வருவதால் விரோதம்,விவகரம்,வழக்கு,போட்டி,எதிர்ப்பு ஆகியவற்றை முடக்கியும் முறியடித்தும் வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்கு முடியும் என புலிப்பாணி முனிவர் ஜோதிடம் சொல்கிறது!!



வெள்ளி, 9 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்

ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்

திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழும் நந்தன வருடம் மார்கழி 8 ஆம் நாள் 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதி பரணி நட்சத்திரம் கூடிய நாளில் மாலை மணி 6.21 க்கு ராகு கேது பெயர்ச்சி  மாற்றம் உண்டாகும்...சில பஞ்சாங்கங்கள் 5.47 என குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்த ராகு கேது பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சியை விட பலம் அல்ல என்றாலும் சூரியன்,சந்திரனை விட வீரியம் உள்ளதாக அவர்களையே பல சமயம் முடக்கி விடுவதால் கிரகணம் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டி இருக்கிறது...

பூமி சூரியனை சுற்றும் வட்டப்பாதையும் ,பூமியை சந்திரன் சுற்றும் வட்டப்பாதையும் விண்வெளியில் மேலும் கீழுமாக குறுக்கிட்டு வெட்டுகின்ற சந்திப்பு மையங்கள்தான் (மின்காந்த அலைகளின் உராய்வு மோதல்கள்தான்)ராகு -கேது என நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்...சந்திரன் மேல் நோக்கி போகும் பாதை பூமியின் பாதையை சந்திப்பது ராகு வாகும்..கீழ்நோக்கி வரும் சந்திரனின் பாதையானது பூமியின் பாதையை சந்திப்பது கேதுவாகும்..

ராகு கேது இரண்டும் நிழல் கோள்கள் ஆகும்...அதாவது கிரகங்கள் இல்லை..வெறும் நிழல்களே...மின்சாரம் எப்படி கண்ணால் பார்க்க முடியாது ஆனா தொட்டா தூக்கி அடிக்குமே.அது மாதிரிதான்...இரண்டும் குரூரமான கிரகங்கள்...இரண்டுக்கும் வடிவம் பாம்பு உருவம் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள்..

திருவாதிரை,சதயம்,சுவாதி,அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் அதாவது ராகு கேது நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பாம்பு மாதிரி சீறுவதற்கும்,முன்கோபம்,பிடிவாதம் அதிகம் கொண்டு செயல்பட இதுதான் காரணம்...

கேது நட்சத்திரங்காரங்க எப்பவும் ஆன்மீக ஆராய்ச்சிதான்..இல்லைன்னா யாராவது ஒரு குருவுக்கு பயங்கர விசுவாசமா இருப்பாங்க..குரு புகழை பரப்புவதில் இவங்களை மிஞ்ச ஆள் இல்லை ...இதன் அடிப்படை காரணம் அதிக குழப்பம்,பயம்...எதையாவது கெட்டியா பிடிச்சி நம்பிக்கை முழுக்க அதன் மீது வைத்து வாழ்தல்தான் காரணம்..

ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது..இவை ராசிமண்டத்தில் பின்னோக்கி நகரும்..

விருச்சிகம் ராசியில் இப்போது இருக்கும் ராகு துலாம் வீட்டிற்கும்,ரிசபம் ராசியில் இருக்கும் கேது மேசம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகப்போகிறார்கள்....

சனிக்கு எப்படி பலன்களோ அதன்படி இதை பார்க்கலாம்...அதாவது நல்லதோ கெட்டதோ சனி தரும் பலன்கள் ராகு கேது தருவர்...

ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலன்களை விரைவில் எழுதுகிறேன்...