ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள் 2017-2019 மேசம் முதல் சிம்மம் வரை
வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி வருகின்ற 27.7.2017 அன்று நடக்கிறது..சிம்ம ராசியில் இருந்து ராகு பெயர்ச்சியாகி கடகம் ராசிக்கு செல்கிறார் கேது கும்பம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு செல்கிறார்..திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
.இதன் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக மட்டும் பார்ப்போம்...
பொதுவாக ராகு கேது என்பது கிரகங்கள் இல்லை...இவை நிழல் கிரகங்கள் எனப்படும்...சூரியன்,சந்திரனையே மறைக்கும் நிழல்கள்...எல்லா கிரகங்களையும் சூரியனும் சந்திரனும் வெற்றி கொள்வர்..இவர்களை ராகு கேது வெல்வர்..சூரியனுடன் ராகு கேது ஜாதகத்தில் இருந்தால் பிதுர் தோசம் என சொல்வது வழக்கம்..தந்தை வர்க்கத்துக்கு ஆகாது.சந்திரனுடன் இருந்தால் மாதுரு தோசம்...தாய் வர்க்கத்துக்கு ஆகாது.
ராகு கேதுக்கள் ஜாதகத்தில் நன்றாக அமைந்தால் அதன் திசாபுத்தியில் நல்ல பலன்களை கொடுப்பர் ராகுவை போல கொடுப்பார் இல்லை கேதுவை போல கெடுப்பார் இல்லை இருவரும் எதிரெதிர் குணங்கள்..ராகு முரட்டுதனம் ,துணிச்சலால் நிறைய சம்பாதித்து கொடுத்துவிடுவார்.. கேது பயம் தாழ்வு மனப்பான்மை விரக்தியால் வாழ்வில் துவள வைத்துவிடுவார்..கேது தனிமையில் அமர்ந்து வாழ்க்கை அனுபவத்தை யோசித்து யோசித்து முக்தி அடைய செய்பவர்...ராகு ஆராய்ச்சி,செயல்,வேகம்,குறுக்கு வழியில் பயணிக்க வைத்து வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வைக்கும் போகக்காரகன்..அவருக்கு நேர்வழி, குறுக்கு வழி பற்றி கவலை இல்லை...
ராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் ஜாதகத்தில் அவர்கள் இருக்குமிடம் நிழல் போல மறையும்..லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகர் இருளில் மறைந்தார்போல தன் வலிமை அறியாமல் இருப்பார்...திறமை இருந்தும் வெற்றி பெற முடியாமல் தவிப்பார்...இது போல ராகு கேதுக்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த ஸ்தானம் பாதிக்கப்படும்...ராகு வீரியம் எனில் கேது பலவீனம்...4ல் கேது இருப்பின் உடல் ஆரோக்கியம் பலவீனம்...4ல் ராகு இருப்பின் அதிக ஒழுக்க குறைப்பாட்டை உண்டாக்கி கெட்ட பெயரை உண்டாக்கும்...கேது படுக்க வைக்கும் எனில் ராகு ஊர் சுத்த வைக்கும்.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் தரும் என பார்த்தால் காலப்புருச லக்னத்துக்கு பாக்யத்துக்கு எட்டில் ராகு வருவதால் மதம் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் உண்டாக வாய்ப்புகள் அதிகம்..அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்சினை பெரிய அளவில் மாறும்..
ராகு கேதுவை பொறுத்தவரை ஜாதகத்தில் சரி கோட்சாரத்திலும் சரி 3,6,8,10,11 ,12ல் இருப்பது நல்லது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது நிழல் கிரகங்கள் மறைந்து இருப்பது நல்ல பலனை தரும்...சுபர் பார்வையில் இருந்தால் நல்லது. சுபருடன் சேர்ந்தால் கெட்டது இதுதான் அடிப்படை.இதன் அடிப்படையில் மட்டும் பலன்கள் கொடுத்திருக்கிறேன்.
ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை வருவதாகும்..ராகு கேதுக்கள் பின்னால் சுற்றுபவை..முன் ராசிக்கு செல்ல மாட்டார்கள் ...அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகாமல் பின்னுள்ள ராசிக்கு செல்வார்கள்.ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் பலன் கொடுப்பர்..
மேசம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்..
மேசம் - உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் ராகுவும் பத்தாம் ராசிக்கு கேதுவும் மாற இருக்கிறார்கள் ..நான்கில் ராகு சுகத்தை கெடுக்கும் தாய்க்கு மருத்துவ செலவினம் தரும்...பத்தில் வரும் கேது தொழிலில் கொஞ்சம் பாதிப்பு தருவதால் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது .சொத்துக்கள் சார்ந்த வில்லங்கம்,சிக்கல் உண்டாக்கும் என்பதால் வீடு ,வாகனம் சார்ந்த விசயத்தில் கூடுதல் கவனம் தேவை.
அலைச்சல் அதிகரிக்கும்..பண வரவில் குறை இருக்காது....வரும் டிசம்பர் மாதத்துடன் அஷ்டம சனி முடிகிறது...ஆவணி 10 முதல் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு யோகமாகவே இருக்கிறது...இதனால் பல நல்ல மாற்ரங்களை இந்த வருடமும் அடுத்த வருடமும் எதிர்பார்க்கலாம் பல பிரச்சினைகள் இந்த வருடக்கடைசிக்குள் தீரும்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வீட்டில் சுபகாரியம் நடைபெறும்..செவ்வாய் தோறும் முருகன் வழிபாடு நல்லது.
ரிசபம் -உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது ஒன்பதாம் இடத்துக்கு மாறுகிறார்..மூன்றாமிடத்து ராகு யோகமானது என பழைய ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன...மூன்றில் ராகு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பெரிய லாபங்களை அடைவீர்கள்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்..கேது ஒன்பதாவது ராசிக்கு வருகிறார்..
இது தந்தைக்கு மருத்துவ செலவினத்தை உண்டாக்கும்..மகான்களின் ஆசி கிடைக்கும் நீண்ட நாள் விரும்பிய தீர்த்த யாத்திரைக்கு செல்வீர்கள்.பண வரவு திருப்தி தரும்.அஷ்டம சனி பற்றி பெரிதாக கவலை வேண்டாம்...சுக்கிரன் ராசியினருக்கு பெரிதாக சனி கெடுதல் செய்ய மாட்டார்..குரு சாதகமற்ற நிலையில்தான் வருகிறார் உடல்நிலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.நம்பியவர்களால் ஏமாற்றம் உண்டாகும் காலம் என்பதால் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்களால் சிக்கல்கள் நேரும் என்பதால் பங்குதாரர்களிடன் கவனம் தேவை.
புதிய ஆட்களிடம் எசரிக்கையாக இருங்கள் வீட்டில் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள் மனைவி /கணவனுக்கு உடல் ஆரோக்கியம் பாதித்து மருத்துவ செலவு செய்யக்கூடும்..புதிதாக இடம் வீடு சொத்துக்கள் சிலர் வாங்குவர் அஷ்டம சனி வரும்போது பண முடக்கம் இப்படி சுப செலவாக செய்து கொண்டால் நல்லது...தான் சகோதரர்கள் வழியில் விரய செலவுகள் காணப்படும்... பெளர்ணமி தினத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு நல்லது
மிதுனம் -உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்துக்கு ராகு வருகிறார்..கேது ராசிக்கு எட்டில் வருகிறார் ..இது வாழ்க்கை துணைக்கு அதிக பாதிப்புகளை தரும்...பெரிய மருத்துவ சிகிச்சை ஒன்று காத்திருக்கிறது...குடும்பத்தில் சின்ன வாக்குவாதங்கள் பெரிய பிரச்சினையில் கொண்டு போய் முடிக்கும்.
தன ஸ்தானத்தில் ராகு வருவது கடக ராகுவாக வருவதால் வருமானத்தை பல மடங்கு பெருக்கும்.அதே சமயம் உங்கள் பேச்சால் பல குழப்பங்களும் குடும்பத்தில் உண்டாக்கும்.பணம் நிறைய வரும்.. தண்ட செலவும் அதே அளவில் வரும்.காரணம் ராகு நிழல் கிரகம்...
தன ஸ்தானத்தை நிழல் போல் மறைப்பதால் சேமிப்பில் இருந்த பணத்துக்கு ஆபத்து உண்டாக்கும் காலம் .நம்பிக்கையான முதலீடுகள் பிரச்சினை இல்லை..தந்தைக்கு விரயத்தில் கேது வருவதால் தந்தைக்கு அதிக மருத்துவ செலவுகள் உண்டாக்கும் எட்டாம் இட கேது சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் தரும் பெண்களுக்கு கர்ப்பபை சார்ந்த பாதிப்புகளை தரும்.
ராசிக்கு அஷ்டம சனி ஏழரை சனி எதுவும் இல்லை.குருபெயர்ச்சியும் நன்றாக இருக்கிறது அதனால் பெரிய அளவில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை பாதிக்காது.சனி தோறும் பெருமாளை வழிபடுவதும் கண்ணனை வழிபடுவதும் நல்லது.
கடகம் -உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் ராகு வருவது நல்ல பலன் என சொல்ல இயலாது. மனக்குழப்பம்,கவலை அதிகரிக்கும்.. உங்கள் திறமைகள் மதிக்கப்படாது.நம் சொல் அம்பலத்தில் ஏறவில்லையே என்ற வருத்தம் உண்டாக்கும்.தன்னம்பிக்கை, தைரியம் குறைவு உண்டாக்கும் காலம் என்பதால் பிறர் விமர்சனங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்...பணம் கொடுத்தால் திரும்பாது. பணம் வாங்கினால் கட்டுவது கடினம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.பாசமாக பழகுவதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை.உண்மையாக அன்பு காட்டினால் அவர்களுக்கு எதையும் செய்வீர்கள் விட்டு கொடுப்போர் கெட்டுப்போவதில்லை என்பீர்கள்...மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டீர்கள் ஆனால் உங்களின் இந்த நல்ல குணத்தையே அசைத்து பார்க்கும்படி வருகிறது ஜென்ம ராகு.
ராசிக்கு ஜென்மத்தில் ராகு வருவது அதிக பதட்டம்,முன்கோபத்தை உண்டாக்கும்..உணர்ச்சிவசப்பட்டு பிறர் மனம் நோகும்படி பேசிவிட நேரும் பேச்சில் கவனம் தேவை.கடகம் சந்திரனின் ராசி அதனுடன் ராகு சேரும்போது கிரகண தோசம் ஆகிறது.இதனால் குழப்பங்கள் தடைகள் ,கெட்ட பெயர் உண்டாகிறது.
ராசிக்கு எழரை சனி ,அஷ்டம சனி இல்லை அதனால் பெரிய பாதிப்பு இல்லை.குருபெயர்ச்சியும் உங்க ராசிக்கு ஆறுதல் தரும்படி இருப்பதால் கவலை வேண்டாம்.7ஆம் இடத்துக்கு வரும் கேது குடும்பத்தில் குழப்பத்தையும் வாக்குவாதத்தை உண்டாக்குவார் மனைவிக்கு மருத்துவ செலவை உண்டாக்குவார் நண்பர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.கவனமாக செயல்படுங்கள்...வெள்ளிதோறும் அம்பாளை வழிபடுங்கள்
சிம்மம் -இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் இருந்து வந்த ராகு விலகிவிட்டார் ..இப்பவாவது வழிவிட்டாயே என நிம்மதி பெருமூச்சு விடும்படி இனி அடுத்தடுத்து நல்ல பலன்கள் நடக்கும்..புதிதாக சொத்து ஒன்றை வாங்கப்போகிறீர்கள் இடம்,வீடு ,வாகனம் வாங்கும் யோகம் விரைவில் வர இருக்கிறது...
ராசியில் நின்ற ராகு உங்கள் திறமைகளை பிறர் குறைத்து மதிப்பிட வைத்துவிட்டது சில அவமான நிகழ்வுகள் ,மன அழுத்தம்,கவலைகளை கடந்த காலங்களில் ஜென்ம ராகு உண்டாக்கியது.இனி அந்த மனக்கஷ்டங்கள் அனைத்தும் விலகும்..ராசிக்கு 12ல் செல்லும் ராகு திடீர் அதிர்ஷ்டங்களை உண்டாக்குவார் பண வரவை அதிகபடுத்துவார் ..பயம் விலகி துணிச்சல் தைரியம் உண்டாக்குவார் ..
இழந்த நட்புகள் ,பகையான உறவுகள் ஒன்று சேர்வர்.நீண்ட நாள் வராது இருந்து வந்த தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்..தொழில் செய்யுமிடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.6ஆம் ராசிக்கு செல்லும் கேது சில உடல் பாதிப்புகள் தந்தாலும் அவை விரைவில் குணமாகும்.வருமானம் அதிகரிப்[பதால் சேமிப்புகள் உண்டாகும் காலம்..சிவ வழிபாடு சிறப்பு தரும்.
1 கருத்து:
Kanni Raasi sir
கருத்துரையிடுக