gurupeyarchi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
gurupeyarchi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 மே, 2014

குருப்பெயர்ச்சி ராசிக்கு பார்க்கனுமா லக்னத்துக்கு பார்க்கனுமா..?

குருப்பெயர்ச்சி 2015 ராசிக்கு பார்க்கலாமா லக்னத்துக்கு பார்க்கனுமா..?

குருப்பெயர்ச்சி ராசியை அடிப்படையாக வைத்தே எல்லா வார இதழ்களும் மீடியாக்களும் ஜோதிட பத்திரிக்கைகளும் எழுதுகின்றன..ராசிக்கு குரு 2,5,7,9 ஆம் இடங்களுக்கு நல்ல பலன்களை தரும் செல்வாக்கை தரும் பணம் நிறைய வரும் தொழில் நன்றாக இருக்கும் அந்த அடிப்படையில் மிதுனம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம் ராசியினருக்கு 2014 -2015 குருப்பெயர்ச்சி ராசிபலன் மிக யோகமாகவே இருக்கிறது இதனை ராசியினராக கொண்டவர்களுக்கு மட்டுமல்ல..இதனை லக்னமாக கொண்டவர்களுக்கு இரட்டிப்பு பலனை குரு மாறுதல் உண்டாக்கும் ராசியை விட லக்னம் இன்னும் சக்தி அதிகம் பலன் அதிகம்.

நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த ராசி மண்டலத்தில் இருக்கிராரோ அது ராசி...நாம் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் இருக்கிறாரோ அது லக்னம்..சந்திரனே ஒளியை சூரியனிடமிருந்து எனக்கொண்டால் சூரியனின் அமைப்புடைய லக்னம் இன்னும் சிறந்ததுதானே.

சந்திரன் மிக அருகில் நமக்கு ஒளியை கொடுக்கும் என்ற அடிப்படையில் அவர் மனதுக்கு அதிபதி எனும் வகையில் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் .ஜோதிட குரு பராசரர் காலத்துக்கு முன்பு சந்திரனை கொண்டே பலன் காணப்பட்டது.அதன் பின்புதான் இன்னும் துல்லியமான பலனை அறிய லக்னம் வகுக்கப்பட்டது...சந்திரன் இரண்டு நாட்களுக்கு மேல் ஒரு ராசியில் இருக்கும் லக்னம் இரண்டு மணி நேரம்தான் குறிக்கிறது அப்படி பார்த்தால் இன்னும் துல்லியமான பலனை சொல்லும்..

.மிதுனம் லக்னத்தாருக்கு இந்த குரு பெயர்ச்சி மிக சிறப்பான யோகத்தை தரப்போகிறது முதல்வர் ஜெயலலிதா லக்னம் மிதுனம்...அந்த அடிப்படையில் பார்த்தால் அவர் ராசி சிம்மத்துக்கு குருப்பெயர்ச்சி பலன் சுமார்தான் ஆனால் லக்னத்த்துக்கு மிக சிறப்பா இருக்கே..? இரண்டாம் இடத்தில் உச்சம் ஆகும் குரு செல்வக்கை அதிகபபடுத்துதே..? குருப்பெயர்ச்சிக்கு முன்பே தேர்தல் ரிசல்ட் வந்துவிடும் ...ரிசல்ட் வரும்போது அவர் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு...ரிசல்ட் வந்தபின் குருப்பெயர்ச்சிக்கு பின் லக்னத்துக்கு இரண்டில் குரு உச்சம்...இவை அவருக்கு சிறப்பாகவே இருக்கு.தேர்தல் தேதி அறிவித்த நாள்,தேர்தல் தேதி,தேர்தல் முடிவுகள் எல்லாமே அவர் ஜாதகத்துக்கு சாஹகமாக இருக்கிறது என முன்பே சொல்லி இருந்தேன்...இதனால் அவர் எதிரிகளின் பலம் மிகவும் தாழ்ந்துவிடுகிறது...

ராசி மட்டுமல்ல பலன் பார்க்கும்போது லக்னத்தையும் கவனிப்பது அவசியமாகிறது!!

செவ்வாய், 22 மே, 2012

குரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்?

குரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்?


நல்ல நேரம் பார்ப்பது;

ராசிபலன் பார்ப்பதில் இருக்கும் சூட்சுமம் என்னன்னா,நாம ஒரு முக்கிய காரியம் நினைச்சிக்கிட்டு இருப்போம்..அதை எப்போ எப்படி செய்றது என்பதில்தன் முதல் குழப்பம் வரும்..அரம்பிக்கிற காரியம் நல்லபடியா முடிக்க ஸ்வீட் சாப்பிட்டா மட்டும் பத்தாது...நல்ல நாளிலும் ஆரம்பிக்கணும்..சந்திராஷ்டமம் இல்லாத நாளாகவும் ராசிக்கு சந்திரன் மறையாத நாளாகவும்..அதாவது கெடாத நாளாகவும் இருக்கணும்..சந்திரன் 2,3,6,10,11, இவைகளில் இருந்தால் மிக நல்லது...இவற்றை லாபமான நாளாக ராசிபலனில் குறிப்பிடுவோம்....அதை அனுசரித்தும் குருபலம் அமைப்பு இருக்கிறதா என்பதை பொறுத்தும் நல்ல காரியத்தை செய்யலாம்..குருபலம் இல்லாவிட்டாலும் ராசிபலன் முறையில் உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சந்திரன்,8ல் சந்திரன்,12ல் சந்திரன் இருக்கும் காலங்களில் நமக்கு தடை,தோல்வி,விரயம்,அலைச்சலே உண்டாகின்றன....

சரி,குருபெயர்ச்சி ஆகிவிட்டது..குருபெயர்ச்சியால் அதிக நன்மை பெறும் ராசிகள் எதுவென பார்ப்போம்....மேசம் ராசிக்கு இரண்டில் குரு வந்துவிட்டார்..இது குருபலம்..தனஸ்தானத்தில் நிற்கும் குரு தனத்தை அள்ளித்தருவார்..சுபகாரியத்தை நடத்தி வைப்பார்...பேச்சில் இனிமை கூட்டுவார்...குடும்பத்தில் மகிழ்சியை புரள வைப்பார்....அது மட்டுமில்லாமல் குரு பெயர்ச்சியாகி செல்லும் முதல் நட்சத்திர சாரமே கிருத்திகை..இவர்களுக்கு யோகாதிபதி நட்சத்திரம்..மேலும்..தொடர்ச்சியாக 10 மாதங்கள் சுகாதிபதி சந்திரனின் சாரமான ரோகிணியில் வேறு தங்குகிறார்..எனவே மேசம் ராசியினருக்கு குரு அதிக பலனை அள்ளி வழங்குவார் என எதிர்பார்க்கலாம்...கன்னி,விருச்சிகம் ராசியினருக்கும் இந்த குருபெயர்ச்சி சிறப்பான பலன்களை அள்ளிதரப்போகிறது...பபுண்ணிய நதி நீராடல்களும்,வெண்டுதலை நிறைவேற்றும் பாக்யமும் வாழ்வில் பல முக்கிய மகிழ்ச்சியான சம்பவங்களும் இந்த ஆண்டில் இவர்களுக்கு நடக்கும்!

பொதுவான சில குறிப்புகள்;

பங்கு சந்தை இந்திய ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்ததும் கவனித்திருப்பீர்கள்..முன்பு குரு மகரத்தில் நீசமானபோது உலக பொருளாதார வீழ்ச்சி உண்டானது..இப்போது குரு தன் பகைவீடான ரிசபத்துக்கு சென்றதும் ரூபாய் (தனம்) மதிப்பு சரிந்தது..!

ரோஹிணி சாரத்தில் குரு இருப்பது எந்த ராசியினருக்கு எல்லாம் அவயோகமோ அவர்களுக்கு சுமாரான பலன்களே தரும்...தனக்கு எதிர்கிரகமான சுக்கிரனின் வீட்டில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட்,கட்டிடத்துறை,பாதிக்கப்படும்..புகழ்பெற்ற மூத்த கலைஞர்கள்,வயதான பெரும் தலைவர்களுக்கும்,மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகழ்பெற்ற கலைத்துறையை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பு உண்டாக்கும்....குரு செவ்வாயை பார்ப்பதால் கொடிய நோய்களான புற்றுநோய்,எயட்ஸ் போன்றவற்றுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம்...

ஏழைகளுக்கு மருத்துவ செலவுகள் குறையும் விதத்தில் அரசால் புதிய திட்டங்கள் வழங்கப்படலாம்..அவை பெரும் வரவேற்பை பெறும்..சந்திரன் சாரத்தில் குரு செல்வதால் தண்ணீர்ல கண்டம் இருப்பவர்கள் கவனம்....தொற்று நோய்கள் அதிகரிக்கும்...பழைய புகழ்பெற்ற தொற்று நோய்கள் திரும்ப வரலாம்......மத்தியில் இருக்கும் முக்கிய பெண் தலைவருக்கு பாதிப்பான வருடமாகவும் இருக்கும்!!


வெள்ளி, 18 மே, 2012

குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்

உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சர்ந்த அன்புள்ளமும்,கடும் உழைப்பும் கொண்ட மகரம் ராசி அன்பர்களே....உங்கள் ராசிக்கு குரு 17.5.2012 முதல் பஞ்சம ஸ்தானம் எனும் வெற்றி ஸ்தனமாகிய ஐந்தாம் இடத்துக்கு மாறுகிறார்..இது அருமையான குருபலம் ஆகும்..குருபலம் இருந்தால் பணபலம்..மனபலம் அல்லவ...எனவே இனி உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான்....


இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் தடைகளை தகர்ந்து நீங்கள் நினைத்தது போல நடக்கும்..சுபகாரியம்,திருமணம் மகிழ்ச்சியாக எண்ணியதுபோல நடக்கும்...

தொழிலில் இருந்துவந்த மந்த நிலை அகன்று சுறுசுறுப்பு அடையும்..புதிய தொழில் வாய்ப்புகள் கூடி வரும்..பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..உறவு,நட்புகளில் இருந்துவந்த கசப்புகள் நீங்கி சந்தோசமும்,குதூகலமும் குடிகொள்ளும்...

உங்கள் ராசியை குருபார்ப்பதால் முகத்தில் தெளிவு பிறக்கும்...இனி சிரித்த முகத்துடன் வலம் வருவீர்கள்..மனதில் இருந்துவந்த குழப்பமெல்லம் அகலும்..வண்டி வாகனம்,சொத்துக்கள்,நிலம்,நகைகள் வாங்கும் யோகமும் வந்து சேர்கிறது..பெரிய மனிதர்களின் தொடர்பும் அதன்மூலம் பல நல்ல விசயங்களும் சாதித்துக் கொள்வீர்கள்....சனியும் சாதகமாக அமைந்து குருவும் பலம் பெற்றுவிட்டதால் இந்த வருடம் உங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை....

அன்னதானம்,பெரியோர்களுக்கு உதவி,செய்து குருவுக்கு நன்றி செலுத்துங்கள்

வியாழன், 17 மே, 2012

குருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்

குருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்

குருபகவானில் சொந்த வீட்டை ராசியாக கொண்ட அன்பரே....மனிதாபிமானம்,இரக்க சுபாவம்,கடவுள் நம்பிக்கை,பிறருக்கு மனம் கோணாமல் உதவி செய்தல்,ஆலயபணி,மக்கள் பணி போன்றவை உங்கள் உங்கள் முக்கிய குணம்....இதுவே உங்கள் செல்வாக்கு உயர முக்கிய காரணம்..இதனால் நண்பர்கள் மத்தியிலும்,உறவினர்கள் மத்தியிலும் ,ஊராரிடத்திலும் நல்லபெயர் எடுத்து நல்லமனுசன் என பெயர் பெற்று திகழ்வீர்கள்...அன்பும்,கருணையும் உங்கள் இரு கண்கள்...


இதுவரை உங்கள் ராசிக்கு 5ல் இருந்துவந்த குருபகவான்..இனி உங்க ராசிக்கு 17.5.2012 முதல் 6 ஆம் வீட்டுக்கு மாறுகிறார்..இது கொஞ்சம் சிக்கலான இடம்தான்..கடன்,நோய் ஸ்தானம் ஆச்சே..அதிக செலவுகள் இழுத்து விட்டுடுமே ஏற்கனவே ஊருக்கும்,நண்பர்களுக்கும் பணத்தை வாறி இறைச்சிட்டு திணறும்போது இந்த சிக்கல் வேறயா..என குருபகவானை தேடி இப்போதே பலர் திட்ட,ஆலங்குடி குருபகவானை தரிசிக்க சென்று இருப்பீர்கள்..ஏன்னா சிரமப்பட்டு,அதிக செலவழிச்சு,பெரிய லெவல்லா..கும்பிட்டாதான் சாமி கும்பிடக்கூட உங்களுக்கு பிடிக்கும்..உள்ளூர்ல கும்பிடுறது மனசுக்கு நிறைவை தராமல் உங்களுக்கு சங்கடமா இருக்கும்..

ராசிக்கு 6ல் வரும் குருவால் அதிக பண விரயம்,மருத்துவ செலவுகள் ,பணி செய்யுமிடத்தில் கடும் அலைச்சல்,பஞ்சாயத்துக்கள் உங்க பேர்ல தப்பில்லைன்னாலும் எங்கியோ போற பஞ்சாயத்து எல்லாம் அண்ணே நீங்கதான் தீர்த்து வைக்கணும்னு வாசல்ல வரிசை கட்டி நிக்கும்...அதுல உங்க பேரும் கொஞ்சம் ரிப்பேர் ஆகும்..நண்பண்டா ...அவனுக்கு உதவலைன்னா நான் வேஸ்ட்னு களத்துல இறங்குனா..லைட்டா உங்களுக்கு சேதாரம் இருக்கு..சொல்லிட்டேன்...

பணம் கொடுக்கல் வாங்கலில் புதிய நபர்களை நம்ப வேண்டும்..நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு அள்ளிக்கொடுத்தா...பார்த்த விழி பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான் பணம் அம்போ...! எதையும் அவசரமா செய்யாம கொஞ்சம் நிதானிச்சு செயல்படுங்க....ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக்குறவங்க..இதுவரை அலட்சியமா இருந்தது ஓகே..இனி அப்படி முடியாது..மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் சூழல் வரலாம்...

கெட்டபலனா சொல்றேன்னு சங்கடப்படாதீங்க..நீங்க நல்ல மனுசன்...சிக்கலில் சிக்கிக்க கூடாதுன்னுதான் இந்த அலரா மணி...குரு 6ல் இருந்தாலும் தனஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவுக்கு பஞ்சம் இருக்காது..அதனால் செலவுகளை சமாளித்துவிடலாம்...

குரு 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலுக்கு பாதிப்பு வராது...தொழிலில் முன்னேற்றம் உண்டு..ஆனால் கடுமையான பணி சுமையும் உண்டு..பணம் வருது ஆனா வேலை கஷ்டம் என்பீர்கள்...

ஆடம்பர செலவுகளை குறைத்து,உடல்நலனில் கவனம் செலுத்தினால் போதும்....குரு பாதிப்பு தராமல் உங்களை காப்பார்..அன்னதானம் செய்யுங்கள்..நல்லதே நடக்கும்!!


சனி, 21 ஏப்ரல், 2012

குரு பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மிதுனம் ராசிக்கு எப்படி..?


குரு பெயர்ச்சி பலன்கள் ;மிதுனம்



உங்கள் ராசிக்கு இதுவரை 11 ஆம் இடத்தில் இருந்து வந்த குருபகவான்,வரும் 17.5.2012 முதல் ராசிக்கு 12 ஆம் இடமாகிய விரயஸ்தானத்துக்கு பெயர்ச்சியாகிறார்.உங்கள் ராசிக்கு 4 ஆம் இடமாகிய சுகஸ்தானம்,6 ஆம் இடமாகிய ருண ஸ்தானம்,8 ஆம் இடமாகிய அஷ்டமஸ்தானம் ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்...இதனால் துன்பம் தரும் இடங்கள் எல்லாம் பலம் இழக்கின்றன..

மிதுன ராசிக்கு பாவியாகிய குரு மறைவது நல்ல பலன்கள் தரும் என்றாலும்,குரு தனாதிபதி என்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும்...கணவன்,மனைவிக்குள் சிறு பிணக்குகள் அடிக்கடி தோன்றும்..சும்மாவே அப்படித்தான்..இதுல இது வேறயா என்கிறீர்களா..குழந்தைகள் உயர்கல்விக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்...



திருமணம் ஆகாதவர்களுக்கு,குருபலம் இல்லாவிட்டாலும்,8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும்...



பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள்,சிக்கல்கள் வரும்,.எச்சரிக்கையாக இருக்கவும்...மொத்தத்தில் குரு பெயர்ச்சி உங்களுக்கு வரும் வருமானத்தை செலவழிக்க வைக்ககூடியதாக,கடன் வாங்கியாவது சொத்துக்கள் வாங்க வைக்ககூடியதாக இருக்கிறது!!


 மிருகசிரீடம்,திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வண்டி வாகன்ங்களில் செல்கையில் கவனம் தேவை...முக்கியமான பொருட்கள் தொலைந்து போகலம்..பண இழப்பு ஏற்படலாம்..ஏமாறாமல் இருக்க வேண்டிய காலம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நம்பியவர்களால் ஏமாற்றம் உண்டகும் காலம் என்பதால் நெருங்கிய நண்பரக இருந்தாலும் பண விசய்த்தில் கவனம் தேவை...தேவையில்லாத விசயத்தில் தலையிட்டு வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள்...

புதன், 28 மார்ச், 2012

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013

குரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013


குரு பகவான் வைகாசி மாதம் 4 ஆம் தேதி 17.5.2012 வியாழக்கிழமை மாலை 6.24 அளவில் திருக்கணிதம் பஞ்சாங்கப்படி மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்...

17.5.2012 முதல் 31.5.2013 வரை ரிசப ராசியில் சஞ்சாரம் செய்கிறார்..

குரு பார்க்க கோடி புண்ணியம்,,,குரு பார்க்க சகல தோசங்களும் நிவர்த்தி என்பதற்கேற்ப வருடம் ஒரு ராசிக்கு பெயர்ச்சியால் அனேக குற்றங்கள்,தோசங்கள் குறையும்...சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்..

இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நன்மையும் குருபலமும் பெறக்கூடியவர்கள் யார் ..?

மேசம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் குருபலம் பெறுகிறார்கள் இதனால் உத்யோக உயர்வு,வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல்,திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்தல் ,குழந்தை பாக்யம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும் காலம் இது.


எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய ராசிகள்;


மிதுனம்-விரய குரு


மீனம்-மூன்றாமிட குரு


சிம்மம் ராசி-10 ஆம் இட குரு


துலாம் ராசி-அஷ்டம குரு


தனுசு ராசி-ஆறாமிட குரு


கும்பம் ராசி- 4 ஆம் இட குரு


இவர்களுக்கான பலன்களும் பரிகாரமும் விரைவில் எழுதுகிறேன்...ராசிபலன் ஆகட்டும்,குரு பெயர்ச்சி ஆகட்டும்,சனி பெயர்ச்சி ஆகட்டும்..பொதுவாக ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக பலத்தாலும்,திசா புத்தியாலும் பலன்கள் மாறலாம்..உதாரணமாக 4ஆம் அதிபதி திசை...ஒருவருக்கு நடக்கிறது என்றால் அவருக்கு குரு பெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ பெரிய கெடுதல் செய்வதில்லை...குரு திசை,சுக்கிர திசை...லக்னத்துக்கு சுபர் திசைகள் அதிக பாதிப்பை தருவதில்லை..தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்..போலீஸ் ஸ்டேஷன் வம்பு வழக்கு என்றால் ஒருவர்க்கு டூ வீலர் லைசன்ஸ் பிரச்சினையில் கோர்ட்டில் தண்டம் அழலாம்..இன்னொருவர் செய்யாத தப்புக்கு ஜெயிலில் தண்டனையும் அனுபவிக்கலம்..இருவருக்கும் ஒரே ராசிதான்..ஆனால் திசா புத்தி வேறு வேறு ஆச்சே..ஜாதகம் வேறு ஆச்சே..எனவே இது எச்சரிக்கை பதிவுதான்..!!.