வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்


ஜோதிடம் சொல்லும் விதிகளில் முக்கியமானது திருமண பொருத்தம்.மனப்பொருத்தம் நன்றாக இருந்தால் மணப்பொருத்தமே பார்க்க வேண்டாம் என சொல்வார்கள்.ஆனால் இப்போதெல்லாம் என்ன படிப்பு,சம்பளம் எவ்வளவு..வீடு சொந்தமா இருக்கா என்பதே முக்கியமாக போய்விட்டதால் பையனும்,பொண்ணும் பழகவும்,புரிந்துகொள்ளவும் வாய்ப்பே இல்லை.நல்ல வசதியான பையன் கிடைக்கும் என்றால் சில பெண்கள் நீ யாரு என 10 வருசம் காதலிச்சு ஊர் சுத்தின காதலனையே கேட்கும் காலம் இது.

காதல்,கவிதை,சினிமா,சென்னை மெரீனா பீச் லவ் னு சுத்துறவங்க..எல்லாம் பக்குவமில்லாதவர்கள்..புத்திசாலி பொண்ணுங்க..நல்ல தகுதியான ,நல்லா சம்பாதிக்குற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கும் என நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.ரெண்டு பேரும் நல்லா சம்பாதிச்சா அப்ப அவங்க லவ் பண்ணா வெரி குட்.பையன் சும்மா சுத்திகிட்டு இருப்பான் ..பொண்ணு வேலைக்கு போகும்..ஈவினிங் ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னா அது மோசம்..

ஜாதகப்படி பொருத்தம் பார்ப்படி..?

இருவரது ஜாதகத்திலும் செவ்வாய் தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம் இருக்கான்னு பார்ப்பது முதல் படி.

இருவரது ஜாதகத்திலும் சுக்கிரன்,குரு,செவ்வாய்,7க்குடையவன் கெடாமல் இருக்கா என பார்ப்பது அடுத்தபடி...

கூட்டு கிரக சேர்க்கைகள் மோசமாக இருக்கான்னு பார்ப்பது அடுத்த படி.உதாரணம்..செவ்வாய்,+சூரியன்,சனி+சூரியன்,செவ்வாய்+சனி,சுக்கிரன்+ராகு,குரு+ராகு,சந்திரன்+சனி,இவைகள் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.

அடுத்தபடீருவருக்கும் ஒரே திசை நடக்குதான்னு பார்க்கணும்.இருவருக்கும் ஒரே திசை நடந்தால் யோகமில்லை.கண்டம்தான்..போராட்டம்தான்..கொஞ்சநாள் கழிச்சும் திசை இருவருக்கும் சந்திக்ககூடாது...

அடுத்தபடியாக இருவர் லக்னமும் ஒண்ணுக்கொன்னு 6,8,12 ல் மறையாமல் இருக்கணும்.அப்பதான் ஒற்றுமை உண்டாகும்..அதே போல ராசியும் இருவர் ராசிக்கும் மறையக்கூடாது..!

அடுத்த படிதான் நட்சத்திரபொருத்தம் பார்க்கணும்..யோனி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்,ராசிபொருத்தம்,ஸ்ரீதீர்க்கம்,இவை மிக அவசியம்.இவை இருந்தால் கூட போதும்...திருமணம் செய்யலாம்...

யோனி பொருத்தம் என்பது இருவரது உடல் அந்தரங்க உறுப்புகள் பற்றிய ரகசியம்...ஒவ்வொரு பெண் நட்சத்திரத்துக்கும் நேர் குதிரை,யானை,குரங்கு,ஆடு என போட்டிருப்பார்கள்.அதில் ஏகப்பட்ட ரகசியம் இருக்கிறது...இதெல்லாம் அப்பெண்ணின் காம எண்ணங்கள்,உடல் உறவு கொள்ளும் முறையை யெல்லாம் விவரிக்கும் குறியீடு.

ரஜ்ஜு பொருத்தம் என்பது இருவரது ஆயுள் பற்றியது.அப்பெண்ணின் மாங்கல்யபலம் பற்றியது..எனவே இரண்டும் முக்கியம்.

ஸ்த்ரீதீர்க்கம் பெண்ணின் ஆயுள் பற்றியது...இதுவும் முக்கியம்.

இவையை பரீலித்துதான் திருமணம் செய்ய வேண்டும்.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்தால் அதற்கு ஜோதிடரோ,ஜோதிடமோ பொறுப்பாகாது!

வசதி,படிப்பு இதெல்லாம் பார்த்து இந்த சம்பந்தம் போனா வராது..என ஜோதிடரை நெருக்கி,பொருத்தம் எழுதி வாங்குபவர்கள்தான் இங்கு அதிகம்...அவர்களுக்கு அப்போதைக்கு வேலை முடியும்.ஆனால் எதிர்காலத்தின் அந்த கணவன்,மனைவி வாழ்க்கை கேள்விக்குறிதான்!!




கருத்துகள் இல்லை: