வெள்ளி, 7 டிசம்பர், 2012

ஜோதிடம்;திருமண வாழ்க்கை சிக்கல்கள்

ஜோதிடம்;திருமண வாழ்க்கை சிக்கல்கள்


ராசிபலன் மட்டும் பார்த்து திருமணம் செய்பவர்கள் யார் என்று பார்த்தால் நம் அந்தஸ்துக்கு தகுந்த இடம்,நமக்கு ஏத்த படிப்பு,பையனுக்கு நல்ல வருமானம்,பொண்ணு நிறைய சம்பாதிக்குறா ,பொண்ணு வீடு நல்ல வசதி என இவற்றை பார்ப்பவர்கள்தான் நட்சத்திரபொருத்தம் இருக்கு,ராசிபொருத்தம் ஓகே அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிக்கலாம் என அவசரப்படுகிறார்கள்..ஜோதிடரும் வேறு வழியின்றி இவர்கள் காட்டும் அவசரத்துக்கு ஏற்ப ஒப்புதல் கொடுத்து விடுகிறார்..

இருவரது ஜாதகத்திலும் களத்திர காரகன் 6,8,12ல் மறையாமல் இருக்கனும்,,சனி,சந்திரன் சேர்ந்தோ பார்வை பெற்றோ இருக்க கூடாது....அது சன்னியாசி ஜாதகம்..சங்கராச்சாரியார்,ராமானுஜர்,ஏசுநாதர்,புத்தர் ,வள்ளலார் போன்ற ஆன்மீக ஆய்வாளர்கள்,மக்களுக்கு சேவை செய்ய பிறந்த மகன்களின் ஜாதகத்தில்தான் சனி,சந்திரன் சேர்க்கை,சுக ஸ்தானம் கெட்டு இருத்தல் போன்றவை இருக்கும்...சனி,செவ்வாய் சேர்ந்து இருத்தல்,களத்திரகாரன் கேது நட்சத்திரம் சாரம் பெற்று இருத்தல் போன்றவையும் குடும்ப வாழ்க்கைக்கு ஆகாது...

முதல்வர் ஜெயலலிதா ஜாதகத்தில் பார்த்தால் களத்திரகாரன் கேது சாரம் பெற்று இருக்கும்...தனக்கு என குடும்பம் அமையாமல் மக்கள் சேவை ஆற்றுகிறார்....இன்று துணிச்சலுடன் சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரி நீரை பெற்று தந்திருக்கிறார்...அவருக்கு ஜாதகத்தில் மக்கள் தலைவர் அமைப்பு உள்ளதால் அவர் இவ்வாறு செயல்பட முடிகிறது

சாதாரண மனிதர்கள் மகிழ்ச்சியான குடும்ப வழ்க்கையை தான் எதிர்பார்ப்போம் அதற்கு ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறது...ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு எப்படி என பார்த்தே திருமண பொருத்தம் பார்க்க வேண்டும்...

1 கருத்து:

raja சொன்னது…

சதீஷ்குமார் அவர்களுக்கு வணக்கம்,
பதிவுரை மிகவும் அற்புதம்.......

நான் துலா லக்னகாரென்.....லக்னத்தில் குரு........28ம் நெ. பாம்பு பஞ்சாங்கபடி கணிக்கப்பட்டது......................

12இல் சந்திரன்....சனி....செவ்வாய் மூவரும் ..............

சித்திரை 2ல் சந்திரன்(செவ்வாய் சாரம்), ஹஸ்தம் 3 ல் செவ்வாய்(சந்திரன் சாரம்), சித்திரை 1ல் சனி(செவ்வாய் சாரம்)...........

இது மட்டும் இன்றி.....12ல் உள்ள சனி 4ல் சுகஸ்தானத்தில் உள்ள
புதன் உடன் பரிவர்த்தனை............

புதன்(திருவோணம் 1ல் சந்திரன் சாரம்) ...சூரியனுடனும்(உத்ராடம் 2ல் சுயசாரம்)...... வக்கர சுக்ரனுடன்(திருவோணம் 2ல் சந்திரன் சாரம்).... பெற்று மூவரும் சுகஸ்தானத்தில்.....................

இந்த பதவின்படி நான் சன்னியாசி ஆக முடிவுமா சதீஷ்............