வசிய மையும்,மாந்திரீகமும்; உண்மையா.
வசிய மை,மாந்திரீகம்,பில்லி சூனியம் என்பது பொறுத்தவரை இதை செய்து தரும் மந்திர வாதிகள் ,கேரளாவில் அதிகம்..கொல்லிமலை,சேலம் மாவட்டங்களில் அதிகமாக இருக்கின்றனர்....பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர வைக்கவும்,பிரிந்திருக்கும் காதலர்களை ஒன்றாக மீண்டும் சேர வைக்கவும் இருவரது போட்டோ மற்றும் நட்சத்திரங்கள்,உபயோகப்படுத்திய துணி இவற்றைக் கொண்டு சில பூஜைகளை செய்து குறிப்பிட்ட மந்திர உரு போட்டு மை தயாரிக்கிறார்கள்...
கொல்லிமலையில் இருந்து மூலிகை பறித்து வந்து,வசிய மை,மாத்திரை தயாரித்து விற்கும் வைத்தியர் ஒருவரை இது சம்பந்தமாக நான் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, ஜோதிடத்தில் கிரகங்களின் சக்தியை மீறி எப்படி இது வேலை செய்யும்..? பிரிவுதான் நிரந்தரம் என்றால் அவர்களை எப்படி ஒன்று சேர்க்க முடியும் என்ற போது,அவர் சொன்னார்,சுக்கிரன் கெட்டா 7ஆம் இடம் கெட்டா குடும்ப வாழ்க்கை கெடும் என ஜோதிடம் சொல்லுது...பொதுவா காம இச்சை,காம உந்துதல் இல்லாமல் இருக்கும்..இதனால் கணவன் மனைவுக்குள் பிரச்சினை வருது...தாமபத்தியத்தில் அளவு கடந்த ஈடுபாடு அல்லது ஈடுபாடே இல்லாது இருந்தால் பிரச்சினை வரும்...இதைதான் ஜோதிடம் சொல்லுது..எங்கள் வசிய மருந்து அதை சரி செய்யுது...அதைதான் முதலில் செய்கிறோம்..அதன்பின் தானாகவே இருவருக்கும் நெருக்கம் உண்டாக்கும்..
சரி..நீங்க கொடுக்குற வசிய மருந்து காம இச்சை,அதிக காம உந்துதலை தருதுன்னு வெச்சிக்குவோம்..அப்போ அந்த உந்துதலில் வேற யார்கிட்டியாவது போயிட்டாங்கன்னா..? கள்ள காதால் விவகாரம் ஆயிடுச்சின்னா என்றேன் சிரித்துக்கொண்டே,..
சார் இதை யோசிக்காம இருப்போமா...அதுக்கு தனி ஃபார்முலா இருக்கு...யாரை நினைத்து மருந்து கொடுக்கிறார்களோ அவர்கள் இவரை நாடி வருவார்கள் என உறுதியாக சொன்னார்...வசிய மாத்திரை,வசிய மருந்துகளை காலம் காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திதான் வந்துல்ளனர்..இந்த மருந்துகளோடு இப்போது கேரள மாந்திரீகமும் சேர்ந்து இருக்கிறது...ஆனால் ஒரு மண்டலத்தில் நன்கு வேலை செய்யும்...இதில் உண்மையில்லாவிட்டால் எங்கள் குடும்பம்..பல நூறாண்டுகாலமாக கொல்லிமலையில் நாங்கள் இதை தொழிலாக செய்ய முடியாது என்றார்
5 கருத்துகள்:
உண்மைதான்! நானும் கேள்விப்பட்டுள்ளேன்!
Vasiyam marunthu venduma rs 1200 /-contact 9655077600
Vendum 8072449798
Vasiyam marunthu enaku vendum
கருத்துரையிடுக