மாந்திரீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாந்திரீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 டிசம்பர், 2012

வசிய மையும்,மாந்திரீகமும் உண்மையா.திகில் அனுபவம்

 வசிய மையும்,மாந்திரீகமும்; உண்மையா.

வசிய மை,மாந்திரீகம்,பில்லி சூனியம் என்பது பொறுத்தவரை இதை செய்து தரும் மந்திர வாதிகள் ,கேரளாவில் அதிகம்..கொல்லிமலை,சேலம் மாவட்டங்களில் அதிகமாக இருக்கின்றனர்....பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர வைக்கவும்,பிரிந்திருக்கும் காதலர்களை ஒன்றாக மீண்டும் சேர வைக்கவும் இருவரது போட்டோ மற்றும் நட்சத்திரங்கள்,உபயோகப்படுத்திய துணி இவற்றைக் கொண்டு சில பூஜைகளை செய்து குறிப்பிட்ட மந்திர உரு போட்டு மை தயாரிக்கிறார்கள்...


கொல்லிமலையில் இருந்து மூலிகை பறித்து வந்து,வசிய மை,மாத்திரை தயாரித்து விற்கும்  வைத்தியர் ஒருவரை  இது சம்பந்தமாக நான் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, ஜோதிடத்தில் கிரகங்களின் சக்தியை மீறி எப்படி இது வேலை செய்யும்..? பிரிவுதான் நிரந்தரம் என்றால் அவர்களை எப்படி ஒன்று சேர்க்க முடியும் என்ற போது,அவர் சொன்னார்,சுக்கிரன் கெட்டா 7ஆம் இடம் கெட்டா குடும்ப வாழ்க்கை கெடும் என ஜோதிடம் சொல்லுது...பொதுவா காம இச்சை,காம உந்துதல் இல்லாமல் இருக்கும்..இதனால் கணவன் மனைவுக்குள் பிரச்சினை வருது...தாமபத்தியத்தில் அளவு கடந்த ஈடுபாடு அல்லது ஈடுபாடே இல்லாது இருந்தால் பிரச்சினை வரும்...இதைதான் ஜோதிடம் சொல்லுது..எங்கள் வசிய மருந்து அதை சரி செய்யுது...அதைதான் முதலில் செய்கிறோம்..அதன்பின் தானாகவே இருவருக்கும் நெருக்கம் உண்டாக்கும்..

சரி..நீங்க கொடுக்குற வசிய மருந்து காம இச்சை,அதிக காம உந்துதலை தருதுன்னு வெச்சிக்குவோம்..அப்போ அந்த உந்துதலில் வேற யார்கிட்டியாவது போயிட்டாங்கன்னா..? கள்ள காதால் விவகாரம் ஆயிடுச்சின்னா என்றேன் சிரித்துக்கொண்டே,..

சார் இதை யோசிக்காம இருப்போமா...அதுக்கு தனி ஃபார்முலா இருக்கு...யாரை நினைத்து மருந்து கொடுக்கிறார்களோ அவர்கள் இவரை நாடி வருவார்கள் என உறுதியாக சொன்னார்...வசிய மாத்திரை,வசிய மருந்துகளை காலம் காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திதான் வந்துல்ளனர்..இந்த மருந்துகளோடு இப்போது கேரள மாந்திரீகமும் சேர்ந்து இருக்கிறது...ஆனால் ஒரு மண்டலத்தில் நன்கு வேலை செய்யும்...இதில் உண்மையில்லாவிட்டால் எங்கள் குடும்பம்..பல நூறாண்டுகாலமாக கொல்லிமலையில் நாங்கள் இதை தொழிலாக செய்ய முடியாது என்றார்

செவ்வாய், 27 நவம்பர், 2012

காஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம்

பெரியவர் மராத்தி மாநிலத்தில் பயணம் ஏதோ ஓர் ஊரில் (பூனா என்று சொன்ன ஞாபகம்) முகாம். அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர்(இப்போதைக்கு அவர் வம்பர் ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது மந்திரம் வைப்பது பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர் யாரிடம் நல்ல பெயர் இல்லாதவர்).

பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி 'நான் பெரியவனா இல்ல...அவர் 
பெரியவரான்னு பார்த்துவிடுகிறேன் இன்று என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும் இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்' என்றெல்லாம் கொக்கரித்து இருக்கிறார்.

அவர் குடும்பத்தார் மற்றும் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

அன்று பெரியவர் பூஜை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த வம்பரும் சென்று 'கடைசியில் கடைசியாய்' இருந்து கொண்டு கையில் மையை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்தார் செய்தார் செய்தார்.

அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார்.

பூசை முடிந்ததுஇ திருநீர் பிரசாத விநியோகம் இனிதே நடந்தது.

ஸ்வாமிகள் கை சொடுக்கி அழைத்தார் இவரை. இவருக்கோ ஒரே ஆச்சிரியம். எப்படி இந்த ஆயிரம் ஆயிரம் சனத்தில் நம்மை குறி வைத்து அழைக்கிறார். குறி வைத்து தான் விட்டாரே...

யாரை வசியப்படுத்துவேன் என்றாரோஇ அவரிடமே வசியப்பட்டு யாரை பொம்மை ஆக்குவேன் என்றாரோ அவரிடமே பொம்மையென சென்றார் அமர்ந்தார்.

ஐயன் அவரை உற்று பார்த்தார். பின் மெல்ல பகர்ந்தார்.

'பின்னாடி திரும்பி பார்'.

பார்த்தார் வம்பர். நடுநடுங்கினார்.

பின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும் ஐயனாய் தெரிந்தது அவருக்கு. ஆம் அத்துணை அத்துணை மகாபெரியவர் உருவங்கள்..

மேலே கீழே இடது வலது என்றெல்லாம் பார்க்க சொன்னார். எங்கெங்கு காணினும் ஐயனடா...

கதறி காலில் விழுந்தார். மன்னிக்க கோரினார். பாவமன்னிப்பு கேட்டார்.

சொன்னார் பெரியவர் 'சித்து பெரிய விஷயமே இல்லே ஒர்த்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே கெட்ட வழிலே இவ்வளவு பணம் பண்ணிருக்கே'.

'அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவம் போக்குகிறேன்'.

'இல்லே இன்னும் நிறைய இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதுனாலே அத்தனை பணத்தையும் நல்ல வழிலே செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணி வை ஏழை கொழந்தேளுக்கு. அவாள படிக்க வை அம்பாளை ப்ரார்த்திச்சிண்டே இரு. எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் பண்ணு நீயும் க்ஷேமமா இருப்பே'.

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகின்ற தீர்த்த பெருக்கு.தான் மஹா பெரியவர்.