செய்வினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்வினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜனவரி, 2016

வியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர்

ஸ்ரீபைரவர் தரிசனம்! - கழுகுமலை


ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும், ஸ்ரீராமரால் ஜடாயுவுக்கு சகல காரியங்களும் செய்யப்பட்டு, ஜடாயுப் பறவை மோட்சம் பெற்றார்..

இதையெல்லாம் ஸ்ரீஅனுமனின் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, ஸ்ரீராமரை வணங்கி, 'உடன் பிறந்தா னுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத சண்டாளன் நான். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேண்டினான். 'யானை முகம் கொண்ட மலையில், மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளை, ஆம்பல் நதியில் நீராடி, பூஜித்து வா! உன் பாவங்கள் நீங்கி, மோட்சம் பெறுவாய்’ என அருளினார் ஸ்ரீராமபிரான்.

அதன்படி, சம்பாதி எனும் கழுகு, ஆம்பல் நதியில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இதனால் அந்தத் தலம் கழுகுமலை என்றே அழைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது கழுகுமலை. இங்கேயுள்ள ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீகழுகாசல மூர்த்தி. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற அருமையான தலம் இது.
குடைவரைக் கோயில்களில், இந்த ஆலயமும் ஒன்று. சுமார் 330 அடி உயரம் உள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்தமண்டபமும் மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. உள்ளே கருவறையில், இடப்பக்கமாக நிற்கும் மயிலின் மேல், ஒரு முகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டு, இடது காலை மயிலின் கழுத்தில் வைத்து, வலது காலைத் தொங்கவிட்டபடி வெற்றிவேல் ஏந்திய ஸ்ரீகழுகாசல மூர்த்தியான முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும். அருகில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை ஆகியோர் காட்சி தருகின்றனர். உத்ஸவர் ஸ்ரீஆறுமுகநயினார் கொள்ளை அழகில் காட்சி தருகிறார்.

இங்கே உள்ள ஸ்ரீபைரவர் வெகு பிரசித்தம். சுமார் 7 அடி உயரத்தில், ஸ்ரீவடுகமூர்த்தியாக, வலது கரத்தில் கபாலம், இடது கரத்தில் கதை எனப்படும் தண்டாயுதத்துடன் சிவப்பரம்பொருளாக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீபைரவர்.

ஆடையின்றி, திகம்பரராகக் காட்சி தருவார் ஸ்ரீபைரவர். எட்டுத் திசைகளில் இருந்தும் அஷ்டதிக் பாலகர்கள் ஆடைகளாகக் காட்சி தருவதால், இவர் ஆடை அணிவதில்லை என்பர். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால வேளையில் ஸ்ரீபைரவ வழிபாடு ரொம்பவே விசேஷம். அதேபோல், பௌர்ணமி முடிந்த எட்டாம் நாள், தேய்பிறை அஷ்டமியை 'பைரவாஷ்டமி’ என்று சொல்வார்கள். அந்த நாளில் வழிபடுவதும் பிரார்த்திப்பதும் கூடுதல் பலனைத் தரும் என்பது ஐதீகம்!


அன்றைய தினம், ஸ்ரீபைரவருக்கு 21 வகை அபிஷேகங்கள் செய்து, புனுகு சார்த்தி, நெய் தீபமேற்றி, செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, அலங்கரித்து, வடைமாலை சார்த்தி வழிபட்டால், தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

ஸ்ரீபைரவருக்கு வடைமாலை சார்த்தி, தயிர்சாதம், காய்கறிகளால் செய்யப்பட்ட கலவை சாதம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், குடும்பத்தில் நிம்மதி நிலவும்; வியாபாரத்தில் வெற்றி உறுதி; பில்லி- சூனிய ஏவல் அனைத்தும் நீங்கி, நிம்மதியாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்

திங்கள், 9 பிப்ரவரி, 2015

பில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற

பில்லி,  சூனியம், சத்ரு பயம், பகைவர்  தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற

அய்யவாடி [ஐவர் பாடி];
இங்குள்ள  பிரத்தியங்கிரா  தேவி  ஆலயம்  18 சித்தர்கள்  பூஜித்தும்,  அகஸ்திய முனிவருக்குக்  காட்சி  தந்த ஸ்தலம்,  பஞ்ச பாண்டவர்  பூஜித்த  ஸ்தலமுமாகும்.  இத்தேவியைத் தரிசனம்  செய்தால் எல்லா  கஷ்டங்களும் நீங்கி  வேண்டும்  வரங்களப்  பெறலாம்.  அமாவசை அன்று  காலை 10 மணி முதல்  1 மணி வரை  நிகும் பல யாக பூஜை.  அருள் தரும்  மகா  பிரத்தியாங்கிரா  தேவி  ஆலயம் தமிழ் நாட்டில்  இங்கு  மட்டுமே  உள்ளது. செவ்வாய்க்கிழமை  நெய்  தீபம்  ஏற்றி  வழிபட  இழந்ததைப் பெறலாம்.  இவள்  மட்டுமே  16  பேறுகளை [செல்வங்கள்]  தரக் கூடியவள்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து 7.கி.மீ. தூரத்திலுள்ளது. [நாச்சியார்கோவில் செல்லும்  பாதையில்]

நாமக்கல்;  ஒன்பது  சித்தர்களால்  ஆராதிக்கப்பட்டு  உருவேற்றப்பட்ட  நரசிம்ம  மூர்த்தங்கள்  ஒன்பதில்  குறிப்பிடதக்க  சிறப்பினைப்  பெற்றது,  நாமக்கல் ஸ்ரீ  நரசிம்ம மூர்த்தி  இக்கோவிலுக்கு  18 அடி  உயர  கூப்பிய கரத்துடன்  நிற்கும் மிகப் பழமை  வாய்ந்த ஸ்ரீ ஆஞ்ச நேயரை  பூஜிப்பதால்  செய்வினைப்  பாதிப்புகள்  விலகுகின்றன.
வழித் தடம்;
சேலத்திலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ளது.

மதுரை- ஒத்தகடை;   ஒத்தகடை மெயின் ரோட்டில்  யானை  மலையின் பின்புறம்  யானை மலையின்  கீழ்  அமைந்துள்ளது. ஸ்ரீ யோக நரசிம்மர்  கோவில்.  இங்கு  நரசிம்மர்  யோக நிலையில்  காட்சி தரும் இவரை வழிபட பேய்,  பில்லி, சூன்யம்  விலகும்.  செவ்வாய் தோஷமுள்ளவர்  செவ்வாய்கிழமை  தோறும்  சிவப்பு வஸ்திரம்,  எலுமிச்சை  பானகம்  போட்டு  வணங்க  செவ்வாய்  தோசம்  நீங்கும்.

சிறுவாச்சூர்;  பில்லி- சூன்யம்  போன்றவற்றையே  தொழிலாக  கொண்டிருந்த  மந்தரவாதியை  அழித்து,  கோவில் கொண்டுள்ள  அம்மனான மதுரகாளியை  வழிபட்டால்  பில்லி- சூன்யங்கள் விலகி விடும்.  ஆதி சங்கரர்  வழிபட்ட ஸ்தலம்.  திங்கள், வெள்ளிக்கிழமை  மட்டும்  திறந்திருக்கும்.
வழித் தடம்;  திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில்  பெரம்பலூருக்குத் தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஐயர் மலை;
இம்மலையில்  பதினெட்டாம்  படி மிகுந்த சிறப்பு வாய்ந்தது.  மனச்சாட்சிப்படி  நடக்காதவராலும்  வாக்கு தவறியவராலும் பாதிக்கப்பட்டவர்கள்   இறைவனை  வழிப்பட்டு  பதினெட்டாம்  படியில்  சத்தியம்  செய்தால்  அதற்குண்டான பலன்  கிடைக்கும் என்று  நம்பப்படுகிறது.  இறைவன்;  இரத்தினகிரீசர் அம்மன்;  அரும்பார் குழலி.
இம்மலையடிவாரத்தில்  உள்ள கம்பத்தடியில் கட்டுக்கட்டினால்  பில்லி, சூனியம், ஏவல், செய்வினை முதலியவை  நீங்கி  நலம் கிட்டி  வருகிறது என்பது  தொன்று தொட்டு நடைபெற்று வருகிற நிகழ்ச்சியாகும்.
வழித் தடம்;  மணப்பாறை-குளித்தலை  சாலையில் உள்ளது.

கொல்லிமலை;    செய்வினை  ஒருவருக்கு  இருந்தால்  அதனை  சுலபமாக  அறியலாம்,  கை, கால் மூட்டுகளில்  வலி,  கண்களுக்குக்  கீழ்  கருப்பு  வளையம்  இருந்தால்,  தோல்  வியாதி, மனதில் சதா சலிப்பு போன்றவை  இருக்கலாம்.
எந்தக்  காரணமும்  இன்றி  கணவன்  மனைவிக்குள் சண்டை, சச்சரவு  ஏற்பட்டு நன்றாக்  நடந்து  கொண்டிருந்த  வியாபாரம்  மந்தமாகி  விடுதல்,  குழந்தை  பாக்கியமின்மை இவை  யாவும்  செய்வினை, ஏவல்  தோஷம்  ஆகும்.
இவை யாவும்  நீங்கிட  கொல்லிமலையில்  உள்ள எட்டுக்கை அம்மன்  எனப்படும். கொல்லிப்பாவை  ஆலயம் சென்று  வழிபடவும்.  செவ்வாய், வெள்ளி, அமாவசை,  பெளணமி  போன்றவை  கொல்லிப்பாவைக்கு  உகந்த நாட்கள்.
வழித் தடம்;  நாமக்கல்லில்   இருந்தும்  சேலத்திலிருந்தும் செல்லலாம். 

வியாழன், 10 ஜூலை, 2014

செய்வினை,இடுமருந்து உண்மையா..?புஷ்பக விமான உண்மைகள்

செய்வினை ,ஈடு மருந்து இதுவெல்லாம் உண்மை.பொய் கிடையாது...பலரும் இதை ரகசியமாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்..ஆனால் போலிகள் அதிகம்.ஆனால் உண்மை என்னெவெனில் இது மிக கொடூரமானது..அடுத்தவருக்கு மிக தீங்கு விளைவிக்ககூடியது..இதை செய்வது பாவம்.இதை யாருக்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்..எதிரிகளை அழிக்க பயன்படுத்த கூடியது..எதிரியின் மனநிலையை பாதிக்க செய்யக்கூடிய மூலிகைகளை உணவில் கொடுப்பதுதான் ஈடுமருந்து,செய்வினை எனப்படுகிறது.

அளவு க்டந்த கோபம் அடுத்தவரை கெடுக்க வேண்டும் அவன் வளரக்கூடாது என பொறாமைகுணம் உடையவர் தான் இதை செய்கிறார்கள்.சுழல் வண்டு,புல்லாமணக்கு,இந்திரகோபம்,குழியானை போன்றவை மனநிலையை மாற்றிவிடுகின்றன...சில ரசாயனங்கள் மனநிலையை எப்படி மாற்றுகிறதோ அதுபோல இந்த இயற்கை பொருட்களும் மாற்றும்.இதை எல்லோரும் தெரிந்துகொண்டால் ஆபத்து என்று எண்ணி குருவழிபாடமாக எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்பதை ஓலைச்சுவடியாக்காமல் மறைத்து வைத்தனர்..இல்லையெனில் எல்லோரும் பைத்தியமாகத்தான் சுற்ற வேண்டும்!!


ராவணன் சீதையை கவர்ந்து சென்று விடுகிறான்.சீதையை கவர்ந்த இடத்துக்கு ராமனும், லட்சுமணனும் வருகிறார்கள்.அங்கே தேர் சக்கரங்களின் தடம் மட்டும் தென்படுகிறது.சிறிது தூரம் அதனை பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள்.ஓரிடத்தில் அது மறைந்துவிடுகிறது..அப்படியானால் தேர் என்னவாயிற்று..?பூமியில் புதைந்திருக்க வேண்டும் அல்லது வானில் பறந்திருக்க வேண்டும்..புதைய வாய்ப்பில்லை...வான்வெளிப்பயணம் மட்டும்தான் இலங்கைக்கு ஒரே வழி.அப்படியெனில் சிறிது தூரம் ஒடி வானில் எழும்பி பறக்கிற விமானம் ராவணன் பயன்படுத்தி இருக்க வேண்டும்.கனரக விமானக்களுக்கெல்லாம் முன்னோடியாக ராவணனின் தேர் இருந்திருக்கிறது...பண்டைய இந்தியாவில் புஷ்பக விமானம்,மயில் பொறி என்ற பெயர்களில் ஹெலிகாப்டரை தயாரித்து, பயன்படுத்தி இருக்கிறார்கள் ....ரைட் சகோதரர்களுக்கெல்லாம் முப்பாட்டன் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள்!!

வெள்ளி, 1 மார்ச், 2013

செய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க;ஜோதிடம்

செய்வினைதோஷம் அகல, கெட்டசக்தி நீங்க:
    
பொதுவாக ஒரு ஜாதகத்தில் 6க்குடையவன் திசையில் எட்டுக்குடையவன் புக்தி நடக்கும் போதும், அஷ்டமாதிபதி திசையில், ருணரோகஸ்தானாதிபதி புக்தி நடந்தாலும், தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக புலம்புவர். பலகோயில்களுக்கும் சென்று வருவார். பலமந்திரவாதிகளையும் சென்று பார்ப்பார். அதிக மனக்குழப்பமும், பயமும், எதிரிகளை கண்டு அஞ்சி குடும்பமே கதறம்படி செய்துவிடுவார். இவர்களுக்கு மரகதபச்சையை அணிவிப்பது நல்லது. அறிவுக்கு அதிபதி புதன். இதனால் இவருக்கு மனதெளிவு உண்டாகும். தொழிலில் கவனம் செலுத்துவார்.
    
மற்ற ரத்தினங்களைவிட மரகதம் அழகும் சிறப்பும் மிக்கது. இதனாலேயே தெய்வ விக்கிரகங்களும், லிங்கங்களும் மரகதத்தால் அதிகம் செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் ஒரு மரகதலிங்கம் உள்ளது. இங்கு சென்று இந்தலிங்கத்தை கண்குளிர தரிசித்தால் பல நோய்கள் தீருகின்றன என்பது அனுபவஸ்தர்கள் கருத்து.
    நாகப்பட்டினம், திருக்குவளை, திருக்காதவாயல், திரவாயமூர், திருவாரூர், திருமறைக்காடு ஆகிய ஸத்தலங்களிலும் மரகதலிங்கம் உள்ளது.
    கன்னியாகுமரி அம்மனுக்கு மரகதபச்சை மூக்குத்தி சிறந்த அணிகலனாக பிரகாசித்து வருகிறது.
    திருப்பதி வெங்கடாஜலபதி உற்சவர் மார்பிலும், மரகதப்பச்சை மின்னுவதை காணலாம்.
    மரகதப்பச்சை வசிய சக்தி, வெகுஜனசக்தி உடையது. இதனால் வியாபாரிகள் இதனை அணிந்து கொண்டால், வியாபாரம் பெருகும். இவை கொலம்பியா நாட்டில் அதிகளவில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் காங்கேயம், பரமத்தி வேலூரிலும், இடைப்பாடியிலும் மத்திய தர மரகத பச்சைகள் கிடைக்கின்றன. ஜெய்ப்பூரில் செயற்கை மரகதப்பச்சைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் பட்டை தீட்டப்படுகின்றன. செயற்கை வைரம் எனப்படும் ஏடி (அமெரிக்கன் டைமண்ட்) அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    புதன் கிரகத்தின் தோஷ    ங்களை போக்கக் கூடிய பரிகாரஸ்தலமாக ஜோதிட நூல்கள் கூறும், மதுரை மீனாட்சி அம்மன் திருஉருவசிலை மரகதபச்சையால் ஆனதுதான்.
    அறிவு சிறக்க மதுரை மிக சிறப்பு. ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், புதன்திசை நடப்பவர்களும், 5,14,23 தேதிகளில் பிறந்தோரும் மரகதப்பச்சை மோதிரம் அணியலாம்.மிதுன லக்னம்,கன்னி லக்னத்தாருக்கு புதன் லக்னாதிபதியாகவும் யோகாதிபதியாகவும் வருவதால் அவர்கள் அவசியம் அணிய வேண்டியது.

 இதை ஐம்பொன்னில் மோதிரமாக செய்து அதில் பச்சைக்கல் பதித்து பூஜித்து கொடுத்து வருகிறோம்..எப்படி அணிவது எப்படி பயன்படுத்துவது என்று சில முக்கியமான குறிப்புகளையும் தருகிறோம் வாங்க விருப்பம் இருப்பவர்கள் என் மெயிலுக்கு உங்க பிறந்த தேதி,பிறந்த நேரத்துடன் எழுதவும் sathishastro77@gmail.com

செய்வினை அகல கோயில் வழிபாடு;

பெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வெள்ளி,திங்கள் கிழமை திறந்திருக்கும் அமாவாசை பெளர்ணமி அன்றும் திறந்திருக்கும் விக்கிரமாதித்யன் காலத்து கோயில் ஆகும் 2000 வருடம் பழமையானது...கெட்ட சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது...இங்கு சென்று எலுமிச்சையில் தீபம் ஏற்றி 108 எலுமிச்சை மாலை சார்த்தி அம்பாளை வணங்கலாம்..

கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாயும் கிருத்திகையும் வரும் நாளில் பழனி அல்லது சென்னிமலை அல்லது திருச்செந்தூர் சென்று வணக்கலாம்...சூரனை அழித்த இடம் என்பதால் திருச்செந்தூர் கெட்ட சக்திகளை அழிக்கும் ஒப்பற்ற கடவுளாக முருகன் திகழ்கிறார்

மாந்த்ரீகம்;

மாந்த்ரீக வழியில் சென்றுதான் செய்வினை தோசம் பலர் எடுக்கிறார்கள் யார் செய்வினை இருக்குன்னு சொல்றாரோ அவரேதான் வந்து எடுத்தும் தருகிறார் பல இடங்களில் ஏமாற்றும் நடக்கிறது...சேலம் மாவட்டம்,வேலூர் மாவட்டம்,தர்மபுரி,கரூர் பகுஹிகளில் செய்வினை தோசம் எடுப்பவர்கள் உள்ளனர் சிலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன்...

என் இரு வாடிக்கையாளர்கள் வற்புறுத்தி கேட்டதால் மாந்த்ரீகர் ஒருவரை என் நண்பர் மூலம் தொடர்புகொண்டேன்..செய்வினை வைக்கப்பட்டவர் வீட்டிற்கு வந்து அவர் கண் முன்பே குழி தோண்டி அதில் இருந்து நிறைய தகடுகள் ,முடி,எலும்பு என எடுத்தார் ஒரு செப்பு குடமும் இருந்தது எங்களுடன் வரும்போது அந்த மாந்த்ரீகர் வெறும் கையுடன் தான் வந்தார் செப்பு குடம் அதில் கரித்துண்டுகள்,ஆணி,குடும்பத்தார் அழியனும்னு எழுதப்பட்ட செப்பு தகடு இதெல்லாம் அந்த குடத்தில் இருந்தது இதெல்லாம் அவர் கொண்டு வந்திருக்க சான்ஸ் இல்லை..ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..அதுவரை அக்குடும்பத்தில் இருந்து வந்த     துர்மரணங்கள்,விபத்துகள்,மருத்துவ செலவுகள்,பெண்களுக்கு கெட்ட பெயர்,ஆண்களுக்கு வருமானம் இல்லாத நிலை எல்லாம் மாறியது...இப்போ அவங்க நல்லா இருக்காங்க..நான் இதை ஆதரிக்கவில்லை என் அனுபவத்தை சொல்றேன்..நம்புவது உங்க அனுபவத்தை பொறுத்து...!!

செவ்வாய், 27 நவம்பர், 2012

காஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம்

பெரியவர் மராத்தி மாநிலத்தில் பயணம் ஏதோ ஓர் ஊரில் (பூனா என்று சொன்ன ஞாபகம்) முகாம். அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர்(இப்போதைக்கு அவர் வம்பர் ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது மந்திரம் வைப்பது பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர் யாரிடம் நல்ல பெயர் இல்லாதவர்).

பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி 'நான் பெரியவனா இல்ல...அவர் 
பெரியவரான்னு பார்த்துவிடுகிறேன் இன்று என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும் இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்' என்றெல்லாம் கொக்கரித்து இருக்கிறார்.

அவர் குடும்பத்தார் மற்றும் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

அன்று பெரியவர் பூஜை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த வம்பரும் சென்று 'கடைசியில் கடைசியாய்' இருந்து கொண்டு கையில் மையை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்தார் செய்தார் செய்தார்.

அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார்.

பூசை முடிந்ததுஇ திருநீர் பிரசாத விநியோகம் இனிதே நடந்தது.

ஸ்வாமிகள் கை சொடுக்கி அழைத்தார் இவரை. இவருக்கோ ஒரே ஆச்சிரியம். எப்படி இந்த ஆயிரம் ஆயிரம் சனத்தில் நம்மை குறி வைத்து அழைக்கிறார். குறி வைத்து தான் விட்டாரே...

யாரை வசியப்படுத்துவேன் என்றாரோஇ அவரிடமே வசியப்பட்டு யாரை பொம்மை ஆக்குவேன் என்றாரோ அவரிடமே பொம்மையென சென்றார் அமர்ந்தார்.

ஐயன் அவரை உற்று பார்த்தார். பின் மெல்ல பகர்ந்தார்.

'பின்னாடி திரும்பி பார்'.

பார்த்தார் வம்பர். நடுநடுங்கினார்.

பின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும் ஐயனாய் தெரிந்தது அவருக்கு. ஆம் அத்துணை அத்துணை மகாபெரியவர் உருவங்கள்..

மேலே கீழே இடது வலது என்றெல்லாம் பார்க்க சொன்னார். எங்கெங்கு காணினும் ஐயனடா...

கதறி காலில் விழுந்தார். மன்னிக்க கோரினார். பாவமன்னிப்பு கேட்டார்.

சொன்னார் பெரியவர் 'சித்து பெரிய விஷயமே இல்லே ஒர்த்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே கெட்ட வழிலே இவ்வளவு பணம் பண்ணிருக்கே'.

'அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவம் போக்குகிறேன்'.

'இல்லே இன்னும் நிறைய இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதுனாலே அத்தனை பணத்தையும் நல்ல வழிலே செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணி வை ஏழை கொழந்தேளுக்கு. அவாள படிக்க வை அம்பாளை ப்ரார்த்திச்சிண்டே இரு. எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் பண்ணு நீயும் க்ஷேமமா இருப்பே'.

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகின்ற தீர்த்த பெருக்கு.தான் மஹா பெரியவர்.