பைரவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பைரவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜனவரி, 2016

வியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர்

ஸ்ரீபைரவர் தரிசனம்! - கழுகுமலை


ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும், ஸ்ரீராமரால் ஜடாயுவுக்கு சகல காரியங்களும் செய்யப்பட்டு, ஜடாயுப் பறவை மோட்சம் பெற்றார்..

இதையெல்லாம் ஸ்ரீஅனுமனின் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, ஸ்ரீராமரை வணங்கி, 'உடன் பிறந்தா னுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத சண்டாளன் நான். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேண்டினான். 'யானை முகம் கொண்ட மலையில், மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளை, ஆம்பல் நதியில் நீராடி, பூஜித்து வா! உன் பாவங்கள் நீங்கி, மோட்சம் பெறுவாய்’ என அருளினார் ஸ்ரீராமபிரான்.

அதன்படி, சம்பாதி எனும் கழுகு, ஆம்பல் நதியில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இதனால் அந்தத் தலம் கழுகுமலை என்றே அழைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது கழுகுமலை. இங்கேயுள்ள ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீகழுகாசல மூர்த்தி. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற அருமையான தலம் இது.
குடைவரைக் கோயில்களில், இந்த ஆலயமும் ஒன்று. சுமார் 330 அடி உயரம் உள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்தமண்டபமும் மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. உள்ளே கருவறையில், இடப்பக்கமாக நிற்கும் மயிலின் மேல், ஒரு முகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டு, இடது காலை மயிலின் கழுத்தில் வைத்து, வலது காலைத் தொங்கவிட்டபடி வெற்றிவேல் ஏந்திய ஸ்ரீகழுகாசல மூர்த்தியான முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும். அருகில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை ஆகியோர் காட்சி தருகின்றனர். உத்ஸவர் ஸ்ரீஆறுமுகநயினார் கொள்ளை அழகில் காட்சி தருகிறார்.

இங்கே உள்ள ஸ்ரீபைரவர் வெகு பிரசித்தம். சுமார் 7 அடி உயரத்தில், ஸ்ரீவடுகமூர்த்தியாக, வலது கரத்தில் கபாலம், இடது கரத்தில் கதை எனப்படும் தண்டாயுதத்துடன் சிவப்பரம்பொருளாக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீபைரவர்.

ஆடையின்றி, திகம்பரராகக் காட்சி தருவார் ஸ்ரீபைரவர். எட்டுத் திசைகளில் இருந்தும் அஷ்டதிக் பாலகர்கள் ஆடைகளாகக் காட்சி தருவதால், இவர் ஆடை அணிவதில்லை என்பர். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால வேளையில் ஸ்ரீபைரவ வழிபாடு ரொம்பவே விசேஷம். அதேபோல், பௌர்ணமி முடிந்த எட்டாம் நாள், தேய்பிறை அஷ்டமியை 'பைரவாஷ்டமி’ என்று சொல்வார்கள். அந்த நாளில் வழிபடுவதும் பிரார்த்திப்பதும் கூடுதல் பலனைத் தரும் என்பது ஐதீகம்!


அன்றைய தினம், ஸ்ரீபைரவருக்கு 21 வகை அபிஷேகங்கள் செய்து, புனுகு சார்த்தி, நெய் தீபமேற்றி, செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, அலங்கரித்து, வடைமாலை சார்த்தி வழிபட்டால், தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

ஸ்ரீபைரவருக்கு வடைமாலை சார்த்தி, தயிர்சாதம், காய்கறிகளால் செய்யப்பட்ட கலவை சாதம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், குடும்பத்தில் நிம்மதி நிலவும்; வியாபாரத்தில் வெற்றி உறுதி; பில்லி- சூனிய ஏவல் அனைத்தும் நீங்கி, நிம்மதியாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சொர்க்கம் நரகம் இருக்கிறதா ..நம்ப முடியாத உண்மைகள்

சொர்க்கம் ,நரகம் இருக்கிறதா...நிச்சயம் இருக்கிறது....நம்முடைய உயர்ந்த ,நல்ல எண்ணங்கள் ,செயல்பாடுகள் பொறுத்து இறந்த பின் அந்த ஆத்மா அதாவது ஆவி உருவம்..சந்திரனை நோக்கி சென்றால் வைகுண்டம்..மறுபிறப்பு உண்டு....அப்பிறவியில் சுகமான வாழ்க்கையுண்டு ....சூரியனை நோக்கி சென்றால் சொர்க்கம் மறுபிறவி இல்லை....இருள் கிரகமாகிய சனியை நோக்கி சென்றால் நரகம்....!! பல நூறு ஆண்டுகள் கஷ்டம் உண்டு....கருட புராணம் இதை சொல்கிறது .இந்த சட்டங்கள் வயோதிகம்,நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களுக்கு மட்டும்..விபத்து,தற்கொலை என இறப்பவர்களுக்கு அப்படி அல்ல...அவர்கள் ஆவி,பிசாசு எனப்படுகின்றனர்...இறந்த 20 அடிக்குள் அந்த ஆவி அலையும்..உயரக்கிளம்பவும் முடியாது..வெளியே செல்லவும் இயலாது..அருளாளர்களின் ஆசி கிடைத்தால்தாம் மோட்சம்.
 ------------------------------------------
பதார்த்த குண சிந்தாமணி எனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வைத்திய நூல் என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும் மற்றும் குணநலன் எப்படி மாறும் என விளக்கி உள்ளது.

உப்பு அதிகம் சேர்த்தால் ஆணவம் அதிகரிக்கும்...புளி அதிகமானால் பொறாமை குணம் அதிகரிக்கும்.தயிர் அதிகம் உண்டால் சோம்பேறித்தனம் உண்டகும்.மாமிசம் அதிகம் உண்டால் காம உணர்வை அடக்க முடியாது.காரம் அதிகமானால் கோபம் அதிகரிக்கும்.பச்சரிசி சாதம் மூளைக்கு பலம் கொடுக்கும்.கோதுமை உடலுக்கு பலம் கொடுக்கும்.இவற்றை சமமாக எடுத்துக்கொண்டால் பக்குவமாக வாழ முடியும்!!
 --------------------------------------------
 எல்லா கோயில்களிலும் இப்போதெல்லாம் கோயில் கர்ப்ப கிரகத்தில் அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகளை போட்டிருக்கின்றனர்....டியூப்லைட் ,மற்றும் பாதரச விளக்குகளின் பாதிப்பால் தேவதைகள் சக்தி இழக்கும்..இதனால் கோயிலில் இருக்கும் நன்மை செய்யும் தேவதைகள் வெளியேறக்கூடும்....நெய்தீபம்,மற்ரும் நல்லெண்ணெய் தீபம் மட்டுமே தேவதைகளை மகிழ்ச்சி படுத்தும்..அந்த இடத்தை சுற்றி சுற்றி வரும்!! வணங்குவோர்க்கு ஆசியும் கிடைக்கும்!!.

 -----------------------------------------------
ஜாதகத்தில் செவ்வாய்,சனி நன்றாக இருப்பவர்கள் கடுமையாக உழைத்து முன்னேறுகிறார்கள்..குரு,சுக்கிரன் நன்றாக இருப்பவர்கள் உழைக்காமல் அதிர்ஷ்டவசமாக சுலபமாக முன்னேறிவிடுகிறார்கள்...மாமனார் சொத்தோ ,தந்தை சொத்தோ அவர்களுக்கு இயல்பிலேயே சுகவாசியாக வாழ வைத்துவிடுகிறது..அல்லது பினாமியாக கூட இருக்கலாம் 
 ------------------------------------------------
 தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது..
 -----------------------------------------
 ஜாதகத்தில் மாந்தி என இருப்பதை பார்த்திருப்போம்..மாந்தி என்பது சனியின் புத்ரன் அகும்..மாந்தி பற்றி கேரள ஜோதிடர்கள் அதிகம் பயப்படுவர்..அதை பற்றியே பலன் சொல்வர்..தமிழகத்தில் சனிக்குதான் அதிக முக்கியத்துவம்..மாந்தி சனியின் பலன்களை ஒட்டியே இருக்கும்...சனி போலவே மாந்தி லக்னத்துக்கு மறைந்து இருந்தால் நல்லது 2,7 ஆம் இடங்களில் இருந்தால் திருமணம் லேட் ஆகும் ..குடும்பம் அமையாது என சொல்லப்படுவதுண்டு..6,10,11 ல் இருந்தால் நல்ல யோகத்தை தருகிறது