முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜனவரி, 2016

வியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர்

ஸ்ரீபைரவர் தரிசனம்! - கழுகுமலை


ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும், ஸ்ரீராமரால் ஜடாயுவுக்கு சகல காரியங்களும் செய்யப்பட்டு, ஜடாயுப் பறவை மோட்சம் பெற்றார்..

இதையெல்லாம் ஸ்ரீஅனுமனின் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, ஸ்ரீராமரை வணங்கி, 'உடன் பிறந்தா னுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத சண்டாளன் நான். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேண்டினான். 'யானை முகம் கொண்ட மலையில், மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளை, ஆம்பல் நதியில் நீராடி, பூஜித்து வா! உன் பாவங்கள் நீங்கி, மோட்சம் பெறுவாய்’ என அருளினார் ஸ்ரீராமபிரான்.

அதன்படி, சம்பாதி எனும் கழுகு, ஆம்பல் நதியில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இதனால் அந்தத் தலம் கழுகுமலை என்றே அழைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது கழுகுமலை. இங்கேயுள்ள ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீகழுகாசல மூர்த்தி. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற அருமையான தலம் இது.
குடைவரைக் கோயில்களில், இந்த ஆலயமும் ஒன்று. சுமார் 330 அடி உயரம் உள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்தமண்டபமும் மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. உள்ளே கருவறையில், இடப்பக்கமாக நிற்கும் மயிலின் மேல், ஒரு முகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டு, இடது காலை மயிலின் கழுத்தில் வைத்து, வலது காலைத் தொங்கவிட்டபடி வெற்றிவேல் ஏந்திய ஸ்ரீகழுகாசல மூர்த்தியான முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும். அருகில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை ஆகியோர் காட்சி தருகின்றனர். உத்ஸவர் ஸ்ரீஆறுமுகநயினார் கொள்ளை அழகில் காட்சி தருகிறார்.

இங்கே உள்ள ஸ்ரீபைரவர் வெகு பிரசித்தம். சுமார் 7 அடி உயரத்தில், ஸ்ரீவடுகமூர்த்தியாக, வலது கரத்தில் கபாலம், இடது கரத்தில் கதை எனப்படும் தண்டாயுதத்துடன் சிவப்பரம்பொருளாக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீபைரவர்.

ஆடையின்றி, திகம்பரராகக் காட்சி தருவார் ஸ்ரீபைரவர். எட்டுத் திசைகளில் இருந்தும் அஷ்டதிக் பாலகர்கள் ஆடைகளாகக் காட்சி தருவதால், இவர் ஆடை அணிவதில்லை என்பர். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால வேளையில் ஸ்ரீபைரவ வழிபாடு ரொம்பவே விசேஷம். அதேபோல், பௌர்ணமி முடிந்த எட்டாம் நாள், தேய்பிறை அஷ்டமியை 'பைரவாஷ்டமி’ என்று சொல்வார்கள். அந்த நாளில் வழிபடுவதும் பிரார்த்திப்பதும் கூடுதல் பலனைத் தரும் என்பது ஐதீகம்!


அன்றைய தினம், ஸ்ரீபைரவருக்கு 21 வகை அபிஷேகங்கள் செய்து, புனுகு சார்த்தி, நெய் தீபமேற்றி, செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, அலங்கரித்து, வடைமாலை சார்த்தி வழிபட்டால், தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

ஸ்ரீபைரவருக்கு வடைமாலை சார்த்தி, தயிர்சாதம், காய்கறிகளால் செய்யப்பட்ட கலவை சாதம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், குடும்பத்தில் நிம்மதி நிலவும்; வியாபாரத்தில் வெற்றி உறுதி; பில்லி- சூனிய ஏவல் அனைத்தும் நீங்கி, நிம்மதியாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்

திங்கள், 2 பிப்ரவரி, 2015

எண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு

நாளை தைப்பூசம்.தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்..நாளை காலை 3 மணிமுதல் ஆரம்பித்துவிடுகிறது உங்கள் இஷ்டதெய்வ கோயிலுக்கு செல்ல இதை விட நல்ல நாள் இருக்க முடியாது...! தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.இதன் உள் அர்த்தம் நம்மை தாழ்த்தும் கெட்ட சக்திகள் அழியும் நாள் ஆகும்..

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் ...


நம் முன்னோர் தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.சித்தர்கள் கூடும் திருவண்ணாமல்,சதுரகிரி போன்ற ஆலயங்கள் மிக சக்தி நிரம்பி வெளிப்படும்

கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்....
குலதெய்வம் கோயில் வழிபாடு,முருகன் வழிபாடு,சிவ வழிபாடு செய்ய அருமையான நாள்..தவற விடாதீர்கள்..நாளை இரவு பெளர்ணமியில் குடும்பத்தாருடன் நிலவொளியில் உணவு அருந்துங்கள் ..குடும்ப ஒற்றுமை மேம்படும்!! ‪#‎தைப்பூசம்‬ ‪#‎temple‬ ‪#‎thaipoosam‬

வியாழன், 6 பிப்ரவரி, 2014

உங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து இன்பங்கள் உண்டாக செல்ல வேண்டிய கோயில்

இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே....சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் நடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது.ஆலமரத்தை தல விருட்சமாகவும், மதுரை மீனாட்சி கோயிலைப் பொல பொற்றாமரை குளத்தையும் கொண்டது இந்த கோயில். தட்சிணாமூர்த்தி சன்னதி கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி ஆலமரத்தடியில் அமைந்துள்ளது.

தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை.திருமணம் ஆகாதவர்கள் பலர் இங்கு வந்து 108 முறை சுற்றி ஒரே மாத்த்தில் திருமணம் ஆகி ஜோடியுடன் இங்கு வந்து மீண்டும் வலம் வந்திருக்கிறார்களாம்..

விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம்...

  
ஒருவரது நடுவயதில் வரும் ஏழரை சனிக்கு பெயர் பொங்கு சனி ஆகும்...இதனை ரெண்டாவது ரவுண்ட் ரெட்டை வருமானம் என்பார்கள்..அதாவது வருமானம் அதிகரிக்கும்..தொழில் லாபம் உண்டாகும் என அர்த்தம்..அதுவும் கடுமையாக உழைத்தும்,முயற்சி செய்தால் மட்டுமே வரும்..கூரையை பித்து கொண்டு கொட்டாது..10 மணி நேரத்தில் முடிக்கவேண்டிய வேலை 12 மணி நேரம் ஆகும்.. சாதாரண கூலியாக இருந்து முதலாளி ஆகும் நிலைக்கு உயர்த்துவது பொங்கு சனிதான் அதே போல முதலாளியாக இருந்து ஆணவத்தால் ஆடுபவர்கள் அழித்து அவர்களை கூலியாக்குவதும் பொங்கு சனிதான்...
கொடுத்தவனே எடுக்கவும் செய்வான் ..கெடுக்கவும் செய்வான்..சனி நீதியறிந்து செயல்படுவதால்தான் அவர் உச்சமாக இருக்கும் 2014ல் எல்லா ஊழல் வழக்குகளும் சந்தி சிரிக்கின்றன..ஊழல்வாதிகளின் ஆணவ முகத்திரை கிழிக்கப்படுகிறது..மக்கள் பணத்தை சுரண்ட அனுமதி கொடுத்து வேடிக்கை பார்த்தவர்களின் ஆட்சியும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறது..


ஆழிப்பேரழையும் என் வாசல் நெருங்காது என திருச்செந்தூர் கோயில் கல்வெட்டு நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது போலவே ,சுனாமியை வென்ற சுப்ரமணியசுவாமியாக திருச்செந்தூர் முருகன் அருள் பாலிக்கிறார்..26.12.2012 அன்று வந்த சுனாமி திருச்செந்தூர் கோயிலை தொட முடியாமல் கடல் உள்வாங்கியது கடல் நீர் பின்னோக்கி சென்றது...இந்த இடத்தின் தெய்வீக சக்தியை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் அங்கிருந்த சிறிய சிவப்பு மலை மீது முருகன் கோயிலை உருவாக்கினார்கள்

இங்கு சிவனும் இருக்கிறார் இதனால் முன்னோர் வழி தோசம்,தந்தை மகனுக்கும் ஆகாத ஜாதகம் உடையவர் இங்கு வழிபட்டால் தோசம் தீரும் குருவாக முருகன் இங்கு இருப்பதால் குரு திசை நடப்பவர்கள் ஜாதகத்தில் குரு கெட்டவர்கள் ,மூளை சம்பந்தமான நோய் உடையவர்கள் இங்கு வழிபட்டால் பிரச்சினை தீரும்...நான் இரண்டு நாட்களாக அங்குதான் இருந்தேன்..சத்ரு சம்ஹார பரிகாரம்...மதுரையில் ஒரு அரசு உயர் அதிகாரிக்கு செய்து கொடுக்க சென்றிருந்தேன் நல்ல தரிசனம்..உங்களுக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்!!!

வியாழன், 3 நவம்பர், 2011

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2012-அரசியல் தலைவர்களுக்கு கண்டம்..?mars

செவ்வாய் பெயர்ச்சி ராசிபலன்கள்-அரசியல் தலைவர்களுக்கு கண்டம்..? mars

சனி பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி,குரு பெயர்ச்சி தெரியும்...அதென்ன செவ்வாய் பெயர்ச்சி..? செவ்வாய் கிரகமும் ஒவ்வொரு முறை பெயர்ச்சியாகும்போதும் ஒவ்வொரு பலனை ஒவ்வொரு ராசிக்கும் தருகிறது...ஆனால் சனி அளவு இல்லை எனினும் செவ்வாய் மங்களகாரகன் அல்லவா..? செவ்வாய் முருகன் அம்சம் அல்லவா..? அவர் பெயர்ச்சியானால் சில நன்மைகளும் நம் ராசிகளுக்கு நடக்கத்தான் செய்யும்.அதை பற்றி இந்திய வலைப்பதிவு உலகிலேயே முதன்முறையாக..சரி..சரி...விசயத்துக்கு வர்றேன்...செவ்வாய் பெயர்ச்சி ஐப்பசி 13 ஆம் தேதி,(அதாவது கடந்த ஞாயிற்றுகிழமை) திருக்கணித பஞ்சாங்கப்படி கடகம் ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு மாறியது.இதே ராசியில் செவ்வாய் 2012  ஜூன் வரை காணப்படுகிறார்.



அரசியல் கிரகம் எது..?

செவ்வாய்.

நிலம்,சொத்துக்களுக்கு அதிபதி கிரகம் எது..?

செவ்வாய்

பூகம்பம்,விபத்து,பெரும் நோய் இதெல்லாம் சம்பந்தம் ஆவது எந்த கிரகம்..?

செவ்வாய்.

பெண்களின் மாங்கல்ய பலத்துக்கு அதிபதி..அதாவது பெண்கள் ஜாதகத்தில் கணவனை பத்தி சொல்லும் கிரகம் எது..?

செவ்வாய்.

சகோதரனுக்கு காரகன்,(அண்ணன் தம்பி உறவு)கோபம்,வீரம்,ரோசம்,ஆத்திரம் இதெல்லாம் வருவது எந்த கிரகத்தின் ஆதிக்கத்தால்..?

செவ்வாய்

ராணுவம்,காவல்துறை...இவற்றுக்கு காரகத்துவம்..?

அதுவும் செவ்வாய்தான்.அப்படிபட்ட கிரகம் பெயர்ச்சியானா மேற்க்கண்ட விசயத்துல எல்லாம் ஒரு சலனமாவது உண்டாகுமா..? இல்லையா.நிச்சயம் உண்டாகும்.இதுவரை கடகத்தில் நீசமாக இருந்துவந்த செவ்வாய் என்ன பலன் கொடுத்து வந்தது என்றால் மேற்க்கண்ட விசயங்களில் எல்லாம் பலவீனத்தையே கொடுத்து வந்தது.பிரச்சனைகளை கொடுத்தது.கூடங்குளம் அனுமின் நிலைய போராட்டம் ,நில அபகரிப்பு வழக்குகளால் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் முடங்கி கிடந்தது,அரசியலில் குழப்பம் பல்வேறு செவ்வாய் காரகத்துவங்கள் எல்லாம் பலவீனப்பட்டன்.இனி செவ்வாய் கிரகம் காரகத்துவம் பெறும் எல்லா அமைப்புகளும் பலம் பெறும்.அப்போ கூடங்குளம் பிரச்சினை..? இன்னும் பெரிதாக வெடிக்கலாம்..அரசுக்கு சிக்கல் நேரலாம்..காரணம் செவ்வாய் சூரியன் வீட்டுக்கு வருவதால் அரசியல்வாதிகளுக்கும்,மத்திய மாநில அரசுகளுக்கும் பாதிப்பே.ஆளும்கட்சி தலைவர்களுக்கும் எதிர்கட்சி தலைவர்களுக்கும்,வயதான அரசியல் தலைவர்களுக்கும் இன்னும் ஒரு மாதம் கண்டம்தான்.அதனால்தானோ என்னவோ..இக்காலத்தில் தீர்ப்பு பெறக்கூடாது என ஜயலலிதா சொத்து குவிப்பு வழக்கை ஒரு மாதமாவது இழுத்தடிக்க வேண்டும் என மறுபடி சுப்ரீம்கோர்ட்டுக்கு மேல்முறையீடு செய்துவிட்டார்!!

பூகம்பம்,குண்டுவெடிப்பு,நாச வேலைகள்,ரயில்,விமான விபத்துகள் இந்த சிம்ம செவ்வாய் காலத்தில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கிறது என அனுபவம் வாய்ந்த ஜோதிட பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்...

செவ்வாயை யோகமான ராசியை கொண்டவர்களுக்கு இனி வரும் காலம் அதிர்ஷ்டம் தான் ..பொதுவாகவே திருமணம் தடை தாமத்த்தால் அவதிபடுபவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.இரும்பு,நெருப்பு சம்பந்தமான தொழில்கள்,இஞ்சினியரிங் தொழில்கள் சிறப்படையும்.ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் உடலில் இருப்போர் அது சம்பந்தமான சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது நல்ல நிவாரணம் தரும்.வண்டிவாகனங்கள் ,கார்,புதிதாக வாங்குவோர் க்கு நிலையான ராசியான வண்டி அமையும்.

செவ்வாய் தோசம் ஜாதகத்தில் 2,4,7,8,12 ல் இருந்தால் தோசமே.பரிகார செவ்வாய் என குழம்பிகொள்ள வேண்டாம்...இருவருக்கும் பரிகார செவ்வாய் எனில் பிரச்சினை இல்லை.பரிகார செவ்வாய் என்பது குரு,சுக்கிரன் வீடுகளில் செவ்வாய் இருந்தாலோ குரு,சுக்கிரனும் செவ்வாய் இருந்தாலோ சொல்லப்படுவதாகும்.

செவ்வாய் தோசம் முருகன் வழிபாடே சிறப்பு.உங்கள் பிறந்த நட்சத்திரம் அன்று முருகனை அபிசேகம் செய்து வழிபடுங்கள்.மலைமேல் இருக்கும் முருகன் ரொம்ப விசேசம்.

செவ்வாய் தோசம் உள்ளவர் செவ்வாய் தோசமில்லாதவரை திருமணம் செய்தால் தாம்பத்திய உறவு சந்தோசமாய் இருப்பதில்லை.குழந்தையும் ஊனமாக பிறக்க வாய்ப்பு உண்டு.

பழனி முருகன் அற்புதம்;செவ்வாய் குறிக்கும் தெய்வம் முருகன்.பழனிமலை செவ்வாய் கிரகத்தின் சக்தியை அதிகம் ஆகர்சிக்கும் இடம் என சொல்வார்கள்.அதனால்தான் போகர்  நவபாசண சிலையை அங்கு அமைத்தாராம்...செவ்வாய் நோயை கொடுப்பவரும் அவர்தான்..அதை குணமாக்குவதும் அவர்தான்.செவ்வாய் பலம் குறைந்தவருக்கு உடல்நலிவு ஏற்படும்.உடம்பில் பலம் குறைவு.செவ்வாய் பலம் பெற்றவர் சிங்கம்போல கம்பீரமாக இருப்பார்.பழனி மலை போகர் செய்த நவபாசண சிலையில் சந்தனம் அபிசேகம் செய்து அக்காலத்தில் மன்னர்களும் மக்களும் அந்த அபிசேக சந்தனத்தை தீர்த்தமாக பருகினர்.இதனால் தீராத வியாதியும் தீர்ந்து வந்தது..நலிஞ்ச பிள்ளையும் உடல்வலிமை பெற்றது.இப்போது பல அரசியல்வாதிகளாலும் நடிகர்களாலும் அச்சிலை முழுவதும் நவபாசாணம் சுரண்டப்பட்டு எலும்புகூடாக காட்சி தருகிறது.முருகன் கோயிகளின் அமானுஷ்யங்கள்நிறையஇருக்கின்றன..சென்னிமலை,சிவன்மலை,பழமுதிர்சோலை,திருப்பரங்குன்றம், பழனி,திருச்செந்தூர்,கதிர்காமம்,நல்லூர் ஆயக்குடி,வயலூர்,திருத்தணி முருகன் கோயில்கள் பற்றிய அமானுஷ்ய தகவல்கள் திரட்டி வருகிறேன்..உங்களுக்கு தெரிந்த செய்திகள் தனி மெயிலில் அனுப்பலாம்..

பகுத்தறிவு பேசும் அப்பாடக்கர்கள் சிந்தனைக்கு;,இன்றைய விஞ்ஞானம் சந்திரனுக்கு ராக்கெட் விடுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கிரகம் சிவப்பாக சூரியனை சுற்றி வருகிறது என தனது மெய் ஞானத்தால் கண்டறிந்து,அதற்கு சிவப்பு வாய் அதாவது செவ்வாய் என பெயர் வைத்து ஓலை சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு சென்றார்களே..அது எப்படி என நீங்கள்..யோசிக்க வேண்டும்!!

இதையும் படிங்க ;விஜயகாந்த் கட்சி அவ்வளவுதானா..?-குமுதம்


செவ்வாய் தோசமும்,கல்யாண தாமதமும்