இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே
தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே....சிவபெருமான்
நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் நடந்த
தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும்
விசேஷமானது.ஆலமரத்தை தல விருட்சமாகவும், மதுரை மீனாட்சி கோயிலைப் பொல
பொற்றாமரை குளத்தையும் கொண்டது இந்த கோயில். தட்சிணாமூர்த்தி சன்னதி
கோயிலின் வெளியே தனியாக கிழக்கு நோக்கி ஆலமரத்தடியில் அமைந்துள்ளது.
தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது நம்பிக்கை.திருமணம் ஆகாதவர்கள் பலர் இங்கு வந்து 108 முறை சுற்றி ஒரே மாத்த்தில் திருமணம் ஆகி ஜோடியுடன் இங்கு வந்து மீண்டும் வலம் வந்திருக்கிறார்களாம்..
விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம்...

ஒருவரது
நடுவயதில் வரும் ஏழரை சனிக்கு பெயர் பொங்கு சனி ஆகும்...இதனை ரெண்டாவது
ரவுண்ட் ரெட்டை வருமானம் என்பார்கள்..அதாவது வருமானம் அதிகரிக்கும்..தொழில்
லாபம் உண்டாகும் என அர்த்தம்..அதுவும் கடுமையாக உழைத்தும்,முயற்சி
செய்தால் மட்டுமே வரும்..கூரையை பித்து கொண்டு கொட்டாது..10 மணி நேரத்தில்
முடிக்கவேண்டிய வேலை 12 மணி நேரம் ஆகும்.. சாதாரண கூலியாக இருந்து முதலாளி
ஆகும் நிலைக்கு உயர்த்துவது பொங்கு சனிதான் அதே போல முதலாளியாக இருந்து ஆணவத்தால் ஆடுபவர்கள் அழித்து அவர்களை கூலியாக்குவதும் பொங்கு சனிதான்...
கொடுத்தவனே எடுக்கவும் செய்வான் ..கெடுக்கவும் செய்வான்..சனி நீதியறிந்து செயல்படுவதால்தான் அவர் உச்சமாக இருக்கும் 2014ல் எல்லா ஊழல் வழக்குகளும் சந்தி சிரிக்கின்றன..ஊழல்வாதிகளின் ஆணவ முகத்திரை கிழிக்கப்படுகிறது..மக்கள் பணத்தை சுரண்ட அனுமதி கொடுத்து வேடிக்கை பார்த்தவர்களின் ஆட்சியும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறது..

ஆழிப்பேரழையும்
என் வாசல் நெருங்காது என திருச்செந்தூர் கோயில் கல்வெட்டு நூறு
ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது போலவே ,சுனாமியை வென்ற சுப்ரமணியசுவாமியாக
திருச்செந்தூர் முருகன் அருள் பாலிக்கிறார்..26.12.2012 அன்று வந்த சுனாமி
திருச்செந்தூர் கோயிலை தொட முடியாமல் கடல்
உள்வாங்கியது கடல் நீர் பின்னோக்கி சென்றது...இந்த இடத்தின் தெய்வீக
சக்தியை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் அங்கிருந்த சிறிய சிவப்பு மலை மீது
முருகன் கோயிலை உருவாக்கினார்கள்
இங்கு சிவனும் இருக்கிறார் இதனால் முன்னோர் வழி தோசம்,தந்தை மகனுக்கும் ஆகாத ஜாதகம் உடையவர் இங்கு வழிபட்டால் தோசம் தீரும் குருவாக முருகன் இங்கு இருப்பதால் குரு திசை நடப்பவர்கள் ஜாதகத்தில் குரு கெட்டவர்கள் ,மூளை சம்பந்தமான நோய் உடையவர்கள் இங்கு வழிபட்டால் பிரச்சினை தீரும்...நான் இரண்டு நாட்களாக அங்குதான் இருந்தேன்..சத்ரு சம்ஹார பரிகாரம்...மதுரையில் ஒரு அரசு உயர் அதிகாரிக்கு செய்து கொடுக்க சென்றிருந்தேன் நல்ல தரிசனம்..உங்களுக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்!!!

1 கருத்து:
பட்டமங்கலம் செல்ல வேண்டும் என்று நினைப்பது உண்டு... இதுவரை செல்லவில்லை..
கருத்துரையிடுக