வியாழன், 30 ஜனவரி, 2014

தை அமாவாசை அன்னதானம் ,ஆடைதானம்

தை அமாவாசைக்கு அன்னதானம் செய்ய்ப்போவதாக சொல்லி இருந்தேன் இன்று காலை குமாரபாளையம் கண்பார்வையற்றோர் இல்லத்தில் 110 பேருக்கு அன்னதானம் நண்பர்கள் சார்பில் செய்யப்பட்டது...முதியோர் இல்லத்தில் அங்கிருந்த பெரியோர்களுக்கு வேஷ்டி,சேலை வழங்கப்பட்டது..



போன வாரம் பிஸ்கட் பழம் எல்லாம் கொடுக்க சென்றிருந்தபோது அந்த முதியோர் இல்லத்தில் ஒரு வயதான அம்மாவை பார்த்தேன்...அவர் புடவை மிகவும் கிழிந்து பழையதாக இருந்தது...அடுத்த முறை அன்னதானம் கொடுக்க வரும்போது,இவருக்கும் சேர்த்து எல்லோருக்கும் சேலை வேஷ்டி வாங்கி தரனும்னு ஆசைப்பட்டேன்.....இன்று அந்த அம்மவை தேடிப்போய் சேலை கொடுத்தபோது உணர்ச்சிப்பெருக்கில் என் காலில் விழுந்துவிட்டார் நான் அதிர்ச்சியாகி அம்மா உதவி செய்ய வந்த இடத்தில் என்னை பாவம் சுமக்க வைத்துவிடாதீர்கள்...என்னை உங்கள் மனதால் வாழ்த்தினாலே ரொம்ப சந்தோசப்படுவேன் என சொன்னேன்...சங்கடமான தருணம் அது..
அன்னதானம் மற்றும் ஆடை தானம் செய்வதற்கு நண்பர்கள் சிலர் பங்களிப்பு செய்தனர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ...அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் பூரண உடல்நலம் ,மனநலம் ,நிறை செல்வம் ,நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும் ....காளியம்மன் கோயில் மற்றும் லட்சுமி நாராயணன் சுவாமி ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தார் பெயரிலும் செய்யப்பட்டது .....அடுத்து மாசிமகம் அல்லது பங்குனி உத்திரம் செய்ய உத்தேசம்...முன்கூட்டி தகவல் நம் இணையதளத்தில் காணலாம்..சுபமஸ்து !!!

கருத்துகள் இல்லை: