சென்னிமலை
முருகன் கோயில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிக உகந்த
ஸ்தலம்..ரத்த அழுத்தம்,நீரிழிவு நோயாளிகள் இங்கு வழிபட்டால் விரைவில் நோய்
குறையும் ..உங்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயின் தாக்கம்
குறையும்..காங்கேயம் சிவன்மலை முருகன் குருவின் அம்சம்.,..கல்வியில்
முன்னேற்றம் அடைய இந்த முருகனை வழிபட்டால் நல்ல ரிசல்ட்
கிடைக்கும்..வெளிநாடு வேலைக்கு செல்ல முயற்சிப்பவர்கள் திருச்செந்தூர்
முருகனை தரிசிக்க விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்!!
கல்வியில் நல்ல மதிப்பெண் பெற ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் சுபர் இருக்கனும் 4ல் சுபர் இருக்கனும் குரு,புதன் கெடாமல் பாவிகளுடன் சேராமல் இருக்கனும்...2,4ல் கேது இருக்க கூடாது புதனுடன் கேது சேரக்கூடாது.குரு திசையோ புதன் திசையோ படிக்கும் காலத்தில் நடந்தால் அக்குழந்தைகள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள்.
அருகில் இருக்கும் முருகன் கோயிலில் வியாழன் தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்...அம்மா மட்டும் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டா போதாது மகன் மகளையும் அப்படி பழக்கனும்..அவனுக்கு சாமின்னாலே பிடிக்காது நீயே கும்பிடுன்னு எரிஞ்சு விழுவான் என சில பெற்றோர் பெருமையாக சொல்வார்கள்...இது தப்பு ..சின்ன வயதில் இருந்து நாம் பழக்கவில்லைஎன்று அர்த்தம்.அவன் இஷ்டத்துக்கு இன்று அவனை விடும்போது நாளை அவன் தன்னை யார் கேட்பா என துணிச்சலை கொடுத்துவிடும்.
முருகன் கோயில் அல்லது அரசு வேம்பு இணைந்து இருக்கும் வினாயகர் கோயிலில் உங்கள் குழந்தையை தினசரி காலையில் 3 முறை வலம் வந்து வழிபட்டு பின் படிக்க சொல்லுங்கள்..இது தேர்வு நேரத்தில் கூட செய்யலாம் இதனால் மனதில் தன்னம்பிக்கையும் அதிகரித்து மனதில் பயம் குறையும்...கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்..அரச மரமும் வேப்பமரமும் குருவின் அம்சம்..குரு ஞானம் எனும் கல்வியை கொடுக்கும் கிரகம்.கடவுள் பார்த்துப்பார் என்ற நம்பிக்கை வந்தால் உங்கள் மகன் பதட்டமில்லாமல் தேர்வு எழுதுவான்... நல்ல மதிப்பெண்ணும் பெறுவான்..
தை அமாவாசைக்கு அன்னதானம் வழங்க ,ஏற்பாடுகளை செய்ய ஆதரவற்ற பார்வையற்றோர் காப்பகம் சென்றேன் ...வயதான முதியவர்களும் நிறைய இருந்தனர் ...அங்கிருந்த ஒரு பாட்டிக்கு தின்பண்டம் கொடுத்தபோது உள்ளே ஒரு பாட்டி படுத்திருக்கும் அதுக்கும் கொடு தம்பி என தன் தோழி மீதான பாசத்தை காட்டிய போது நெகிழ்ச்சியாக இருந்தது ...!பாசக்காரங்க எல்லாம் தனிமையில் வாடுவது கொடுமை ..அங்கிருந்த 40 முதியோர்களுக்கும் தின்பண்டம் கொடுத்துவிட்டு பேசிவிட்டு வந்தேன் ...மனசு லேசாக இருந்தது.....தை அமாவாசை அன்னதானம் பங்களிக்க விரும்புவோர் மெயில் செய்யலாம் sathishastro77@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக