மனைவி அமைவது மட்டுமல்ல.. குழந்தை பிறப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்...குழந்தை இல்லாமல் கோயில் கோயிலாக சுற்றுபவர் பலர் இருக்க ,ஆண் குழந்தை வேண்டும் என கோயில் கோயிலாக சுற்றுபவர்களும் உண்டு.
ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் தான் விந்தணு எனும் உயிர் அணுக்களுக்கு அதிபதி அவர் கெடாமல் பகை கிரகங்களுடன் கூடாமல் இருப்பது அவசியம் பெண் ஜாதகத்தில் பாக்ய ஸ்தானத்தில் ராகு கேது செவ்வாய் சூரியன் போ
ன்ற கிரகங்களில் யாரேனும் இல்லாமல் இருக்க வேண்டும் ..ஆண் ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் கேது,செவ்வாய் ,சனி இவற்றில் ஒருவர் இல்லாமல் இருப்பது நல்லது.அப்படி இருப்பினும் 5ஆம் அதிபதி,குரு,சுக்கிரன் கெடாமல் இருப்பது அவசியம்...
கெள்சிக சிந்தாமணி எனும் பழைய ஜோதிட நூலில் ஒரு பாடல் குழந்தை பாக்யம் பற்றி கீழ்க்கண்டவாறு சொல்கிறது.
சத்தம தானத்தாதி சஷ்டாஷ்ட விரையஞ் சார்ந்த
மெத்த ஐந்திடத்திற் காரி மேவிடிலதுவும் தீது
சுத்தமாய் மண்முடிக்கில் சுதனிலை என்று வேத
வித்தகம் தனக்கு உண்மை விரும்பிகோசிகன்
உரைத்தேன்
சூட்சும விதிப்படி ஒளி இழந்த கிரகம் ஐந்தில் இருந்தாலும் ஒளி இழந்த வீட்டில் ஐந்தாம் அதிபதி நின்றாலும் ஐந்தாம் வீட்டில் சனி நின்றாலும் ஏழாம் அதிபதி பலம் இழந்தாலும் தவமாய் தவமிருந்தாலும் புத்திர பேறு கிடைக்காது.
தை அமாவாசை அன்னதானம்;
நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com
k.sathishkumar
state bank of india
bhavani
20010801181
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக