திங்கள், 20 ஜனவரி, 2014

காதலியை மனைவியாக பெறும் யோகம் யாருக்கு..? ஜோதிடம்

காதல் இல்லாமல் இன்றைய சினிமா இல்லை...புது புது ரகமாக காதலை சொல்லிக்கொடுக்கும் சினிமாக்கள் வெள்ளிதோறும் ரிலீஸ் ஆகின்றன...நாமும் காதலிக்காவிட்டால் நம்மை மனித இனத்தில் இருந்தே ஒதுக்கிவிடுவார்கள் என்ற நெருக்கடியை இன்றைய சினிமா இளம் தலைமுறை மத்தியில் உருவாக்கி விட்டது...சின்ன பொண்ணுங்க கூட அது என் ஆளு என பெருமையாக சொல்லும் அளவுக்கு இன்றைய நிலைமை இருக்கு.

பத்தாவது படிக்கும் பெண்கள் கூட,இன்று பெரும்பாலும் காதலில் விழ அஜித்,விஜய் சினிமாக்களும் முக்கிய காரணம்.கூட படிக்கிற தன் தோழிகள் காதலில் ஊறி திளைக்கும்போது தனக்கும் பாய்ஃப்ரெண்ட் வேண்டும் எனும் கெள்ரவத்துக்காக காதலிக்கும் பொண்ணுங்களும் இருக்காங்க..அப்போ பசங்க இல்லையான்னு கேட்காதீங்க..பசங்கதான் இந்த விசயத்துல மெஜாரிட்டியா இருக்காங்களே..பொண்ணுங்களும் இப்ப பசங்க அளவுக்கு வந்துக்கிட்டு இருக்காங்க பசங்கலை போல பொண்ணுங்களும் லவ் லெட்டெர் எல்லாம் கொடுத்து ப்ரப்போஸ் பண்ணும் நிலை சாதாரணமாகிவிட்டது!! 

காதல் எல்லாமே கண்ணாமூச்சி..அவன் பொழுதுபோக்குக்கு, ஒருஃபிகர பாக்கறான்.. அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா..என ஒரு படத்தின் பாட்டு இன்றைய காதலின் நிலையை தெளிவாக் சொல்கிறது...

சரி..இதையெல்லாம் மீறி...தெய்வீக காதல்! செய்து,காதலில் யார் வெற்றி பெறுகிறார்கள்..காதலியை யார் மனைவியாக அடைகிறார்கள்..? காதல் வாழ்க்கையை வெற்றிகரமாக யார் வாழ்கிறார்கள்..? ஜோதிடம் அதற்கு என்ன சொல்கிறது..?

ஒரு ஜோதிட பாடல் அக்காலத்திலேயே அழகாக விளக்கி இருக்கிறது இதுதான் இன்று வரைக்கும் ஜோதிடர்களுக்கு அடிப்படை பாடம்.

கூறும் ஏழாமிடத்தான் குணமிகு நவத்தில் தோன்றிட
சீறும் பஞ்சமித்தோன் இன்பமாய் இணைந்திட்டாலும்
ஏறும் பாக்கியத்தோன் இருவரையும் கண்ணூற்றாலும்
மாறும் புவியில் பிறந்தோன் காந்தருவம் புரிவன் தானே!

ஐந்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் மூவரும் கூடி திரிகோண கேந்திரத்தில் தனலாபத்தில் இருந்து சுபர் பார்வை பெற்றால் அவர்களுக்கு ஏற்படும் காதல்,திருமணத்தில் முடிந்து நீடித்த மகிழ்ச்சியை தரும் என்பது உறுதி.மத்த காதல் எல்லாம் திருமணத்தில் முடிந்தாலும் நீடிக்காது பிரிவினையை உண்டாக்கும்...5,7,9 ஆம் அதிபதிகள் கூடினால் காதல்தான்..காதல் கல்யாணத்திலும் முடியும்தான் ஆனா 5,7,9 அதிபதிகள் 6,8,12ல் மறைந்திருந்தால் கல்யானம் ஆன சில நாட்களில் இருவரும் பிரிவர்...
ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிக்கும் ,மகிழ்ச்சிக்கும்,யோகத்திற்கும் காதல் திருமணத்துக்கும் குருபகவானும் ஒன்பதாம் அதிபதியும் அருள் புரிய வேண்டும்!!


தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181

கருத்துகள் இல்லை: