காது கேளாத,வாய்பேச முடியாத குழந்தைகள் பள்ளியில் குருபூஜை பரிகாரமாக அன்னதானம் செய்யப்போவதாக சொல்லி இருந்தேன்.. அது இன்றைக்கு உங்களின் ஆதரவால் சிறப்பாக நடைபெற்றது.......
சாதம்,சாம்பார்,ரசம்,பொறியல்,வடை என அனைத்தையும் வீட்டிலியே சமைத்து எடுத்து சென்றிருந்தோம்..சுமார் 82 குழந்தைகள் ..மதியம் 2 மணிக்கு உணவு வழங்கப்பட்டது...குரு கிரகத்தின் பாதிப்பால் அவதியுறும் சில ராசியினருக்கு அன்னதானம் செய்வது நல்லது என சொல்லி இருந்தோம் அஷ்டம சனி ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ள மீனம்,துலாம்,கன்னி,விருச்சிகம் ராசியினருக்கும் பரிகாரமாக இதை சொல்லி இருந்தோம் இதை செய்யமுடியாதவர்கள் எங்களுடன் கலந்துகொள்ளலாம் என சொல்லி இருந்தேன் அதன் பேரில் உதவி செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றி...அக்குழந்தைகள் உங்களுக்காக உங்கள் குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்தபின் உணவு உண்டது மனதை நெகிழ செய்தது...!! நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக