வியாழன், 9 ஜனவரி, 2014

2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்..? ஜோதிட கணிப்பு

கர்மகாரகன் சனியும் சுபகிரகமான குருவும் உச்சமாக ஒரே நேரத்தில் இருக்கப்போகும் ஆண்டு 2014 தான்.இதற்கு முன் முப்பதாண்டுகளுக்கு முன்பு,.1984ல் சனி மட்டுமே உச்சமாக இருந்தது ....84ல் தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் நாடு முழுவதும் கடும் கலவரம் பல்லாயிரம் சீக்கியர் படுகொலை நடந்தது..ஆனால் சனி மட்டும் உச்சமாக இருந்ததால் அந்த விளைவுகள் உண்டானது ...சனி உச்சமாகும்போது ஒரு பெரிய விளைவை உண்டாக்குவார்..அந்த ஆண்டுதான் போபால் விஷ வாயு வால் 20,ஆயிரம் மக்கள் பலியாகினர்...2013ல் சனி உச்சமானதும்,நடந்த பெரும் கோர விபத்து என்றால் உத்ரகாண்ட் தான்...50,000 மக்களாவது பலியாகி இருப்பர்...1954 ஆம் ஆண்டுதான் சனியும் குருவும் உச்சமாகி இருந்தது..அந்த ஆண்டு எப்படி இருந்தது என பார்த்தால் 2014 ஓரளவு அனுமானிக்க முடியும்...

 காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆன் ஆண்டு 1954...அவர் கர்மவீரர் என போற்றப்பட்டவர்..அதாவது கர்மகாரகன் எனப்படும் சனி உச்சம் ஆன ஆண்டில்.முதல்வர் ஆகியிருக்கிறார்...இவர்தான் பல பாலங்கள்,அணைகள்,பள்ளிக்கூடங்களை கட்டியவர்..பல அரசு நிறுனங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தார்..அனல்மின் நிலையம்,துப்பாக்கி தொழிற்சாலை,பெல் எல்லாம் இவர் கொண்டு வந்தவை.அதன்பின் இப்போதுவரை இவர்போல யாரும் தமிழகத்தை கட்டமைத்தது இல்லை...அந்த 1954 இல் தான் சனியும் குருவும் உச்சம் ஆகி இருந்தது..அதாவது இக்கிரகங்கள் முழுமையான சக்தியுடன் இருக்கும் காலம்...அதன்பின் 2014 ல் தான் சனியும் குருவும் உச்சமாகப்போகிறது!!

 நவகிரகங்களில் நல்ல கிரகங்களின் ஹீரோ குருதான்..அவர் உச்சம் ஆகும்போது நல்லது பல மக்களுக்கு நடக்கனும் என்பது விதி..அப்போ மே மாதத்தில் தேர்தல் முடிந்து ,நல்ல பிரதமர் ஒருவர் நமக்கு அமைவார் அவர் இந்த உலகமே வியக்கும்படியான இந்திய மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்படியான நல்ல காரியங்களை செய்வார் என எதிர்பார்க்கிறேன்..லஞ்சம்,ஊழல்,காலதாமதம் இல்லாத அரசு நிர்வாகம்,வறுமை இல்லாத செல்வவளம் கொழிக்கும் இந்தியாவாக மாறும் என நம்புகிறேன்...!!!


ராசிப்படி குருப்பெயர்ச்சி பலன்கள் எழுதுவதுதான் வழக்கம் ஆனால் லக்னப்படியும் குரு பெயர்ச்சி எப்படி இருக்குன்னு பார்ப்பது அவசியம்..லக்னமும், ராசியும் ஒண்ணா இருப்பவர்களுக்கு அந்த சலுகையும் போச்சு..உதாரணமா ஜெயலலிதா அவர்களுக்கு சிம்ம ராசி...ராசிக்கு குரு 12ல் மறையப்போகிறார்..ஆனா லக்னத்துக்கு 2ல் உச்சம் அடைகிறார் இது சாதகம்தான்..கருணாநிதிக்கு ராசிக்கு 3ல் குரு மறைகிறார்...தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என ஜோதிட பாடல் சொல்கிறது..துரியோதனின் அத்தனை ராஜதந்திரமும் பலிக்காமல் அவன் படை மாண்டுவிட்டதாம்...அவர் லக்னப்படி ஜென்மத்துக்கு வருகிறார் ஜென்ம ராமர் சீதையை வனத்திலே சிறைவைத்ததும் ஜென்ம குருவில்தான் என பழம்பாடல் சொல்கிறது.அதாவது ஜென்ம குரு சிறைபடுவது போல இருக்குமாம்...இருவரில் யாருக்கு திசாபுத்தி சாதகமா இருக்கோ அவங்களுக்கு இன்னும் பலம் உண்டாகும் இது பெருசா பாதிக்காது..திசாபுத்தி பாதகமா இருந்தா அவங்களுக்கு இன்னும் பலவீனம்தான்!!


தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181

1 கருத்து:

surferzworld சொன்னது…

Can u suggest me names starting with m for my son please .he Was born on 8.8.13@10.24pm @Salem. Please.