செவ்வாய் தோசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய் தோசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜனவரி, 2014

ஜோதிடம்;திருமண பொருத்தம்,செவ்வாய் தோசம்,நாகதோசம்

திருமண பொருத்தம்;

திருமணம் பொருத்தம் பார்க்கும்போது அடிப்படையான விதிகள் என்னவென்றால்,பெண்ணின் நட்சத்திரம் பையனின் நட்சத்திரத்துக்கு ஒத்துப்போகனும்...ராசிப்பொருத்தம்,லக்னபொருத்தம் வரணும்...நட்சத்திர அடிப்படையில் யோனிப்பொருத்தம்,ரஜ்ஜுபொருத்தம்,கணப்பொஇருத்தம்,மகேந்திரபொருத்தம் போன்ற முக்கிய பொருத்தங்கள் அமையனும்..அதன்பின் ராசிக்கட்டத்தில் பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் அதிபதி கெடக்கூடாது சுக்கிரன்,குரு பகை கிரகங்களுடன் கெட்டிருக்க கூடாது..(பையனுக்கு அப்படி இருந்தால் சேர்க்கலாம்..)

பெண்களுக்கு,7,8 ஆம் பாவங்களில் பாவ கிரகங்கள் இருக்க கூடாது..இருந்தால்..? கணவன் ஆயுள் பதிக்கும் என ஜோதிட விதி சொல்கிறது...எதார்த்தமான உண்மை பார்த்தால் 8ல் பாவ கிரகம் இருக்கும் பெண்ணுக்கு மொசமான குனமுடையவனோ அல்லது மோசமான கீழ்த்தரமான நடத்தை உடையவனோ கனவனாக அமைந்துவிடுகிறான் என்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது....குடிப்பதில் அதீத ஆர்வம் உடையவன் பெண்கள் விசயத்தில் மோசமாக நடந்துகொள்பவனும் இதில் அடங்குவான்...பாவ கிரகங்கள் எது..? சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது,தேய்பிறை சந்திரன்,போன்றவை..இது 7ல் இருந்தாலும் எட்டில் இருந்தாலும் இந்த பாதிப்புகள் உண்டு..நல்ல கணவன் அமைவானா என கேட்டால் 7,8 சுத்தமாக இருந்தாலோ சுபர் இருந்தாலோ ஆம் நல்ல குனமுள்ள,மனைவியை கொண்டாடக்கூடிய,பாசமும் அன்பும் நிறைந்த,கணவன் அமைவான் என சொல்லலாம்..

பாவ கிரகங்கள் கணவன் ஸ்தானத்தில் இருந்து திருமணம் ஆகி கணவனை பிடிக்காமல் டைவர்ஸ் போகிறவர்கள் தான் அதிகம்..

இதற்கு என்ன பரிகாரம்..? முக்கூடல் ஸ்தலமான பவானி கூடுதுறையில் ,பரிகார தோசம் நிவர்த்தி செய்து அதில் 48 தினங்களில் நினைத்த காரியத்தை கைகூடித் தரக்கூடிய ராசியான அய்யர் மூலம் மாங்கல்ய தோசம்,களத்திர தோசம்,முன்னோர் வழி சாபம்,குலதெய்வ சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும் அதையும் உங்கள் ஜாதகப்படி யோகமான நாளில் செய்ய வேண்டும்...அதை முறைப்படி செய்தால் தொசம் விலகும்..அதில்லாமல்,100 முறை காளஹஸ்திபோனாலும்,திருமனஞ்சேரி போனாலும் தோசம் விலகாது..இது சம்பந்தமான உதவிக்கு எனக்கு மெயில் செய்யவும் sathishastro77@gmail.com போன் செய்யவும் 9443499003

திருமண பொருத்தம் பார்க்கும்போது,இருவருக்கும் திசா சந்திப்பு இல்லாமல் இருக்க வேண்டும் இரண்டு பேருக்கும் சனி திசை நடந்தாலும் ,கேது திசை நடந்தாலும் திருமணம் செய்தால் ஒரே மாதத்தில் பிரிந்துவிடுவார்கள்...எந்த திசையும் இருவருக்கும் ஒரே நேரத்தில் நடக்க கூடாது..

நாகதோசம் என்பது லக்னத்தில் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் குடும்ப ஸ்தானம் எனப்படும் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் நாகதோசம் எனப்படும்..இப்படி இருப்பவர்கள் முன்கோபம்,பிடிவாதம்,அலட்சியம், சந்தேக குணம் ,பெரியோர்களுக்கு கீழ்படியாத குனம் கொண்டவர்கள்...இவர்கலை கண்ட்ரோல் செய்ய இன்னொரு நாகதோசம் கொண்டவர்களால் தான் முடியும் அதனால்தான் நாகதொசம் இருப்பவர்களுக்கு அதே போல் இருப்பவர்கலையே சேர்க்க வேண்டும் இல்லையே முறையற்ற தொடர்புகள் பின்னாட்களில் உண்டாகி பிரிவை தரும்.......சண்டையும் ஓயாது...

செவ்வாய் தோசம் 8ல் இருப்பவர்களுக்கு இரண்டில் செவ்வாய் இருப்பவர்களை சேர்க்க வேண்டாம்..ஒருவர் பேசுவதே கொடூரமாக இருக்கும் இன்னொருவரும் அப்படிஇருந்தால் வீடு தாங்காது...குருவோடு அல்லது சுக்கிரனுடன் செவ்வாய் இருந்தால் அது பரிகார செவ்வாய்..அவர்களுக்கு செவ்வாய் தோசம் இல்லாதவர்களை கூட திருமணம் செய்து வைக்கலாம்..

தை அமாவாசை  புனிதமான நாள் அன்று  நல்ல நேரம் வாசகர்கள் சிலருடன் இணைந்து செய்ய இருக்கிறோம்,..ஃபேஸ்புக் நண்பர்கள் சிலரின் ஒத்துழைப்பாலும் 200 கண் பார்வையற்றொர்க்கு செய்ய இருக்கிறோம்..அதற்காக போன் மூலம் விசாரித்து வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி!! நானும் கலந்துகொள்கிறேன் என தானாக முன்வந்து பனம் அனுப்பியவர்களுக்கும் நன்றி...எவ்வளவு சிறிய தொகையும் எங்களுக்கு பெரிய தொகைதான் அதனால் தொகை இதற்கு நிர்ணயிக்கவில்லை...நாம் அனைவரும் இணைந்து செய்யும்போது அதற்கு வலிமை அதிகம் நிறைய பேருக்கு செய்ய முடியும்..அதுதான் முக்கியம்..உங்கள் சார்பில் நான் செய்கிறேன் அவ்வளவுதான் வித்தியாசம்...உங்கள் பெயரிலும் உங்கள் குடுபத்தார் பெயரிலும் லட்சுமி நாராயனன் கோயிலிலும் தம்பிக்கலையான் அகோயிலிலும் சிறப்பு பூஜைகளும் செய்கிறோம்...உறுதுனையாய் இருப்போருக்கு நன்றி தொடர்புகொள்ள 9443499003


வியாழன், 22 ஆகஸ்ட், 2013

செவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம்

செவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம்

செவ்வாய் ஒரு யுத்த கிரகம்.  சண்டைக்கு அதிபதி வீரத்துக்கு அதிபதி, நிலத்துக்கு அதிபதி, ரத்தத்துக்கு அதிபதி, பெண்கள் என்றால் கணவனை குறிப்பது என சொல்கிறது ஜோதிடம்...ஒரு ஜாதகத்தில் செவ்வாய் எங்கு நின்றாலும் அந்த இடம் அதிக சக்தியுடன் வீரியத்துடன் இருக்கிறது..அந்த பாவத்தை பல மடங்கு கொந்தளிக்க செய்யும்...உதாரணமாக லக்னத்துக்கு இரண்டாம் இடம் என்பது என்ன..? வாக்கு அதாவது பேச்சு ,பார்வை, ஆரம்ப கல்வி என சொல்வோம் அங்கு செவ்வாய் இருந்தால் இவையெல்லாம் பல மடங்கு சக்தி பெறும் இதனால் பேச்சு அனல் பறக்கும். கோபம் அதிகமாக, பிடிவாதம் அதிகமாக ,நான் சொல்வதே சரி என சொல்ல வைக்கும்..அப்போ செவ்வாய் தோசத்தின் அடிப்படை என்ன..? இதெல்லாம் பிரச்சினையான இடம் அதுக்கு தகுந்த மாதிரி சேர்த்துங்க என நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

4ஆம் இடம் சுக ஸ்தானம் உடல் அடிக்கடி பாதிக்கப்படுவது அல்லது உடல் அதிக பலத்துடன் இருப்பது,சொத்துக்கள் சேர்க்கை அல்லது சொத்துக்களில் வில்லங்கம்,தாயார் பாதிப்பு தாயாரால் பிரச்சினை,ஒழுக்கம் பாதிக்கப்படுதல் அல்லது ஒழுக்கத்தில் அளவுக்கு அதிகமான கண்டிப்பு இவையெல்லாம் லக்னத்தை பொறுத்து மாறும் என்பதால் இதையும் கொடுத்திருக்கிறேன் நெகடிவ் பாசிடிவ்.

7ஆம் இடம் என்பது என்ன..? களத்திர ஸ்தானம் அதாவது செக்ஸ் ,காமம் இவற்றை பற்றி சொல்லும் இடம்.. கணவன் அல்லது மனைவியை பற்றி சொல்லும் இடம், கூட்டாளி பற்றி சொல்லும் இடம் ,அங்கு செவ்வாய் இருந்தால் அதெல்லாம் பல மடங்கு பலம் பெறும்.. அல்லது அவற்றால் பல மடங்கு பிரச்சினைகளும் வரும்..மனமத லீலையில் மன்மதனாக இருப்பார்கள்..பெண்ணாக இருப்பின் கணவனுக்கு சுகம் கொடுப்பதில்,ரதியாக இருப்பாள் ,கணவனுக்கு மட்டும். இவர்களுக்கு ஈடு கொடுக்கும்படி துணை இருக்கனும் ...தொட்டாலே கம்பளி பூச்சி ஊறுற மாதிரி இருக்கு எனும் குணவதியை கட்டி வெச்சிட்டா டைவர்ஸ் தான்.அப்போ எவ்வளவு எச்சரிக்கையா இருக்கனும்..? ராசிக்கட்டத்தை ஆராயாமல் 9 பொருத்தம் இருக்கு.. ராமனும் சீதையும் மாதிரிஇருப்பாங்க  என புலிக்கு பூனையை கட்டி வெச்சிடாதீங்க மக்களே..!!

8ஆம் இடம் கொஞ்சம் விவகாரமானது எதையும் ஓபனா சொல்லிடனும்னு நினைப்பதால் சொல்கிறேன்...இந்த இடம் ஆண் உறுப்பு பெண் உறுப்பு பற்றிய இடம்,நஷ்டம் பற்றியும் திடீர் அதிர்ஷ்டம் பற்றியும் சொல்லும் இடம்,துக்கத்தை சொல்லும் இடம்..சதா குழப்பமும் துக்கமும் இருக்கும்..டென்சன் அதிகமாகவே இருக்கும் இவருக்கு 2ல் செவ்வாய் இருக்கும் வாயாடியை ( ஸாரி எளிமையா புரியனும்னு இந்த பதத்தை பயன்படுத்துறேன்) கட்டி வெச்சிட்டா என்னாகும்..? போர்க்களம்தான்..எப்படி சந்தோசம் வரும்..? சரி இவருக்கு எந்த செவ்வாய் கல்யாணம் செய்து வைக்கிறது..? துக்கத்தில் இருப்பவரை சந்தோசப்படுத்திட 2ல் செவ்வாய் தவிர வேறு செவ்வாய் எதையும் சேர்க்கலாம்,

12 ஆம் இடம் என்பது தூக்கம்,கட்டில் சுகம்,காம உணர்வு,முக்தி,மோட்சம் பத்தி சொல்லும் இடம் அதை காம உணர்வு உற்பத்தியாகும் இடம்னு வெச்சிக்குவோம்..அங்கு செவ்வாய் இருக்கிறார் அப்போ தூக்கம் இல்லாம தவித்தல்,சதா சுகம் பத்திய நினைவு உண்டாதல் இருக்கலாம்..இவருக்கு 7ல் செவ்வாய் இருப்பவரை கட்டி வெச்சா செம பொருத்தமா இருக்கும் இல்லையா..? 2ல் செவ்வாய் பேசிக்கிட்டே இருப்பார் ....புரியுதுல்ல..7,12 செவ்வாய் நல்ல பொருத்ததை தரும் 2,8 செவ்வாய் மோசமான பொருத்தம்.4-7,4-8,2-7 கூட பிரச்சினை இல்லை...செவ்வாய் தோசத்தின் முக்கிய சாராம்சம் இதுதான்..அதுக்கப்புறம் சுக்கிரன் வெச்சி இது மாதிரி ஆராய்ச்சி பண்ணலாம்...குரு இவருக்கு மேல இருப்பாரு...குரு,சுக்கிரன்,செவ்வாய் ,சூரியன் எல்லாம் முக்கியமான பெரிய கிரகங்கள் இவர்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்காம பொருத்தம் அருமையா இருக்குன்னு சொல்லாதீங்க...

ஜாதகம் பார்க்க விரும்புபவர்கள் பிறந்த தேதி பிறந்த நேரத்துடன் என் மெயிலுக்கு உங்க கேள்விகளையும் எழுதி அனுப்பவும் கட்டணம் ரூ 500 மட்டும்....sathishastro77@gmail.com




.

செவ்வாய், 22 நவம்பர், 2011

ஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்

ஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம் பாகம் இரண்டு.

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கு க்ளிக் செய்யவும்.

சனி பெயர்ச்சி பலன்கள் படிக்க விரும்புபவர்கள் இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் ராகு அமர்ந்த பலன் படிக்க இங்கு செல்லவும்

ஜாதகத்தில் சனி அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்

ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் சந்திரன் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

உங்கள் ஜதகத்தில் லக்கினத்தில் இருந்து எத்தனையாவது கட்டத்தில் செவ்வாய் இருக்கிறது என எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.அதன்படி 

லக்கினத்துக்கு ஐந்தில் செவ்வாய் இருந்தால்;

அரசு உத்யோகம் வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது.பத்துக்குடையவன் படுத்து தூங்கினா பார்த்து சொல்லணும்.அறிவாளி.அனைத்து துறை பத்தியும் அளந்து விடுவார்.புராண இதிகாசமும் சொல்வார்.நீதி என்பார் நேர்மை என்பார்.என்னா அரசியல் என விமர்சனம் செய்வார்.உள்ளூர் கவுன்சிலர் முதல் ஒபாமா வரை காய்ச்சி எடுப்பார்.விமர்சனம் அடுத்தவங்களுக்குதான்.இவரை ஊரே விமர்சனம் செய்யும்.அன்னியோன்ய நண்பர்கள் அறவே கிடையாது.வாழ்வில் வறுமை அதிகம்.மாமன் வகை பாதிக்கும்.குழந்தை பாக்யத்தில் பிரச்சினை.

லக்கினத்துக்கு ஆறில் செவ்வாய்;

ஆறில் செவ்வாய் அடிப்படையில் நல்லது.6 மிடம் எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் பத்தி சொல்லுமிடம்.அங்கு போர் வீரன் நின்னா நல்லதுதானே.எதிரிகள் இவர்களை கண்டா அலற மாட்டார்களா.கெட்டவன் செவ்வாய் கெட்டு போறது நல்லதுதான்.அவர் லக்கினத்துக்கு சுபரா இருந்து கெட்டு போனா தொந்தரவுதான்.உள்ளூரில் நல்ல பெயர் கிடைக்கும்.ஊருக்கு உழைக்கும் நல்ல மனுசன்.சகோதரன் கெடுதல் செய்வார்.அரசியல் ஈடுபாடு அநேகமா கிட்டும்.ரோசக்காரனுக்கு கடனை கொடு.ரோசம் கெட்டவனுக்கு பொண்ணை கொடு என்பார்கள்.நாணயஸ்தன்.அதனால கடனை கொடுக்கலாம்..பொண்ணை கொடுக்கலாமா..?கொஞ்சம் கொழுந்தனாருடன் சிரிச்சு பேசுனாலும்,போச்சு....தலையில் கட்டுதான்,பொண்டாட்டிக்கு.உறவுக்குள்ள உரசல் வரும்.அதே சமயம் அன்ணார் க்கு இரண்டு தாரம்.இவர் மட்டும் எப்படி.அப்படித்தான்.கட்டிக்கிறது இல்ல வெச்சுக்குறது..

ஏழில் செவ்வாய்;

செவ்வாய் தோச ஜாதகம்.அம்மா ஆடினால் அய்யா அடங்குவார்.அய்யா ஆடுனால் அம்மா அடங்குவார்.நான் அரசியல் பேசலை.7ல் செவ்வாய் இருக்குற,புருசன் பொஞ்சாதி பத்தி சொல்ரேன்.கல்யாணம் செய்வதற்குள் நாக்கு தள்ளிவிடும்.அந்தளவு அலசி ஆராய்ஞ்சுடுவார்.நரை விழுந்த பின் அவசர அவசரமா கட்டிக்குவார்.ஒரு வழியா அம்மணி வந்து சேர்ந்தாலும் அய்யா பார்வை அடுத்தாத்து அம்புஜம் மேலதான்.சொத்துக்கள்,நிலம் சம்பந்தமான வில்லங்கங்கள் எப்போதும் தொடரும்.பஞ்சாயத்துக்கு ஒவ்வொரு ஆலமரமா ஓடுவார்.காம கதைகள் நிறைய இவரை சுத்தும்.எல்லாம் உண்மைதான்.

எட்டில் செவ்வாய்;

செவ்வாய் தோசம்.பெண்ணாய் இருந்தால் மாங்கல்ய தோசம் + செவ்வாய் தோசம்.சொத்து சுகங்கள் நிறைய உண்டு.ஆனா பார்வை பதியும் இடம் தப்பாகிறது.இதனால் பற்றாக்குறை தொடர் கதை.வட்டிக்கு வாங்கி நெட்டி நிமிரும்.கடனுக்கு சொத்து சுகங்கள் இழக்கவும் நேரலாம்.சீக்கிரம் திருமனம் ஆவதில் சிக்கல்.யாரை பார்த்தாலும் பிடிக்கலை.மூக்கு கோணலா இருக்கு என காலம் போகும்.வயசு போச்சேடா வரதராஜா என பின்னால் புலம்புவார்கள்.எட்டாமிடம் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சு அடக்குற மாதிரி ஆணவமா இருக்கும்.நான் அடங்கி போறவன் இல்லை.அடக்கிட்டு போறவன் என்பார்கள்.இதனால் உறவினர்கள் பகையாகலாம்.மூலம் வியாதி தாக்கும் வாய்ப்புண்டு.

ஒன்பதில் செவ்வாய்;

மதிப்புமிக்க மனிதர்.பட்டம் பெறும் வாய்ப்பு உண்டு.எதை செய்தாலும் லாபம் இருக்கா என பார்ப்பவர்கள்.உத்யோகம் பார்த்தால் நல்ல தொழிலாளி.சொந்த தொழில் செய்தால் நல்ல முதலாளி.தெய்வ பக்தி என்பது தேய்பிறை.அப்பா கூட அடிக்கடி சொல்வார் இந்த பயலை பெத்தது தப்பு.அந்தளவு அப்பாவுக்கும் மகனுக்கும் பாசம்.பிள்ளைகளால் நன்மை இல்லை.நாடு கடந்து செல்லும் வாய்ப்பு வரும்.

பத்தில் செவ்வாய்;

வருமானம் வருவதற்கும்,சொத்து சேர்க்கைக்கும் மிக சிறப்பு.துதி பாடினால் ரொம்ப பிடிக்கும்.குற்றம் சொன்னால் அந்த உறவே வேணாம் என தலை முழுகி விடுவார்.ஆதாயம் கிடைக்குதுன்னா கடல்ல இறங்கி கப்பல் தள்ளனும்னு சொன்னாலும் வந்துருவார்.பதவி வகித்தாலும் பண்ணை வீடு தோப்பு துறவுன்னு வாங்கிப்பார்.மாமனார் வீட்டில் முடிந்தளவு ஆதாயம் பார்த்துவிடுவார்.ராணுவம்,காவல்துறை போன்ற பெரும் துறைகளில் பதவி வகிக்க தகுந்தவர்.

பதினொன்றில் செவ்வாய்;

உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்களும் இவரிடம் ஐடியா கேட்பார்கள்.உள்ளூரில் இருந்தாலும் சொல்லுக்கு மதிப்பிருக்கும்.நாட்டாமை அல்லது பண்ணையார்.நிலம் சேர்க்கை என்பது நிச்சயம் உண்டு.திரண்ட சொத்துக்கு அதிபதி.கூட பொறந்தவங்க எண்ணிக்கை கூடுதல்.கஞ்சத்தனம் இல்லாம அஞ்சாறு இருக்கும்.குறைந்த கல்வின்னாலும் நிறைந்த ஞானம்.விவசாயம் செய்தால் லாபம் உண்டு.

பனிரெண்டில் செவ்வாய்;

செவ்வாய் தோசம்.படுக்கை சுகம் பாதிக்கும்.சொத்து,சுகம் பாதிக்கும்.பெண்களாய் இருந்தால் ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை.கல்யாணத்துக்கு பிறகு.மனைவி சுகம் அற்பம்.12 ஆம் இடம் கொஞ்சம் நீக்கு போக்கான இடம்.காமம் சம்பந்தம் அதிகம் உலவும் இடம்.படுக்கை ஸ்தானம் ஆச்சே.அதுல செவ்வாய் இருந்தா விரிவா சொல்ல விரும்பலை.

திங்கள், 21 நவம்பர், 2011

ஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்

ஜோதிடம்;ஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்;

ஜோசியம்,ராசிபலன்,கைரேகை சொல்வதும், படிப்பதும் முட்டாள்தனம் அல்ல..அதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு அதன் மகத்துவம் புரியும்.ஆர்வம் இல்லாதவர்களுக்கு அதன் மகத்துவத்தை புரிய வைப்பது அல்ல என் வேலை.நம்பிக்கை உள்ளவர்களுடன் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவே.நியூமராலஜி நம்பும் மக்கள், நம்பாத மக்கள் எப்படியென்றால் கடவுளை நம்பாதவர்கள் ,நம்புபவர்கள் என்ற பிரிவை போலத்தான்.எல்லா விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன..? கடவுளை மறுப்பவனும்,ஜோதிடத்தை எதிர்ப்பவனும் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளவே இதை செய்கிறார்கள்.பாவம் இந்த முட்டாள்கள்.சூரியனை பார்த்து நாய் ஊளையிடுவது போலத்தான்.உண்மையில் இதை பற்றி ஆராய்ந்து சொன்னால் பரவாயில்லை.இது பத்தி கொஞ்சம் கூட ஆராயாமல் முட்டாள்தனம் என சிரிப்பர்.பவானியில் ஒரு தி.க கட்சிக்காரர் ஜோசியத்தை பொய் என நிரூபிப்பதற்காக அதை கற்க ஆரம்பித்தார்.அதில் இருக்கும் உண்மை அறிந்து ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்பதை ஒப்புக்கொண்டார்.அது போல ஜோசியத்தை முட்டாள்தனம் என்பவர்கள் அதில் மிக அனுபவம் வாய்ந்தவர்கள் பலரை சந்தித்து விவாதம் செய்து முடிவெடுக்க வேண்டும்.ஜோதிடம்,கடவுள் நம்பிக்கை இந்த அறிவாளிகளால் குறைவதும் இல்லை.மாறாக வளரவே செய்கிறது.(செவ்வாய் பத்தி எழுத ஆரம்பிச்சதுமே கோபம் பொத்துகிட்டு வருதே)

நான் ஜோதிட பதிவு எழுதுவதாலோ,அரசியலில் ஜெயலலிதா அவர்களை ஆதரித்தும் எழுதுவதாலோ நாத்திக மற்றும் கருணாநிதி ஆதரவாளர்கள் என் வலைப்பக்க விளம்பரங்களை தொடர்ச்சியாக க்ளிக் செய்து அதாவது சுமார் தினசரி நான்கு மணி நேரம் இதற்காக நேரம் ஒதுக்கி விளம்பரம் க்ளிக் செய்து அதன் மூலம் கூகுளுக்கு சந்தேகம் எழுப்ப செய்கிறார்கள்.இதனால் என் விளம்பர வருவாய் குறையும் என்பது அவர்கள் எண்ணம்.எனக்கு இவ்வளவு எதிரிகளா...ஆச்சர்யமாக இருக்கிறது.16,17,18 ஆம் தேதிகளில் மட்டும் என் நல்ல நேரம் பக்க விளம்பரத்தை 2000 முறை க்ளிக் செய்திருக்கிறார்கள்.இதனால் கூகிள் எனக்கு விளம்பரம் தராமல் தடை செய்யும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.எனக்காக ஒருத்தன் அவன் பொழப்பை கெடுத்துகிட்டு உட்கார்ந்திருக்கானே என்பதற்காக அந்த விளம்பரத்தை நீக்கி வைக்கிறேன்.



ஜாதகத்தில் செவ்வாய்;

லக்கினத்தில் இருந்து ஒன்றில் அதாவது லக்கினத்திலேயே செவ்வாய் இருப்பின்,சுயமாக முடிவெடுத்து தன்னிஷ்டப்படி செயல்படுவார்கள்.எதுவும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான்.கோபம் மலை மலையா வரும்.முகம் சுள்ளுன்னு வெடிக்கிற மாதிரி டென்சனா இருக்கும்.நாலாம் பாவத்தை செவ்வாய் பார்ப்பதால் அம்மா வுக்கு பாதிப்புதான்.மொய்க்கு மொய்தான்.நான் இந்த உதவி செய்தேன்.அவன் மறுபடி ஏனக்கும் ஏன் செய்யலை...? எதிர்பார்த்துகிட்டிருப்பார்.

இரண்டில் செவ்வாய்;

வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தா வேற என்ன.வாயில் இருந்து வரும் சொற்கள் நெருப்பாய் கொதிக்கும்.கண்கள் விஜயகாந்த் போல ரத்த சிவப்பா கொதிக்கும்.அது சூரியன் வீடா இருந்தா.சிலருக்கு கல்வி பாதிக்கும்.விரய செலவுகள் நிறைய உண்டாகும்.சகோதரனால் பாதிப்பும் உண்டு.வாயால் கெட்டான் என்பார்களே அது இவங்களுக்கும் பொருந்தும்.செவ்வாய் தோசம் உண்டு.

மூன்றில் செவ்வாய்;

எடுத்தெறிஞ்சு பேசுவதில் இவருக்கு நிகர் இல்லை.எவனா இருந்தா எனக்கென்னடா...என்றுதான் பேச ஆரம்பிப்பார்கள்.திட்டம் போட்டு கட்டம் கட்டுவதில் சூரப்புலி.மனமதன் லீலை வென்றார் உண்டோ..ஆணுக்கு வீரிய ஸ்தானம் ஆச்சே.காம கதைகள் இவர் வாழ்வில் நிறைய உண்டு.கரும்பில்லாத மன்மதன்.குழல் இல்லாத கிருஷ்ணன்.முழு ஆண்மை சக்தி இவரிடம் வெளிப்படும்.சளைக்காத செக்ஸ் உறவு இவர் பலம்.பெண்கள் வலிய வருவார்கள்.துணிச்சல்,தைரியம் இவர் முக்கிய பலம்.

நான்கில் செவ்வாய்;

நிலம்,சொத்துக்கள் நிறைய சேரும்.புதையல் யோகம் உண்டு.அம்மா இவருக்கு பாதிப்பு.இவரால் அம்மாவுக்கும் பாதிப்பு.இவர் பிறந்ததும் அவர் மார்பில் சுரக்கும் பாலும் சுரக்காது..ஆனா எப்போதும் தகராறுதான்.புருசன் பொண்டாட்டிக்குள்ள வருசத்துல பாதி நாள் யுத்தம்தான்.பணம் சேர்க்கும் வெறி எப்போதும் இருக்கும்.இருக்குமிடம் பாவரால் பார்க்கப்பட்டு அல்லது பலவீனமாய் இருப்பின் ஆரோக்கியம் கெடும்.குடியிருக்கும் வீடு எதிரிகளால் மாந்திரீகம் செய்யப்பட்டு சூன்யம் ஆக்கப்படும்.வீடு சூன்யமான இடத்தில் அமர்ந்திருக்கும்.உக்கிர தெய்வ பாதிப்பு இருக்கும்.செவ்வாய் தோசம் உண்டு.

தொடரும்.

சனி, 24 செப்டம்பர், 2011

செவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012

செவ்வாய் தோசம்-திருமண பொருத்தம் 2012;

செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,4,7,8,12 ல் இருந்தால் செவ்வாய் தோசம் என பொத்தாம் பொதுவாக சொல்வார்கள்.ஆனால் இதில் நிறைய விதி விலக்குகள் இருக்கின்றன..

                               வள்ளி,தெய்வானையுடன் முருகன் ,லண்டன்

செவ்வாய் ஆட்சியிலோ ,உச்சமாகவோ ,நீசமாகவோ இருந்தால் தோசமில்லை.குருவோ,சனியோ,ராகுவோ,கேதுவோ பார்த்தாலோ,சேர்ந்து இருந்தாலோ தோஷமில்லை.கடக லக்கினம் அல்லது சிம்ம லக்கினத்தில் இருந்தாலும் தோஷமில்லை.இதையெல்லாம் பார்த்தால் செவ்வாய் தோசங்களில் பாதி அடிபட்டுவிடும்.