rajini லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rajini லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜனவரி, 2012

எம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்


எம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்;

எம்.ஜி.ஆர் எப்போதும் குன்றாத மக்கள் செல்வாக்கை பெற்றவர்.ரஜினியும் மக்கள் செல்வாக்கை மிக அதிக அளவு பெற்றவர்.இருவரும் சினிமா துறையில் யாராலும் உயரத்தை தொட்டவர்கள்.எம்.ஜி.ஆர் அரசியலிலும் சாதித்தார்.ரஜினி அரசியலுக்கு இதுவரை போகவில்லை.அவ்வளவுதான்.


                  எம்.ஜி.ஆர் ஜாதகம்; 
இருவரது ஜாதகங்களிலும் எத்தனையோ யோகங்கள் இருப்பினும்,காள சர்ப்ப யோகம் மட்டும் எடுத்துக்கொள்வோம்.இருவருக்கும் முக்கிய ஒற்றுமை காள சர்ர்ப யோகம் ஆகும்.அதாவது பெரும்பாலான கிரகங்கள் ராகு,கேது பிடிக்குள் இருப்பது காள சர்ப்ப தொசம் அல்லது காள சர்ப்ப யோகம் ஆகும்.

தோசமாக அமைந்தால் வாழ்வே சோதனையும்,போராட்டமாக காணப்படும்.யோகமாக இருப்பின் 30 வயதுக்கு பின் பெரும் அதிர்ஷ்டம் உண்டாகும்.இந்த அமைப்பு ரஜினி ,எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் உண்டு.
காள சர்ப்ப தோசம்,யோகம் கண்டுபிடிப்பது எப்படி..?



ரஜினி ஜாதகம்;
சிம்மம் ராசியை உள்ளடக்காமல் இருக்கும் ராகு,கேது அமைப்பு காள சர்ப்ப தோசம் யோகமாக மாறும்.காள சர்ப்பத்துக்குள் சிம்மம் ராசி மாட்டியிருந்தால் காள சர்ப்ப தோசம் ஆகும்.

ரஜினி,எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் இருவர் ராசிக்கட்டத்திலும் சிம்மம் வீடு வெளியே இருப்பதை கவனியுங்கள்.இது காள சர்ப்ப யோகமாகும்.!! இந்த அமைப்பு எல்லா செல்வங்களையும்,அதிகாரம்,மக்கள் செல்வாக்கு,நிரந்தர புகழ்,போன்றவற்றை கொடுப்பதில்லாமல்,பாம்பு தன் வாலால் அப்படியே தூக்கி உச்சாணி கொம்பில் வைப்பது போல வைத்துவிடுவதுதான் காள சர்ப்ப யோகம்!



வெள்ளி, 28 அக்டோபர், 2011

ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்

ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்;

ரஜினி உடல்நலமில்லாமல் இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.சிறுநீரக பிரச்சினை இன்னும் அவருக்கு முழுமையான குணம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.சில தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும்.நுரையீரலில் சுவாச கோளாறுகள் அவருக்கு இருக்கலாம்...அவர் முழுமையாக குணமாக அவர் விரும்பி வழிபட்ட ,அவர் மிக நம்பும் சில ஆலயங்களில் பிரார்த்தனைகள் வழிபாடுகளை சில நாட்களாக செய்து வருகிறார்.திருப்பதி சென்று வந்தார்.அவர் மனைவி லதா தன் தலைமுடி காணிக்கை கொடுத்தார்.

நான் என் மாமனார் ஊரான கரூர் அருகில் இருக்கும் சோமூர் சென்ற போதுதான்...ரஜினி ரகசியமாக அருகில் இருக்கும் நெரூர் சதாசிவம் கோயில் வந்துவிட்டு சென்றதாக என் உறவினர்களும் நண்பர்களும் ஆச்சர்யமாக சொன்னார்கள்.நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெரூர் சதாசிவம் கோவில் சென்று வருவது வழக்கம்.நெரூர் சதாசிவம் என்பது சதாசிவம் பிரம்மேந்திரா என்ற சித்தர் ஜீவசமாதி. மகா அதிர்ஷ்டானம்.அவர் வாழ்ந்த காலம் மிக பழமையானது.ஆனால் அந்த கோவில் மிக தெய்வீக சக்தி நிரம்பியது.காவிரி கரையில் அமைந்துள்ளது.புத்தி பேதலித்தவர்கள்,மன குழப்பம் அதிகம் இருப்பவர்கள்,தியானம்,யோகா சித்தியாக நினைப்பவர்கள்,உடல்நலம் ஆரோக்கியம் பெற நினைப்பவர்கள்,பாவ விமோசனம் பெற இந்த ஆலயம் வந்து சதாசிவம் ஜீவ சமாதி அருகில் அமர்ந்து 20 நிமிடம் தியானம் செய்தால் போதும்..மனம் லேசாவதை உணரலாம்.இந்த தலம் பற்றி படிக்க;மணிராஜ்

கருணாநிதி குடும்பத்தார் மாதம் ஒருமுறை இங்கு வந்து செல்வதாகவும்,போயஸ் கார்டனுக்கு பெள்ர்ணமிதோறும் பிரசாதம் செல்வதாகவும் அந்த ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு.இந்த கோயிலுக்குதான் ரஜினி ரகசிய விசிட் அடித்திருக்கிறார்..இது பற்றி முன்கூட்டி தகவல் கோவில் நிர்வாகிகளுக்கு கூட தரவில்லை என்றும்,மிக சாதரண காவி வேஷ்டி அணிந்து,தலைப்பாகை கட்டியிருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

சனி, 22 அக்டோபர், 2011

ரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..?

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாத ரஜினி;


சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ,ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை.இதற்கு காரணம் அவரது உடல்நலன் பாதிப்புதான் என தெரிகிறது.அவர் ஓய்வு எடுத்து வரும் இந்த சூழலில் வாக்களிக்க வந்தால் பத்திரிக்கையாளர்கள் அவரை தொந்தரவு செய்வர்..கருத்து சொல்ல வலியுறுத்துவார்கள்.இப்போதிருக்கும் சூழலில் ரஜினி கருத்து சொன்னால் அது வீண் சர்ச்சையாகும் என்றே ரஜினி வாக்களிப்பதை தவிர்த்துவிட்டாராம்.

அடுத்த நாள் ரஜினி திருப்பதி சென்று துலாபாரம் அமர்ந்து எடைக்கு எடை கல்கண்டு இனிப்பு பெருமாளுக்கு காணிக்கை கொடுத்துள்ளார்.ரஜினி நலம் பெற வேண்டி அவரது மனைவி மொட்டையடித்துள்ளார்.ரஜினி ஓய்வு பெறும் இக்காலகட்டத்தில் அதாவது மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் இன்னும் ஒரு வார்த்தை கூட மீடியாவிடமோ,ரசிகர்களிடமோ பேச வில்லை என நினைக்கிறேன்.இதற்கு காரணம் என்ன என்பதை நான் எழுதிய ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது என்ற பதிவிலும்,ரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனையா பதிவும் குறிப்பிட்டுவிட்டேன்.ரஜினி பூரண நலம் பெற நானும் வணங்கும் திருமலை திருப்பதி பாலாஜி யை பிரார்த்திக்கின்றேன்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்

ரஜினி ஜாதகம் பார்த்து ராணா வில் நடிக்கும் அளவு அவர் உடல் நலம் பலமில்லை.அதனால் அந்த படம் கைவிடப்படும் என சொல்லியிருந்தோம்.அதன் படை ராணா கைவிடப்பட்டதாக நேற்று ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


எனது ரஜினி ஜாதக கணிப்பு

ராணா கைவிடப்பட்ட செய்தி;

ரஜினி தன் உடல்நிலையை கவனித்துக்கொண்டாலே அது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.உங்களை வெல்ல இனி யாரும் பிறக்கபோவதும் இல்லை.இனி யாருக்கு உங்களை நிரூபிக்க வேண்டும்..ரெஸ்ட் எடுங்க சார்.

வியாழன், 12 மே, 2011

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..?# rajini horoscope

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..?# rajini horoscope

ரஜினி ஜாதகம்;


பிறந்த தேதி;12.12.1950
பிறந்த நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்

ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்

ரஜினி ஜாதகம்;


ரஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது...ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது..இது லட்சுமி,சரஸ்வதி யோகம்...அருள் ஒருங்கே அமைவதாகும்..இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்....

4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது....7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாடலின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி.....

7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்...ஞானக்குருவாக மனைவி அமைந்தார்.

சுக்கிரன்,புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்...அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு.இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப்புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்....

7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்....அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்..இரண்டில் சனி,கேது...ஆறில் செவ்வாய்....சந்திரன்.....


ஜாதகத்தின் இன்றைய நிலை;

எண்ணிய ஒண்ணின் கோள்
ஆறாமிடத்து கோளுடன் 
உன்னிய ராகு கேது
ஒரு தளத்தில் நிற்க,கண்டம்
தன்னுடல் சுகமில்லாமல்
சஞ்சல மனதனாகி
மின்னலாய் வியாதியஸ்தன்
என விளம்பலாமே..!

-துய்ய கேரள ஜோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து....

இந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது.

ரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது.

இந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது....

ரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது....
நடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயாதிபதி சந்திரன்..புத்தி.

சனி-முடக்கும் கிரகம்
ஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது...நோயை குறிக்கிறது...

இவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது...இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது...ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்....

சந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்...ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது.

பாதிப்பு;சிறுநீரகத்தில்....காரணம்..செவ்வாய் ஆறில்.



கோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது...ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது!...சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்...இது இரண்டாம் சுற்று...

ஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக்கிறார்...இது கெடுதலே தந்தது.


சனி, 30 ஏப்ரல், 2011

ரஜினி vs எம்.ஜி.ஆர்


ரஜினிக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன பிரச்சனை..?

எம்.ஜி.ஆர் மிக துணிச்சலும்,கோபமும் உடையவர்..அதிக அனுபவப்பட்டவர்...எம்.ஜி.ஆர் சினிமாக்கள் குறைந்து தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்...தனி ஸ்டைல்,வேகம் சிறுவர்களையும் இளைஞர்களையும் கிறுக்கு பிடிக்க வைத்துக்கொண்டிருந்தது..எம்.ஜி.ஆர் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கும்போது...இளைஞர்களுக்கு பிடித்தவராக ரஜினி மாறிப்போனார்..தலைமுறை இடைவெளி போல அந்த மாற்றம் நடந்தது...



பெரியவர்கள்,பெண்கள் எம்.ஜி.ஆரையும்,இளைஞர்கள் ரஜினியையும் நேசித்தனர்..இளம்பெண்கள் அப்போது கமலை நேசித்தனர்...அவர்களது ஆதர்ஷ நாயகனாக கமலே இருந்தார்..காரணம் அவரது அழகு,சிவப்பு நிறம்,சிரிப்பு,நடனம்...ரஜினி கறுப்பு என்பதால் தனுஷை சொன்னது போல இவரெல்லாம் ஹீரோவா என்ற விமர்சனத்தில் தான் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார்...


பில்லா படத்திற்கு பிறகுதான் ரஜினியின் சினிமா தலையெழுத்தே மாறியது...பாலாஜியின் கணிப்பு தவறவே இல்லை..அப்போது ஆக்‌ஷனில் பிரபலமாக இருந்த ஜெய்ஷங்கர்,ஏற்றிருக்க வேண்டிய வேடம் அது..இது ஒரு ஆண்டி ஹீரோ அப்ஜெக்ட் என்பதால் புது முகமாக இருக்க வேண்டும் என நினைத்தார்களொ..அல்லது புது முகமாக இருந்தால் சம்பளம் குறைவாக கொடுக்கலாம் என நினைத்தாரோ..அல்லது ரஜினிதான் இதுக்கு பவர் என நினைத்தாரோ ...,பாலாஜி... தெரியாது...படம் தீயாய் ஓடியது..

பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு! ஆனால் இதற்குபின்னர் தான் பில்லா வெளிவந்தது....சூப்பர்ஸ்டார் பட்டம் பில்லாவுக்குத்தான் பொருந்தும்..


மஞ்சள் பத்திரிக்கைகள்..என சொல்லப்படும் வகையில் அப்போது பிரபலமாக இருந்த பத்திரிக்கைகள் ரஜினியையும்,எம்,ஜி,ஆரையும் வைத்து பல கதைகள் கட்டி விட்டிருக்கின்றன...அதில் ஒன்றுதான் ரஜினி க்கும் எம்.ஜி.ஆருடன் நடித்துக்கொண்டிருந்த லதாவுக்கும் இருக்கும் பழக்கம்...இதை பற்றி அப்போது கிசு கிசு செய்திகள் வாய்வழி பரபரப்பு செய்தியாக பரப்பப்பட்டது... லதா,எம்.ஜி.ஆர் கிசுகிசு பிரபலமாக இருந்த நேரத்தில் ரஜினிக்கும் லதாவுக்கும் பழக்கம் என செய்தி காட்டுத்தீயாய் பரவியது..உண்மையில் தன்னிடம் பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவைத்தான் ரஜினி விரும்பிக்கொண்டிருந்தார்..ஆனால் செய்தி நடிகை லதாவை ரஜினி விரட்டி விரட்டி தொந்தரவு செய்வதாக சொல்லப்பட்டது...


இதனால் எம்.ஜி.ஆர் ரஜினி மீது மிக ஆத்திரமாக இருப்பதாகவும்,ரஜினிக்கு எம்.ஜி.ஆரால் ஆபத்து நேரலாம் எனவும் கோடம்பாக்கம்.பயந்தது..ஆனால் இதை ஓபனாக பேசமுடியாதே...இதை அவரிடம் விளக்கவும் முடியாது...எம்.ஜி.ஆரும் கேட்க மாட்டார்..முதலில் உதை..அப்புறம் தான் பேச்சு இது எம்.ஜி.ஆர் பாணி...

இன்னொரு பக்கம் லதா மேட்டரை கிசுகிசுவாக எழுதிய நிருபர் ஸ்கூட்டரில் போய்கொண்டிருப்பதை ,காரில் சென்று கோண்டிருந்த ரஜினி பார்த்து விட்டார் உடனே கெட்ட வார்த்தையில் திட்டியபடியே காரில் துரத்த ஆரம்பித்து விட்டார்....ஸ்கூட்டர் மீது மிகுந்த வேகத்தோடு கார் மோதும் நிலை..ரஜினி மிக கோபத்தோடு இருக்கிறார்...அவ்வளவுதான் ...ரஜினி காரை தன் மேல் ஏற்றாமல் விடமாட்டார் என நிருபர் குலை நடுங்கிபோனார்....20 நிமிடம் அந்த சேஸிங் தொடர்ந்தது...எப்படியோ அன்று உயிர் தப்பினார் அந்த நிருபர்...


ரஜினி கையால் பல நிருபர்களுக்கு அடி விழுந்திருக்கிறது...எம்.ஜி.ஆருடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரவே லதாவை அவசரமாக ரஜினி திருமணம் செய்து கொண்டார் எனவும் சொல்வார்கள்...பத்து நிருபர்களை அவசரமாக அழைத்தார் ரஜினி..சுற்றிலும் கண்ணாடி பதிக்கப்பட்ட அறையில் மது பாட்டில்கள் சூழ கையில் மது கிண்ணத்துடன் அமர்ந்திருந்தார் ரஜினி...உட்காருங்க..சாப்பிடுறீங்களா என கேட்டாராம்..பரவாயில்லை..என்ன விசயம் சொல்லுங்க என்றனர் நிருபர்கள்..சிலருக்கு ரஜினி மீது கோபம்...
நாளைக்கு எனக்கும் லதாவுக்கும் கல்யாணம்..கல்யாணம் முடிஞ்சதும் ஃபோட்டோ தரேன்...நீங்க யாரும் வர்வேண்டாம்..ஃபோட்டோ நியூஸ் உங்க ஆஃபீஸ்க்கு அனுப்பிடுறேன் என்றாராம்...


அப்படி மீறி வந்தா என்றாராம் ஒரு நிருபர் துடுக்காக...

உதைப்பேன்..என்றாராம் ரஜினி சிறிதும் தாமதிக்காமல்.
அதிர்ந்தார்கள் நிருபர்கள்.....

ரஜினி தனது திருமண பத்திரிக்கை எடுத்துக்கொண்டுமுதல்வர் அலுவலகம் சென்று காத்திருந்தபோது,எம்.ஜி.ஆர் அவரை சந்திக்க மறுத்துவிட்டார்..அதன்பிறகு இருவரும் ஒரு சினிமா விருது நிகழ்ச்சியில் சந்தித்ததோடு சரி..அதிலும் ஒரு வார்த்தை பேசவில்லை.