ரஜினி ஜாதகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி ஜாதகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜனவரி, 2012

எம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்


எம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்;

எம்.ஜி.ஆர் எப்போதும் குன்றாத மக்கள் செல்வாக்கை பெற்றவர்.ரஜினியும் மக்கள் செல்வாக்கை மிக அதிக அளவு பெற்றவர்.இருவரும் சினிமா துறையில் யாராலும் உயரத்தை தொட்டவர்கள்.எம்.ஜி.ஆர் அரசியலிலும் சாதித்தார்.ரஜினி அரசியலுக்கு இதுவரை போகவில்லை.அவ்வளவுதான்.


                  எம்.ஜி.ஆர் ஜாதகம்; 
இருவரது ஜாதகங்களிலும் எத்தனையோ யோகங்கள் இருப்பினும்,காள சர்ப்ப யோகம் மட்டும் எடுத்துக்கொள்வோம்.இருவருக்கும் முக்கிய ஒற்றுமை காள சர்ர்ப யோகம் ஆகும்.அதாவது பெரும்பாலான கிரகங்கள் ராகு,கேது பிடிக்குள் இருப்பது காள சர்ப்ப தொசம் அல்லது காள சர்ப்ப யோகம் ஆகும்.

தோசமாக அமைந்தால் வாழ்வே சோதனையும்,போராட்டமாக காணப்படும்.யோகமாக இருப்பின் 30 வயதுக்கு பின் பெரும் அதிர்ஷ்டம் உண்டாகும்.இந்த அமைப்பு ரஜினி ,எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் உண்டு.
காள சர்ப்ப தோசம்,யோகம் கண்டுபிடிப்பது எப்படி..?



ரஜினி ஜாதகம்;
சிம்மம் ராசியை உள்ளடக்காமல் இருக்கும் ராகு,கேது அமைப்பு காள சர்ப்ப தோசம் யோகமாக மாறும்.காள சர்ப்பத்துக்குள் சிம்மம் ராசி மாட்டியிருந்தால் காள சர்ப்ப தோசம் ஆகும்.

ரஜினி,எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் இருவர் ராசிக்கட்டத்திலும் சிம்மம் வீடு வெளியே இருப்பதை கவனியுங்கள்.இது காள சர்ப்ப யோகமாகும்.!! இந்த அமைப்பு எல்லா செல்வங்களையும்,அதிகாரம்,மக்கள் செல்வாக்கு,நிரந்தர புகழ்,போன்றவற்றை கொடுப்பதில்லாமல்,பாம்பு தன் வாலால் அப்படியே தூக்கி உச்சாணி கொம்பில் வைப்பது போல வைத்துவிடுவதுதான் காள சர்ப்ப யோகம்!



ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்

ரஜினி ஜாதகம் பார்த்து ராணா வில் நடிக்கும் அளவு அவர் உடல் நலம் பலமில்லை.அதனால் அந்த படம் கைவிடப்படும் என சொல்லியிருந்தோம்.அதன் படை ராணா கைவிடப்பட்டதாக நேற்று ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


எனது ரஜினி ஜாதக கணிப்பு

ராணா கைவிடப்பட்ட செய்தி;

ரஜினி தன் உடல்நிலையை கவனித்துக்கொண்டாலே அது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.உங்களை வெல்ல இனி யாரும் பிறக்கபோவதும் இல்லை.இனி யாருக்கு உங்களை நிரூபிக்க வேண்டும்..ரெஸ்ட் எடுங்க சார்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

ரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனை..?rajini horoscope

ரஜினியை எப்போதும் கேள்விகள் துரத்திக்கொண்டேதான் இருக்கின்றன...நான் புதிதாக என்ன கேட்கிறேன் என்றால்,அவர் உடல்நிலை தேறி சிங்கப்பூரில் இருந்து வந்தது சந்தோசம்தான்...கொஞ்ச நாள் அவர் ரெஸ்ட் எடுக்க விரும்பியதும் சரிதான்.ஆனால் இதுவரை ஒருமுறை கூட வெளியே வராத மர்மம் என்ன..?ரசிகர்களிடம் இதுவரை பேசாத காரணம் என்ன..?ஒரு பிரஸ் மீட் கூட வைக்க வில்லையே ஏன்..?


ரஜினி ராணாவில் நடிப்பது குறித்து ரவிக்குமார் எதுவும் பேசுவதில்லை மட்டுமில்லாமல் அதற்க்குண்டான வேலைகளும் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

ரஜினி ஜாதகம்;

ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும்போது நான் ரஜினி ஜாதகம் சொல்வது என்ன என்று ஒரு பதிவிட்டிருந்தேன்.இப்போது வரை அதில் மாற்றம் இல்லை என்றாலும்,ரஜினி ஒரு மாதம் ரெஸ்ட் எடுத்த பின்னும் நேரில் எந்த தலைவர்களையோ,வி.ஐ.பிக்களையோ இவரும் சந்திக்கவில்லை.மற்றவர்களும் சந்திக்கவில்லை.ரசிகர்களுக்கு நன்றி சொல்லக்குட ஒரு பிரஸ் மீட் வைக்கவில்லை...சரி இது பற்றி என் சந்தேகம் என்னவென்றால் அவர் நுரையீரல் பிரச்சனையால் தடுமாறுகிறார் என்பதுதான்...அப்ப,சிறுநீர்க கோளாறு..?அதுவும் இருக்கிறது.இப்போது நுரையீரல் பிரச்சனை அதிகமாக காணப்படும்.இது இருந்தால் சரியாக பேசமுடியாது...காற்று அடைபடும்.அதிகமாக மூச்சிரைக்கும்.இது இருந்தால் மட்டுமே ரஜினி பேசுவதை தவிர்ப்பார்.இதை நான் சொல்லக்காரணம்..அவர் ஜாதகம்தான்...

வியாழன், 12 மே, 2011

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..?# rajini horoscope

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..?# rajini horoscope

ரஜினி ஜாதகம்;


பிறந்த தேதி;12.12.1950
பிறந்த நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்

ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்

ரஜினி ஜாதகம்;


ரஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது...ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது..இது லட்சுமி,சரஸ்வதி யோகம்...அருள் ஒருங்கே அமைவதாகும்..இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்....

4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது....7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாடலின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி.....

7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்...ஞானக்குருவாக மனைவி அமைந்தார்.

சுக்கிரன்,புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்...அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு.இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப்புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்....

7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்....அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்..இரண்டில் சனி,கேது...ஆறில் செவ்வாய்....சந்திரன்.....


ஜாதகத்தின் இன்றைய நிலை;

எண்ணிய ஒண்ணின் கோள்
ஆறாமிடத்து கோளுடன் 
உன்னிய ராகு கேது
ஒரு தளத்தில் நிற்க,கண்டம்
தன்னுடல் சுகமில்லாமல்
சஞ்சல மனதனாகி
மின்னலாய் வியாதியஸ்தன்
என விளம்பலாமே..!

-துய்ய கேரள ஜோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து....

இந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது.

ரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது.

இந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது....

ரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது....
நடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயாதிபதி சந்திரன்..புத்தி.

சனி-முடக்கும் கிரகம்
ஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது...நோயை குறிக்கிறது...

இவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது...இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது...ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்....

சந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்...ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது.

பாதிப்பு;சிறுநீரகத்தில்....காரணம்..செவ்வாய் ஆறில்.



கோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது...ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது!...சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்...இது இரண்டாம் சுற்று...

ஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக்கிறார்...இது கெடுதலே தந்தது.