திருமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 அக்டோபர், 2011

ரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..?

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாத ரஜினி;


சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ,ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை.இதற்கு காரணம் அவரது உடல்நலன் பாதிப்புதான் என தெரிகிறது.அவர் ஓய்வு எடுத்து வரும் இந்த சூழலில் வாக்களிக்க வந்தால் பத்திரிக்கையாளர்கள் அவரை தொந்தரவு செய்வர்..கருத்து சொல்ல வலியுறுத்துவார்கள்.இப்போதிருக்கும் சூழலில் ரஜினி கருத்து சொன்னால் அது வீண் சர்ச்சையாகும் என்றே ரஜினி வாக்களிப்பதை தவிர்த்துவிட்டாராம்.

அடுத்த நாள் ரஜினி திருப்பதி சென்று துலாபாரம் அமர்ந்து எடைக்கு எடை கல்கண்டு இனிப்பு பெருமாளுக்கு காணிக்கை கொடுத்துள்ளார்.ரஜினி நலம் பெற வேண்டி அவரது மனைவி மொட்டையடித்துள்ளார்.ரஜினி ஓய்வு பெறும் இக்காலகட்டத்தில் அதாவது மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் இன்னும் ஒரு வார்த்தை கூட மீடியாவிடமோ,ரசிகர்களிடமோ பேச வில்லை என நினைக்கிறேன்.இதற்கு காரணம் என்ன என்பதை நான் எழுதிய ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது என்ற பதிவிலும்,ரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனையா பதிவும் குறிப்பிட்டுவிட்டேன்.ரஜினி பூரண நலம் பெற நானும் வணங்கும் திருமலை திருப்பதி பாலாஜி யை பிரார்த்திக்கின்றேன்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

திருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..?tiruppati tirumalai

tirupati tirumala;திருப்பதி மகிமை;



திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.இங்கு கோரக்கர் சித்தர் ஜீவசமாதி அடைந்ததால் தான்இக்கோயில் பிரபலம் அடைந்தது.. என சொல்வோரும் உண்டு.ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு ..என்பர் சிலர் ..கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது ,பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும்,செய்வினை தோஷம், வறுமை போக்கும். சந்ததி விருத்தி உண்டாகும்.என்கிறது.பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம் மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,

இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன..வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .என்று கௌரு திருப்பதிரெட்டி தனதுவாஸ்து நூலில் எழுதிஉள்ளார் .உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் .சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் .