lucky stone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
lucky stone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கடன் தொல்லை பணம் தங்காத பிரச்சினைக்கு ஜோதிட தீர்வு

எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை. பணம் தங்குவதில்லை. உடனே செலவாகிவிடுகிறது. வருமானத்திற்கும் அதிகமாக செலவினங்கள் கூடிக்கொண்டே போகிறது என்பவர்களும், தொழிலில் வேகமான முன்னேற்றம் அடையவும், புஷ்பராகம் மற்றும் கோமேதகம் இவற்றில் எந்த கல் உங்கள் ஜாதகப்படி பொருந்துகிறதோ அந்த கல்லை வெள்ளி மோதிரத்தில் அணியலாம். 

வெள்ளி சுக்ரனின் உலோகம். வெள்ளி, ரத்னத்தின் சக்தியை வேகமாக நம் மூளை நரம்புகளுக்கு கடத்தகூடியது. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாமிடமாகிய தனஸ்தானாதிபதி 6,8, 12ல் மறைந்தாலும், இரண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் அமர்ந்தாலும் பணம் எவ்வளவு வந்தாலும் தங்கவில்லை. மேற்கொண்டு கடனும் ஏற்படுகிறது. வட்டி கட்டியே போராட்டம் நடத்தும் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. வசியமான பேச்சும் இல்லை. இவர்களுடைய பேச்சே இவர்களுக்கு பகையாகி விடுகிறது. சவால் விட்டு பேசுவார்கள். எதெற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். பணம் வந்துவிட்டால் கண்டபடி அள்ளி இறைப்பார்கள்.
    
பிறந்ததேதி 4,13, 22, 31 உடையவர்களும், பிறந்ததேதி கூட்டு எண் 4 உடையவர்களுக்கும் 13, 22,31 போன்ற எண்களில் பெயர் அமைந்தார்களுக்கும் 29, 30, 26, 30 பிறந்த தேதி கூட்டு எண் உடையவர்களுக்கும் இது பொருந்தும்.
    ஜாமீன் கையெழுத்து நண்பர்களுக்கு போட்டு மாட்டிக் கொள்பவர்கள், பிறர் கடனுக்கு பொறுப்பேற்று, விழிபிதுங்குபவர்களும் இவர்களே.
    
குடும்பத்திலும் பலவித பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவர்கள் கோமேதகம் அணியலாம். இது அனுபவத்தில் நல்ல பலன் தருகிறது..ஜாதககப்படி யார் தனாதிபதியோ அவர்களுக்கு தகுந்தார்போல வழிபாடு செய்தால் பிரச்சினையின் தீவிரம் குறையும்..கோமேதகம் மோதிரம் ஐம்பொன்னிலும் அணியலாம்..இது ஐந்து விதமான உலோகங்களால் செய்யப்பட்ட மோதிரம் இதை எனது நண்பர் ஒருவர் செய்து தருகிறார்..என் வாடிக்கையாளர்கள் பலருக்கு இட்ய்ஹன் படி செய்து கொடுத்துள்ளேன்..இது பெரும்பாலும் கறுப்பதில்லை..தங்கம் போலவே இருக்கிறது..

மோதிரம் தேவைப்படுபவர்கள்,உங்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் குறிப்புகளுடன் மெயில் செய்யுங்கள் sathishastro77 @gmail.com

செவ்வாய், 4 அக்டோபர், 2011

ராசிக்கல் மோதிரம் lucky stone


தொழில் வளர்ச்சி தரும் கற்கள்

    பொதுவாக இந்த கற்களை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

மாணிக்கம் :    அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள்
அரசியல், பொதுநல தொடர்பு உடையவர்கள்.
சந்திரகாந்தம், முத்து   :    மெட்டல்ஸ், தத்துவம், கணிதம், பொறியியல்
துறையில் உள்ளவர்களுக்கு
வைரம்;  நிர்வாகத்துறை, பால்பண்ணை, மேனேஜர்
தொழில், விவசாமய், சகல துறைகளிலும் உதவி இயக்குனர் துறையில் உள்ளவர்கள்.
மரகதம்- பச்சை :    ஏஜென்சி-கமிஷன், துணி காகிதம், பிரிண்டிங்
(அச்சகம்) அலங்காரப் பொருட்கள் துறையில் உள்ளோர் உபயோகத்திற்கு
பவளம்    :    அதிகாரத்துறையில் உள்ளோர், இராணுவம்,
காவல்துறை, கட்டட மேஸ்திரி, உணவு விடுதி, மின்சார இலாகாவில் பணியாற்றுவோர்.
கோமேதகம்  :    கைரேகை பார்ப்போர், மந்திரம் சொல்பவர்கள்,
ஜோதிடர்கள், அரசியல் விமர்சகர், நாட்டியக் கலைஞர்
வைடூரியம் :    சினிமாத்துறையில் உள்ளவர்கள், தூதரகப்
பணியில் உள்ளவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கை ரிப்போர்ட்டர்கள், மருத்துவத்துறை;
நீலக்கற்கள் இரும்புக்கடை வைத்து இருப்பவர், ரியல்
எஸ்டேட், வீட்டுமனை தொழில் உள்ளவர்.

நோய் நீங்க கற்கள் தரும் பலன்

    பித்தம், வாதம், சிலோத்துமம், மூலம் நோய்கள் நீங்க (நவராத்தின மணி)
    சாராயம், குடி, விஷம் நீங்க லாகிரி வஸ்துகள்
    உபயோகிப்பவர் உபத்திரம் நீங்க; அமிதிஸ்ட்
    கிரக தோஷம், பீடை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி இவைகள் நீங்க அணியவேண்டிய கற்கள். (அமிதிஸ்ட் சுகந்தி)
    விஷ பயம், எம பயம், நோய் பயம் நீங்கி சுகம் பெற அணியவேண்டிய கல் (கார்னெட், கோமேதகம்)
    நரம்புக்கோளாறு நீங்க (மரகதக்கல் - பச்சை)
    ஜெயம் பெற, உடல் உஷ்ணம் நீங்க, சர்வசித்தி பெற (ரசமணி)
    இதய நோய்க்கு; (வைரம்)
    ஞாபகசக்தி குறைதல், தலை சுற்றல் (நவமணிகள்)
    தொழுநோய், இரணம், தோல்நோய், படை, சொறிகளுக்கு (கோமேதகம்)
    ஆஸ்துமா, சளி, இருமல், கபம், இழுப்பு, ஆஸ்துமா, இயலை, மூச்சு அடைப்பு போன்றவைகள் (முத்து-சந்திரகாந்தம்)
    பித்தப்பை கோளாறு, காமாலை, கர்ப்பப்பை கோளறுகளுக்கு, இயற்கை (மாணிக்கக் கற்கள்)
    சிறுநீரகக் கோளாறுகளுக்கு (ஜட்டு – மாலாகைட்)

அதிர்ஷ்டக்கற்களை உபயோகிக்கும் வழிமுறைகள்

    திருப்பாற்கடலில் தோன்றிய காமதேனு அனைத்து தேவாதி தேவர்களும் தன் உடலிலே இருக்க இடம் அளித்து ஈஸ்வரனுக்கு வாகனமாகவும், நம் துன்பத்தை சுமக்கின்ற தெய்வமாகவும், அன்னையாகவும் அருள்பாலிக்கும் பசுவின் கோமியம் உலகில் உள்ள புண்ணிய நதிகளின் பூர்ண பலனை விட கங்கையை விடவும் புண்ணியமான தீர்த்தம் பசுவின் கோமியம் என்பது சாஸ்திரம் அறிந்த பெருமக்கள் அவர்கள் அறிந்த உண்மையாகும். எந்தவொரு கற்களையுமே கோமியத்தில் போட்டு வைத்து பின்னர் அணியும் நாளில், அணிந்து கொள்ள எளியைமான வழி:

1. புதனுக்குரிய மரகத பச்சைக்கல்
    புதன்கிழமை இரவு, விடியற்காலை 4 முதல் 5க்குள் புதன் கிரகம் வலிமையுள்ள நேரம் உஷாக்காலம் என்று பெரியோர்கள் சொல்வார்கள் அந்த நேரத்தில் 5மண்விளக்கில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபாடு செய்து பச்சைக்க் மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

2. குருபகவானுக்குரிய புஷ்பராகக்கல்
    மஞ்சள்நிற புஷ்பராகக்கற்களை வியாழக்கிழமை அதிகாலை 6 முதல் 7 அருகில் இருக்கும் கோயிலில் ஒரு மஞ்சள் துண்டு, 3 நெய்விளக்கு, 3 எலுமிச்சை கனி வைத்து குருபகவானை வழிபட்டு மோதிரத்தை அணிவது விசேஷம்

3. சனிபகவானுக்குரிய நீலக்கல்
    இதனை இயலாதோர் வீட்டிலும் செய்யலாம் (அ) கோவிலிலும் செய்யலாம். சதுர்த்தி திதி அன்று விரைவில் அணிந்து கொள்ளலாம் வாய்ப்பு உள்ளவர்கள் சனிக்கிழமையில் சனீஸ்வரர் சந்நிதியில் 6 முதல் 7.30 மணிக்கு (காலை) நீலநிற மோதிரக்கல்லை அணிந்து கொள்ளலாம்.

4. செவ்வாய்க்குரிய பவளம்
    பவளமோதிரத்தை அணிவோர் செவ்வாய்க்கிழமை மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் வீட்டில் (அ) சுப்ரமணியம் ஆலயத்தில் அணிந்து கொள்ளலாம்.
5. சூரியனுக்குரிய மாணிக்கம்
    ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 முதல் 4 மணிக்குள் 9 நெய் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து மாணிக்கக் கற்களை அணிந்து கொள்ளலாம்.
6. சுக்கிரனுக்குரிய வைரம்
    வெள்ளிக்கிழமை அதிகாலை வளர்ச்சியுள்ள குளிகை நேரத்தில் காலை 7.30 முதல் 9.30 மணிக்குள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமி படத்திற்கு முன்பு அணிந்து கொள்ளலாம்.
7. சந்திரபகவானுக்குரிய முத்து
    சந்திரகாந்தக்கல் அணிவோர் 1.30 முதல் 3 மணிக்குள் 5 அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி திங்கள் கிழமையில் வழிபாடு செய்து மோதிரத்தை அணியலாம்.
8. இராகுவிற்குரிய கோமேதகக்கல்
    செவ்வாய்க்கிழமையில் இராகுகாலம் உள்ள நேரத்தில் மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
9. கேதுவிற்குரிய வைடூரியம்
    ஐந்துவிதமான பழங்கள் (கனி) ஐந்து நிறமுடைய ஒரு கர்சிப் (கைக்குட்டை) இவைகளுடன் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் கலந்த ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி விநாயகர் ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்து அணிந்து கொள்வதே சிறப்பு. கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் வரும் நட்சத்திர நாளில் அணிந்து கொள்வதே சிறப்பு.
    நட்சத்திரங்களை அறிய வாய்ப்பு இல்லாதோர் செவ்வாய்க்கிழமைகளிலும் அணியலாம்.


வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக


கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக

ஜாதகத்தில் 7ம் இடம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்களாகிய சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய், ராகு 10 சந்திரன், ராகு 10 சூரியன், செவ்வாய் 10 சூரியன், சனி 10 சந்திரன், சூரியன்10சனி அமையப்பெற்றவர்களும், களத்திரஸ்தானாதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் குடும்பவாழ்வில் போராட்டமாக இருக்கும். பிரிவு ஏற்படலாம். தினசரி சண்டை, சச்சரவுகளாக காணப்படலர். இருவரும் எலியும், பூனையுமாக இருப்பார்கள். சாப்பாடு விஷயம் முதல், எதற்கெடுத்தாலும் குற்றம், குறை காணுகிற வாழ்க்கை துணை அமைந்து கஷ்டப்படுகிறீர்களா...

 கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக முத்து அல்லது சந்திரகாந்தகல் பதித்த வெள்ளி மோதிரம் அணியலாம்.  இவை சந்திரனின் ஆகாஷண சக்தியை தன்னகத்தே கொண்டவை. காதலுக்கு காரகத்துவம் வாய்ந்த கிரகமாகிய சந்திரன் சக்தி பூரணமாக கொண்ட ரத்னங்கள் முத்து, சந்திரகாந்த கற்கள் ஆகும். முத்து ஒரிஜினல் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. ஹைதராபாத் முத்து எனப்படும் செயற்கையாக தயாரிக்கப்படும் முத்துகளே அதிகளவில் இப்போது கிடைக்கின்றன. இதைவிட, சந்திரகாந்தகல் அணிவது மிக உத்தமம். இந்தகல் மிகவும் குளிர்ச்சியானது. சந்திரன் சக்தியை உறிஞ்சி வழங்கக்கூடிய காந்தக்கல் போன்றது என்பதால் சந்திரகாந்தக்கல் எனப்படுகிறது.

இது மனதில் அமைதியும், அன்பையும் ஏற்படுத்தச் செய்யும். மனதில் நம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்தும். மனதில் எப்போதும் கவலை சுமப்பவர்கள், சின்ன விஷயத்திற்கும் பயப்படுபவர்கள் தைரியமாக இதனை அணியலாம். அம்பாள் சக்தி நிரம்ப கிடைக்கும். தாய் கிரகமானாக சந்திரன் இருப்பதால், ஒரு தாயை போல அணிந்தவர்களை காப்பாற்றக்கூடியவை இந்த கற்கள். ஜாதகத்தில் சந்திரன் 6,8,12ல் மறைந்தவர்களுக்கும், கேது, ராகு, செவ்வாய், சனியுடன் இணைந்து காணப்படும் ஜாதகத்தை உடையவர்களும் இந்த கல்லை அணிந்து பலன் பெறலாம்.

2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களும் இதனை அணியலாம். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்த கல் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இந்த தேதிக்காரர்களே அதிக கற்பனை, வீண்பயம், மனக்குழப்பத்தை அதிகம் உடையவர்களாகவும், குடும்ப பிரச்சினைகளை சந்திப்பவர்களாகவும் இருக்கிறார்கள். 8,17,26,9,18,27 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து மனவருத்தத்துடன் வாழ்கிறார்கள். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் நல்லது. 8,9 வரும் எண்களை பிறந்த தேதியாக கொண்டவர்களை தவிர மற்ற எண்காரர்களை இவர்கள் மணக்கலாம்.


ஞாயிறு, 24 ஜூலை, 2011

நவரத்தினக்கற்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ஆகலாமா..?


நவரத்தினக்கற்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ;


நவரத்தினங்களின் பூர்வீக வரலாறு

 நவரத்னங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே...பூமியில் தோன்றியவை. பூமிக்கடியில் வெட்டி எடுக்கப்படும் இவை தரும் அதிர்ஸ்டம் பற்றி நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். மன்னர்கள் நவரத்னங்களை போற்றி பாதுகாத்தனர். இதனை அணியாத தமிழ் மன்னர்கள் இல்லை. சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், சிற்றரசர்களும் பெரிய தலைவர்களும் நவரத்னங்களை கொண்டும், மற்ற மணிகளை கொண்டும் தங்களது செல்வத்தையும், மதிப்பையும் உயர்த்தி கொண்டனர். 

தங்களை அலங்கரித்தும் மகிழ்ந்தனர். தமிழர்களின் சரித்திரத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற கல்வெட்டுகளும் பட்டயங்களும் நமது நாட்டின் அரசர்களை பற்றியும், நம் நாட்டில் எழுந்தருளியிருக்கின்ற தெய்வங்களை பற்றியும் கூறுகின்றன. அரசர்களும் தெய்வங்களும் அணிந்திருந்த இரத்தினங்களைப் பற்றியும் அவைகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.


‘ஹாலாஸ்ய மகாத்மியம்’ என்னும் வடமொழி நூலிலும், தமிழில் உள்ள திருவிளையாடற்புராணத்திலும் இரத்தினங்களின் வகைகளை பற்றியும், அவைகளின் இலக்கணத்தை பற்றியும் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இறைவன் சோமசுந்தரர் ஒரு வணிகராக வருகிறார். அப்போது இறைவன் பாண்டிய மன்னருக்காகவும் அவரது திருமுடிக்காகவும் அரிய மாணிக்கங்களையும் மற்ற ரத்தினங்களையும் விற்கிறார். அப்போது மந்திரிகள் அந்த வணிகரிடம் இரத்தினங்களின் இலக்கணத்தைப் பற்றி கேட்க, பெருமானும் இரத்தினங்களின் இலக்கணத்தை பற்றி விவரமாக சொல்கிறார். இதுவே ‘மாணிக்கம் விற்ற திருவிளையாடல்’ என்ற பகுதியாக திருவிளையாடல் புராணத்தில் வருகிறது. தமிழ்நாட்டின் அரிய பொக்கிஷமான சிலப்பதிகாரத்திலும் இரத்தினங்களின் இலக்கணங்களைப் பற்றி இளங்கோவடிகள் மிகவும் விளக்கமாக எழுதியுள்ளார்.

நவரத்தினங்களில் ஒன்பது நவரத்தினங்களில் 84 வகைகளுக்கு மேல் இருக்கின்றன. 

ஜோதிடமும் நவரத்தினங்களும்

நமது ராசிக்கு ஏற்றவாறு நவரத்னங்களை அணியலாம். நமது ஜாதகத்தில் பலவீனப்பட்ட கிரகங்கள், லக்னத்திற்கு யோகமான கிரகங்களுக்கு பலம் கொடுக்கும் வகையில் ராசிக்கற்கள் அணியலாம். ஜாதகப்படி நடக்கும் திசாபுத்திகள் பாவ கிரகங்களாக இருந்தால் அதற்கேற்றவாறு ராசிக்கற்கள் அணியலாம். பிறந்ததேதி, மாதத்திற்கு ஏற்றவாறும் ராசிக்கற்கள் அணியலாம். இவை அனைத்துமே நல்ல பலன்களை தருகின்றன.

ராசிப்படி அணிய வேண்டியவை

மேஷம்  -  பவளம்
ர்pஷபம்  - வைரம்
மிதுனம்  - மரகதப்பச்சை
கடகம்  - முத்து
சிம்மம்  - மாணிக்கம்
கன்னி  - மரகதப்பச்சை
துலாம்  - வைரம்
விருச்சிகம்  - பவளம்
தனுசு   - புஷ்பராகம்
மகரம்   - நீலம்
கும்பம்  - நீலம்
மீனம்   - புஷ்பராகம்

பிறந்ததேதி படி அணிய வேண்டிய ராசிக்கற்கள்

1, 10, 19, 28  - மாணிக்கம்
2, 11, 20, 29  - சந்திரகாந்தகல், முத்து
3, 12, 21, 30  - புஷ்பராகம்
4, 13, 22, 31  - கோமேதகம்
5, 14, 23  - மரகதப்பச்சை
6, 15, 24  - வைரம்
7, 16, 25  - வைடூரியம், சந்திரகாந்தகல்
8, 17, 26  - நீலம்
9, 18, 27  - பவளம்

திசாபுக்திபடி அணிய வேண்டிய கற்கள்

ராகுதிசைக்கு  - கோமேதகம்
சனிதிசைக்கு  - நீலம்
கேதுதிசைக்கு  - சந்திரகாந்தகல், வைடூரியம்
செவ்வாய் திசைக்கு - பவளம்

ஜாதக தோஷப்படி அணியவேண்டியவை

லக்னத்தில் சனி இருந்தால், விபத்து போராட்டம். எனவே நீலம் அணியலாம்
லக்னத்தில் ராகு இருந்தால், முன்கோபம், பிடிவாதம், அலட்சியம் ஏற்படும். எனவே கோமேதகம் அணியலாம். லக்னத்தில் கேது இருந்தால் எடுத்த முயற்சிகளில் தோல்வி, தடை ஏற்படலாம். எனவே வைடூரியம் அணிவது நல்லது.





நவரத்னங்களின் பிரிவுகள்

நவரத்னங்களின் குணங்களை மனிதர்களின் இனத்தோடு ஒப்பிட்டும் நம் முன்னோர் பகுத்து பார்த்துள்ளனர். 

அந்தணர் சாதி ரத்தினங்கள் - வைரம், முத்து
அரசர் சாதி ரத்தினங்கள் - பவழம், மாணிக்கம்
வணிகர் சாதி ரத்தினங்கள் - புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம்
வேளாளர் சாதி ரத்தினங்கள் - நீலம், மரகதம்
இராஜதம் (வேகமாக செயல்படுபவை) - பவளம், மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம்

தாமதம்    - தாமதமாக செயல்படுபவை, நீலம்
சாத்வீகம்    - இயல்பாக செயல்படுபவை, முத்து, மரகதம்

நவரத்த்னங்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ஆக முடியுமா எனக்கேட்டால்...என் பதில், நவரத்தினங்கள் உங்கள் மனதை இன்னும் தெளிவாக்கும்..தன்னம்பிக்கை,தைரியத்தை அதிகப்படுத்தும் ..

ஏனென்றால் சந்திரன் இருக்கும்...ராசிக்குண்டான கல்லை அணிகிறோம்..சந்திரன் மனதை குறிக்கிறது..இதனால் நம் மனம் செம்மையாகும்..இந்த்க்கற்களின் ஒளி...நம் உடலில் பரவும் சூரியக்கதிர்களுடன் இணைந்து ,உடலுக்கும்,மனதிற்கும்..அதிக சக்தியை வழங்குவதாக முன்னோர்களும் நம்பினர்..சாஸ்திரங்களும் அதையே விவரிக்கின்றன்..தங்கள் அந்தஸ்து உயர்வை காட்டவோ,அழகை பிரதிபலிக்கவோ,ஒரு நம்பிக்கையிலோ பிரபலங்கள் அனைவரும் ராசிக்கற்கள் அணியத்தான் செய்கின்றனர்..மனசு நல்லாருந்தா போதும் சார்..கோடீஸ்வரன் ஆக முடியாதா என்ன..?

E