ஞாயிறு, 24 ஜூலை, 2011

நவரத்தினக்கற்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ஆகலாமா..?


நவரத்தினக்கற்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ;


நவரத்தினங்களின் பூர்வீக வரலாறு

 நவரத்னங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே...பூமியில் தோன்றியவை. பூமிக்கடியில் வெட்டி எடுக்கப்படும் இவை தரும் அதிர்ஸ்டம் பற்றி நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். மன்னர்கள் நவரத்னங்களை போற்றி பாதுகாத்தனர். இதனை அணியாத தமிழ் மன்னர்கள் இல்லை. சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், சிற்றரசர்களும் பெரிய தலைவர்களும் நவரத்னங்களை கொண்டும், மற்ற மணிகளை கொண்டும் தங்களது செல்வத்தையும், மதிப்பையும் உயர்த்தி கொண்டனர். 

தங்களை அலங்கரித்தும் மகிழ்ந்தனர். தமிழர்களின் சரித்திரத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற கல்வெட்டுகளும் பட்டயங்களும் நமது நாட்டின் அரசர்களை பற்றியும், நம் நாட்டில் எழுந்தருளியிருக்கின்ற தெய்வங்களை பற்றியும் கூறுகின்றன. அரசர்களும் தெய்வங்களும் அணிந்திருந்த இரத்தினங்களைப் பற்றியும் அவைகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.


ஹாலாஸ்ய மகாத்மியம்என்னும் வடமொழி நூலிலும், தமிழில் உள்ள திருவிளையாடற்புராணத்திலும் இரத்தினங்களின் வகைகளை பற்றியும், அவைகளின் இலக்கணத்தை பற்றியும் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இறைவன் சோமசுந்தரர் ஒரு வணிகராக வருகிறார். அப்போது இறைவன் பாண்டிய மன்னருக்காகவும் அவரது திருமுடிக்காகவும் அரிய மாணிக்கங்களையும் மற்ற ரத்தினங்களையும் விற்கிறார். அப்போது மந்திரிகள் அந்த வணிகரிடம் இரத்தினங்களின் இலக்கணத்தைப் பற்றி கேட்க, பெருமானும் இரத்தினங்களின் இலக்கணத்தை பற்றி விவரமாக சொல்கிறார். இதுவே மாணிக்கம் விற்ற திருவிளையாடல்என்ற பகுதியாக திருவிளையாடல் புராணத்தில் வருகிறது. தமிழ்நாட்டின் அரிய பொக்கிஷமான சிலப்பதிகாரத்திலும் இரத்தினங்களின் இலக்கணங்களைப் பற்றி இளங்கோவடிகள் மிகவும் விளக்கமாக எழுதியுள்ளார்.

நவரத்தினங்களில் ஒன்பது நவரத்தினங்களில் 84 வகைகளுக்கு மேல் இருக்கின்றன. 

ஜோதிடமும் நவரத்தினங்களும்

நமது ராசிக்கு ஏற்றவாறு நவரத்னங்களை அணியலாம். நமது ஜாதகத்தில் பலவீனப்பட்ட கிரகங்கள், லக்னத்திற்கு யோகமான கிரகங்களுக்கு பலம் கொடுக்கும் வகையில் ராசிக்கற்கள் அணியலாம். ஜாதகப்படி நடக்கும் திசாபுத்திகள் பாவ கிரகங்களாக இருந்தால் அதற்கேற்றவாறு ராசிக்கற்கள் அணியலாம். பிறந்ததேதி, மாதத்திற்கு ஏற்றவாறும் ராசிக்கற்கள் அணியலாம். இவை அனைத்துமே நல்ல பலன்களை தருகின்றன.

ராசிப்படி அணிய வேண்டியவை

மேஷம்  -  பவளம்
ர்pஷபம்  - வைரம்
மிதுனம்  - மரகதப்பச்சை
கடகம்  - முத்து
சிம்மம்  - மாணிக்கம்
கன்னி  - மரகதப்பச்சை
துலாம்  - வைரம்
விருச்சிகம்  - பவளம்
தனுசு   - புஷ்பராகம்
மகரம்   - நீலம்
கும்பம்  - நீலம்
மீனம்   - புஷ்பராகம்

பிறந்ததேதி படி அணிய வேண்டிய ராசிக்கற்கள்

1, 10, 19, 28  - மாணிக்கம்
2, 11, 20, 29  - சந்திரகாந்தகல், முத்து
3, 12, 21, 30  - புஷ்பராகம்
4, 13, 22, 31  - கோமேதகம்
5, 14, 23  - மரகதப்பச்சை
6, 15, 24  - வைரம்
7, 16, 25  - வைடூரியம், சந்திரகாந்தகல்
8, 17, 26  - நீலம்
9, 18, 27  - பவளம்

திசாபுக்திபடி அணிய வேண்டிய கற்கள்

ராகுதிசைக்கு  - கோமேதகம்
சனிதிசைக்கு  - நீலம்
கேதுதிசைக்கு  - சந்திரகாந்தகல், வைடூரியம்
செவ்வாய் திசைக்கு - பவளம்

ஜாதக தோஷப்படி அணியவேண்டியவை

லக்னத்தில் சனி இருந்தால், விபத்து போராட்டம். எனவே நீலம் அணியலாம்
லக்னத்தில் ராகு இருந்தால், முன்கோபம், பிடிவாதம், அலட்சியம் ஏற்படும். எனவே கோமேதகம் அணியலாம். லக்னத்தில் கேது இருந்தால் எடுத்த முயற்சிகளில் தோல்வி, தடை ஏற்படலாம். எனவே வைடூரியம் அணிவது நல்லது.





நவரத்னங்களின் பிரிவுகள்

நவரத்னங்களின் குணங்களை மனிதர்களின் இனத்தோடு ஒப்பிட்டும் நம் முன்னோர் பகுத்து பார்த்துள்ளனர். 

அந்தணர் சாதி ரத்தினங்கள் - வைரம், முத்து
அரசர் சாதி ரத்தினங்கள் - பவழம், மாணிக்கம்
வணிகர் சாதி ரத்தினங்கள் - புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம்
வேளாளர் சாதி ரத்தினங்கள் - நீலம், மரகதம்
இராஜதம் (வேகமாக செயல்படுபவை) - பவளம், மாணிக்கம், கோமேதகம்புஷ்பராகம்

தாமதம்    - தாமதமாக செயல்படுபவை, நீலம்
சாத்வீகம்    - இயல்பாக செயல்படுபவை, முத்து, மரகதம்

நவரத்த்னங்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ஆக முடியுமா எனக்கேட்டால்...என் பதில், நவரத்தினங்கள் உங்கள் மனதை இன்னும் தெளிவாக்கும்..தன்னம்பிக்கை,தைரியத்தை அதிகப்படுத்தும் ..

ஏனென்றால் சந்திரன் இருக்கும்...ராசிக்குண்டான கல்லை அணிகிறோம்..சந்திரன் மனதை குறிக்கிறது..இதனால் நம் மனம் செம்மையாகும்..இந்த்க்கற்களின் ஒளி...நம் உடலில் பரவும் சூரியக்கதிர்களுடன் இணைந்து ,உடலுக்கும்,மனதிற்கும்..அதிக சக்தியை வழங்குவதாக முன்னோர்களும் நம்பினர்..சாஸ்திரங்களும் அதையே விவரிக்கின்றன்..தங்கள் அந்தஸ்து உயர்வை காட்டவோ,அழகை பிரதிபலிக்கவோ,ஒரு நம்பிக்கையிலோ பிரபலங்கள் அனைவரும் ராசிக்கற்கள் அணியத்தான் செய்கின்றனர்..மனசு நல்லாருந்தா போதும் சார்..கோடீஸ்வரன் ஆக முடியாதா என்ன..?

E

கருத்துகள் இல்லை: