ராசிக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராசிக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பஞ்சலோகம் ரகசியங்கள்

பஞ்சலோகம்
------------------
பொதுவாக அனைவரும் தங்கம் ,வெள்ளியில் நகைகள் அணிவது வழக்கம் . இதிலுள்ள உட்கருத்துக்கள் என்னவெனில் அந்த உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்...இது மட்டும் போதுமா.. பஞ்சலோகத்தில் நகைகள் அணிந்தால் அது பெரும் பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை .தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.

நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது .இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதரிலும் பிரதிபலிக்கும் .இதை புரிந்து கொண்டதனால் பண்டைய மக்கள் பஞ்சலோகத்தின் உபயோகத்தை பரிந்துரை செய்தனர் என்பதில் சந்தேகமில்லை இதனால்தான் நம் கோயில்கள் அனைத்திலும் பஞ்சலோக சுவாமி சிலைகள் இருக்கின்றன..இதனை பார்ப்பதால் கண்கள் வழியாக அதன் ஒளி ஊடுருவி நன்மை தரும்..அதனை அபிசேகம் செய்த பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் கிடைக்கும் என பெரியோர்கள் கருதினர்..

பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி உடலில் உலோக சக்தியை அதிகரிக்கவும் செய்யும் .இதற்காகவே பஞ்சலோக நகைகள் அணிவது சிறப்பு..இதில் நான் ராசிக்கல் மோதிரம் செய்து என் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறேன்.பெரும்பாலும் என்ன ராசியோ அதற்கு ஏற்ற கல்லை கொடுப்பதில்லை..காரணம் நம் ஜாதகப்படி கிரக பலவீனம் அறிந்து கொடுக்க வேண்டும்..என்ன திசை நடக்கிறதோ அதையும் கவனிக்க வேண்டும்...அதன் படி ராசிக்கல் அணிந்தால் நன்மை நிச்சயம் உண்டு..உங்கள் பிறந்த தேதி,பிறந்த நேரம்,பெயர் இவற்றுடன் மெயில் செய்யுங்கள்...மோதிர விபரங்களை அனுப்புகிறேன்..sathishastro77@gmail.com

திங்கள், 22 ஜூலை, 2013

நிறைய சொத்துக்கள் சேர்க்கை யாருக்கு..? ஜோதிடம்-ராசிபலன்


நிறைய சொத்துக்கள் சேர்க்கை யாருக்கு..?

நிலத்திற்கு அதிபதி செவ்வாய். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்கள், நாலாம் இடம் வலுவடைந்தவர்களுக்கு நிறைய சொத்துக்கள் சேரும். ஜாதகத்தில் பத்தாமிடம், நான்காமிடம், செவ்வாய் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றவர்கள் ரியல் எஸ்டேட் எனப்படும் நிலம் வாங்கி விற்றல் தொழில் செய்கின்றனர். இதற்கு செவ்வாய் பலம் பெறுவதும் அவசியம். ஜாதகத்தில் சில குறைபாடுகள் இருந்து, ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருப்பவர்கள் பவழம், கோமேதகம் அணியலாம். பவழம் அணிவதால் செவ்வாய் கிரகத்தின் சக்தி இவர்களுக்கு கிடைக்கும். நிலம் சம்பந்தமான காரிய அனுகூலங்கள் கிடைக்கும். கோமேதகம், ராகுவிற்கு உண்டானது. ராகுவை போல கொடுப்பவனும் இல்லை. கேதுவைப்போல் கெடுப்பவனும் இல்லை என்பார்கள். பவழத்தை விட கோமேதகமே ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்கள் சேர்க்கைக்கு சிற்ப்பானது..இது பணம் தங்காமை,கடன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஏற்றது..

அந்தளவு ராகு நினைத்தால் ஒரேபொழுதில் ஒருவனை கோடீஸ்வர நிலைக்கு உயர்த்தி விடுவார்கள். தந்திரம், முரட்டுத்தனம், குறுக்குவழி அனைத்து சட்ட ஓட்டைகளும் அறிந்தவர் ராகு பகவான். பல மிகப்பெரிய அரசியல் ஊழல்களுக்கு காரணமாக இருந்தவர்கள் பலர் ஜாதகத்தில் ராகுவே கொடுப்பவராக இருந்திருக்கிறார். ராகு புதையல் போல செல்வத்தை தரக்கூடியவர். அக்காலத்தில் பலர் புதையல் எடுக்க கோமேதகத்தை பயன்படுத்தினார்கள். தீயசக்திகளை அடக்கவும், சாபம் உள்ள நிலங்களின் கெட்ட சக்திகளை கட்டுப்படுத்தவும் கோமேதகம் பயன்படுகிறது.

ராசிக்கல் மோதிரம் வாங்க விரும்புபவர்கள்..பிறந்த தேதி,நேரத்துடன் மெயில் செய்யவும்...ஐம்பொன்னில் மோதிரம் செய்து ராசிக்கல் பதித்து தருகிறேன்..மெயில்;sathishastro77@gmail.com

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

ஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக


கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக

ஜாதகத்தில் 7ம் இடம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்களாகிய சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய், ராகு 10 சந்திரன், ராகு 10 சூரியன், செவ்வாய் 10 சூரியன், சனி 10 சந்திரன், சூரியன்10சனி அமையப்பெற்றவர்களும், களத்திரஸ்தானாதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் குடும்பவாழ்வில் போராட்டமாக இருக்கும். பிரிவு ஏற்படலாம். தினசரி சண்டை, சச்சரவுகளாக காணப்படலர். இருவரும் எலியும், பூனையுமாக இருப்பார்கள். சாப்பாடு விஷயம் முதல், எதற்கெடுத்தாலும் குற்றம், குறை காணுகிற வாழ்க்கை துணை அமைந்து கஷ்டப்படுகிறீர்களா...

 கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக முத்து அல்லது சந்திரகாந்தகல் பதித்த வெள்ளி மோதிரம் அணியலாம்.  இவை சந்திரனின் ஆகாஷண சக்தியை தன்னகத்தே கொண்டவை. காதலுக்கு காரகத்துவம் வாய்ந்த கிரகமாகிய சந்திரன் சக்தி பூரணமாக கொண்ட ரத்னங்கள் முத்து, சந்திரகாந்த கற்கள் ஆகும். முத்து ஒரிஜினல் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. ஹைதராபாத் முத்து எனப்படும் செயற்கையாக தயாரிக்கப்படும் முத்துகளே அதிகளவில் இப்போது கிடைக்கின்றன. இதைவிட, சந்திரகாந்தகல் அணிவது மிக உத்தமம். இந்தகல் மிகவும் குளிர்ச்சியானது. சந்திரன் சக்தியை உறிஞ்சி வழங்கக்கூடிய காந்தக்கல் போன்றது என்பதால் சந்திரகாந்தக்கல் எனப்படுகிறது.

இது மனதில் அமைதியும், அன்பையும் ஏற்படுத்தச் செய்யும். மனதில் நம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்தும். மனதில் எப்போதும் கவலை சுமப்பவர்கள், சின்ன விஷயத்திற்கும் பயப்படுபவர்கள் தைரியமாக இதனை அணியலாம். அம்பாள் சக்தி நிரம்ப கிடைக்கும். தாய் கிரகமானாக சந்திரன் இருப்பதால், ஒரு தாயை போல அணிந்தவர்களை காப்பாற்றக்கூடியவை இந்த கற்கள். ஜாதகத்தில் சந்திரன் 6,8,12ல் மறைந்தவர்களுக்கும், கேது, ராகு, செவ்வாய், சனியுடன் இணைந்து காணப்படும் ஜாதகத்தை உடையவர்களும் இந்த கல்லை அணிந்து பலன் பெறலாம்.

2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களும் இதனை அணியலாம். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்த கல் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இந்த தேதிக்காரர்களே அதிக கற்பனை, வீண்பயம், மனக்குழப்பத்தை அதிகம் உடையவர்களாகவும், குடும்ப பிரச்சினைகளை சந்திப்பவர்களாகவும் இருக்கிறார்கள். 8,17,26,9,18,27 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து மனவருத்தத்துடன் வாழ்கிறார்கள். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் நல்லது. 8,9 வரும் எண்களை பிறந்த தேதியாக கொண்டவர்களை தவிர மற்ற எண்காரர்களை இவர்கள் மணக்கலாம்.


ஞாயிறு, 24 ஜூலை, 2011

நவரத்தினக்கற்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ஆகலாமா..?


நவரத்தினக்கற்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ;


நவரத்தினங்களின் பூர்வீக வரலாறு

 நவரத்னங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே...பூமியில் தோன்றியவை. பூமிக்கடியில் வெட்டி எடுக்கப்படும் இவை தரும் அதிர்ஸ்டம் பற்றி நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். மன்னர்கள் நவரத்னங்களை போற்றி பாதுகாத்தனர். இதனை அணியாத தமிழ் மன்னர்கள் இல்லை. சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், சிற்றரசர்களும் பெரிய தலைவர்களும் நவரத்னங்களை கொண்டும், மற்ற மணிகளை கொண்டும் தங்களது செல்வத்தையும், மதிப்பையும் உயர்த்தி கொண்டனர். 

தங்களை அலங்கரித்தும் மகிழ்ந்தனர். தமிழர்களின் சரித்திரத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற கல்வெட்டுகளும் பட்டயங்களும் நமது நாட்டின் அரசர்களை பற்றியும், நம் நாட்டில் எழுந்தருளியிருக்கின்ற தெய்வங்களை பற்றியும் கூறுகின்றன. அரசர்களும் தெய்வங்களும் அணிந்திருந்த இரத்தினங்களைப் பற்றியும் அவைகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.


‘ஹாலாஸ்ய மகாத்மியம்’ என்னும் வடமொழி நூலிலும், தமிழில் உள்ள திருவிளையாடற்புராணத்திலும் இரத்தினங்களின் வகைகளை பற்றியும், அவைகளின் இலக்கணத்தை பற்றியும் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இறைவன் சோமசுந்தரர் ஒரு வணிகராக வருகிறார். அப்போது இறைவன் பாண்டிய மன்னருக்காகவும் அவரது திருமுடிக்காகவும் அரிய மாணிக்கங்களையும் மற்ற ரத்தினங்களையும் விற்கிறார். அப்போது மந்திரிகள் அந்த வணிகரிடம் இரத்தினங்களின் இலக்கணத்தைப் பற்றி கேட்க, பெருமானும் இரத்தினங்களின் இலக்கணத்தை பற்றி விவரமாக சொல்கிறார். இதுவே ‘மாணிக்கம் விற்ற திருவிளையாடல்’ என்ற பகுதியாக திருவிளையாடல் புராணத்தில் வருகிறது. தமிழ்நாட்டின் அரிய பொக்கிஷமான சிலப்பதிகாரத்திலும் இரத்தினங்களின் இலக்கணங்களைப் பற்றி இளங்கோவடிகள் மிகவும் விளக்கமாக எழுதியுள்ளார்.

நவரத்தினங்களில் ஒன்பது நவரத்தினங்களில் 84 வகைகளுக்கு மேல் இருக்கின்றன. 

ஜோதிடமும் நவரத்தினங்களும்

நமது ராசிக்கு ஏற்றவாறு நவரத்னங்களை அணியலாம். நமது ஜாதகத்தில் பலவீனப்பட்ட கிரகங்கள், லக்னத்திற்கு யோகமான கிரகங்களுக்கு பலம் கொடுக்கும் வகையில் ராசிக்கற்கள் அணியலாம். ஜாதகப்படி நடக்கும் திசாபுத்திகள் பாவ கிரகங்களாக இருந்தால் அதற்கேற்றவாறு ராசிக்கற்கள் அணியலாம். பிறந்ததேதி, மாதத்திற்கு ஏற்றவாறும் ராசிக்கற்கள் அணியலாம். இவை அனைத்துமே நல்ல பலன்களை தருகின்றன.

ராசிப்படி அணிய வேண்டியவை

மேஷம்  -  பவளம்
ர்pஷபம்  - வைரம்
மிதுனம்  - மரகதப்பச்சை
கடகம்  - முத்து
சிம்மம்  - மாணிக்கம்
கன்னி  - மரகதப்பச்சை
துலாம்  - வைரம்
விருச்சிகம்  - பவளம்
தனுசு   - புஷ்பராகம்
மகரம்   - நீலம்
கும்பம்  - நீலம்
மீனம்   - புஷ்பராகம்

பிறந்ததேதி படி அணிய வேண்டிய ராசிக்கற்கள்

1, 10, 19, 28  - மாணிக்கம்
2, 11, 20, 29  - சந்திரகாந்தகல், முத்து
3, 12, 21, 30  - புஷ்பராகம்
4, 13, 22, 31  - கோமேதகம்
5, 14, 23  - மரகதப்பச்சை
6, 15, 24  - வைரம்
7, 16, 25  - வைடூரியம், சந்திரகாந்தகல்
8, 17, 26  - நீலம்
9, 18, 27  - பவளம்

திசாபுக்திபடி அணிய வேண்டிய கற்கள்

ராகுதிசைக்கு  - கோமேதகம்
சனிதிசைக்கு  - நீலம்
கேதுதிசைக்கு  - சந்திரகாந்தகல், வைடூரியம்
செவ்வாய் திசைக்கு - பவளம்

ஜாதக தோஷப்படி அணியவேண்டியவை

லக்னத்தில் சனி இருந்தால், விபத்து போராட்டம். எனவே நீலம் அணியலாம்
லக்னத்தில் ராகு இருந்தால், முன்கோபம், பிடிவாதம், அலட்சியம் ஏற்படும். எனவே கோமேதகம் அணியலாம். லக்னத்தில் கேது இருந்தால் எடுத்த முயற்சிகளில் தோல்வி, தடை ஏற்படலாம். எனவே வைடூரியம் அணிவது நல்லது.





நவரத்னங்களின் பிரிவுகள்

நவரத்னங்களின் குணங்களை மனிதர்களின் இனத்தோடு ஒப்பிட்டும் நம் முன்னோர் பகுத்து பார்த்துள்ளனர். 

அந்தணர் சாதி ரத்தினங்கள் - வைரம், முத்து
அரசர் சாதி ரத்தினங்கள் - பவழம், மாணிக்கம்
வணிகர் சாதி ரத்தினங்கள் - புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம்
வேளாளர் சாதி ரத்தினங்கள் - நீலம், மரகதம்
இராஜதம் (வேகமாக செயல்படுபவை) - பவளம், மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம்

தாமதம்    - தாமதமாக செயல்படுபவை, நீலம்
சாத்வீகம்    - இயல்பாக செயல்படுபவை, முத்து, மரகதம்

நவரத்த்னங்கள் அணிந்தால் கோடீஸ்வரன் ஆக முடியுமா எனக்கேட்டால்...என் பதில், நவரத்தினங்கள் உங்கள் மனதை இன்னும் தெளிவாக்கும்..தன்னம்பிக்கை,தைரியத்தை அதிகப்படுத்தும் ..

ஏனென்றால் சந்திரன் இருக்கும்...ராசிக்குண்டான கல்லை அணிகிறோம்..சந்திரன் மனதை குறிக்கிறது..இதனால் நம் மனம் செம்மையாகும்..இந்த்க்கற்களின் ஒளி...நம் உடலில் பரவும் சூரியக்கதிர்களுடன் இணைந்து ,உடலுக்கும்,மனதிற்கும்..அதிக சக்தியை வழங்குவதாக முன்னோர்களும் நம்பினர்..சாஸ்திரங்களும் அதையே விவரிக்கின்றன்..தங்கள் அந்தஸ்து உயர்வை காட்டவோ,அழகை பிரதிபலிக்கவோ,ஒரு நம்பிக்கையிலோ பிரபலங்கள் அனைவரும் ராசிக்கற்கள் அணியத்தான் செய்கின்றனர்..மனசு நல்லாருந்தா போதும் சார்..கோடீஸ்வரன் ஆக முடியாதா என்ன..?

E