ஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம்;
சினிமாவில் ரொம்ப வருசமா இருக்கேன்.இன்னும் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கலை..என் ஜாதகப்படி அந்த அமைப்பு இருக்கான்னு பாருங்க சார் என பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு ஜாதகம் பார்த்து இருக்கிறார்கள்.துணை இயக்குனர்கள்,பலர் பல வருடம் சினிமாவில் இருந்தும் இயக்குனர் ஆக முடியவில்லையே என வருந்துவர்.ஒரு படம் இயக்கிவிட்டு படம் சுமாராக ஓடியது அப்புறம் பட வாய்ப்பே வரலை..இனி என் எதிர்காலம் என்னாகும் என வருந்துபவர்கள் இருக்கிறார்கள்.
சினிமாவில் நடிக்கணும் கோடம்பாக்கத்தை,இயக்குனர்,தயாரிப்பாளர் வீட்டு வாசலில் பழியாய் கிடப்பவர்கள்,பாட வாய்ப்பு,கதை எழுத,பாடல் எழுத வாய்ப்பு கேட்டு எத்தனையோ பேர் தவம் இருக்கிரார்கள்.
பொதுவாக சினிமா துறையில் புகழ்பெற ,வெற்றி பெற ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்?
ஆயக்கலைக்கள் மொத்தம் 64.இதில் ஏதேனும் ஒரு கலையிலோ பல கலையிலோ திறமை பெற்றிருந்து,கலைஞனாக திகழும் அமைப்பு பெற்றால் அவர் சினிமாவிலும் புகழ் பெற இயலும்...
அந்த திறமை பெற்றவர்கள் யார்? இதற்கு எந்த கிரகங்கள் துணை செய்யும்?
புதன் -பிறரை தன் பக்கம் வசியம் செய்து இழுக்கும் தந்திர கிரகம்,யாரை பிடித்தால் காரியம் நடக்கும் எனும் கணக்கு போட்டு கச்சிதமாக காரியத்தை முடிக்கும் கிரகம்...ஆள் கிட்ட சரக்கு இருக்குப்பா என பிறரை நம்ப வைக்கும் கிரகம்.
இந்த புதன் உங்கள் ஜாதகத்தில் தனித்து ஆட்சி,உச்சம்,கேந்திர -திரிகோணங்கள் பெற்றிருக்க வேண்டும்....
ஜீவனாதிபதி யாராகிலும் புதனாம்சம் பெற்றிருக்க வேண்டும்...
அறிவுக்கும்,அழகுக்கும்,கற்பனை வளத்துக்கும்,மனோபலத்துக்கும் உரிய சந்திரன் தனித்து ஆட்சி உச்சம்,பாவகிரக சேர்க்கை இல்லாது இருத்தல்,கேந்திர-திரிகோணம் ஏறியிருத்தல் வேண்டும்
அழகு,கவர்ச்சி,தரும் சுக்கிரன் இவர்தான் சினிமாவுக்குண்டான முக்கிய கிரகம் இவர்தான் நடிகைகளுக்கு அவசியம் தேவை..சுக்கிரன் நன்கு அமைந்த பெண்கள் மட்டுமே நடிகை,நடிகன் ஆக முடியும்....சுக்கிரன் நன்றாக ஒருவர் ஜாதகத்தில் இருந்தால்தான் முகம் லட்சணமாக கன்னம் உப்பலாக..உடல் கவர்ச்சியாக ...அமையும்.
சுக்கிரன் மீனத்தில் உச்சமாகி புதன் நீசமாகி இருந்தால் நீசபங்கமேற்படுவதால் பலன் அதிகம்தான்...
ரிசபம்,மிதுனம்,கன்னி,துலாம்,மகரம்,கும்பம்,மீன ராசி ஒன்றில் புதன்,சுக்கிரன் சேர்ந்திருந்தாலும் அவர் கலைஞர் தான்..ரஜினிக்கு இப்படி அமைப்புதான்.
புதன்,சுக்கிரன்,சந்திரன் ஏழில் இருந்தால் அவர் மிக சிறந்த கலைஞர் எனலாம்..அல்லது இவர்கள் இணைந்து ஏழாமிடத்தை பார்க்கலாம்.
சனியும்,சுக்கிரனும் சம்பந்தம் பெற்றால் விஜய் போல நடனமும் நன்றாக வரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக