திருமணம் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக பத்து வருடங்களுக்கு முன்பு சொல்வதுண்டு.முதிர்கன்னிகள் என கவிதையெல்லாம் எழுதுவார்கள்.ஆனால் இன்றோ முதிர்கன்னிகள் நிலை மாறி முதிர் கண்ணன்கள் அதிகமாகி விட்டார்கள்.ஒவ்வொரு சாதியிலும் படித்த நல்ல வசதியான ஒழுக்கமான பையன்கள் திருமணம் ஆகாமல் எதனால் இந்த தாமதம் என்றும் புரியாமல் தவிக்கிறார்கள்.
ஒவ்வொரு திருமண தகவல் மையத்திலும் இது போன்ற இளைஞர்கள் ஜாதகங்கள் குவிகின்றன.ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் வைத்திருக்கும் திருமண தகவல் மைய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது,திருமணம் பொறுத்தவரை பசங்க ஜாதகம் தான் அதிகம் வருகிறது.என்கிறார்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கு 7வது ராசியில் சனி,சூரியன்,ராகு,கேது இவற்றில் ஒரு கிரகம் இருந்தாலும் திருமனம் தாமதமாகிறது...லக்னத்தில் மேற்கண்ட கிரகங்கள் இருந்தாலும் குடும்ப ஸ்தானம் எனும் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் மேற்கண்ட அசுப கிரகங்கள் இருந்தாலும் திருமணம் தாமதம் ஆகும்.
பெண் ஜாதகத்தில்,8ஆம் இடத்தில் ,செவ்வாய் சேர்ந்திருந்தாலும் சனி மட்டும் இருந்தாலும் சூரியன் மட்டும் இருந்தாலும் ராகு கேது இருந்தாலும்,மாங்கல்ய தோசம் என்பார்கள்.. இதனால் திருமணம் தாமதம் ஆகும்..
ஜாதகத்தில் 6,8ஆம் அதிபதி திசை நடந்தாலும் திருமணம் தாமதம் ஆகும்..7ஆம் அதிபதி,9ஆம் அதிபதி,சுக்கிர திசை புத்தி நடந்தால் திருமணம் தடையின்றி உடனே நடக்கும் ..குருபலம் இருந்தும் சிலருக்கு திருமணம் தாமதம் ஆக சனி லக்னத்திலோ 7,8 ஆம் இடத்திலோ இருப்பதுதான் காரணம் குறிப்பாக பெண்களுக்கு இவ்வாறு இருந்துவிட்டால் சரியான வாழ்க்கை துணை அமைவதில்லை அல்லது திருமண விசயத்தில் முடிவெடுக்க முடியாமலோ அல்லது திருமணத்தின் மீது ஆர்வம் இல்லாமலோ போய்விடும்..அப்படி அமைந்தாலும் கணவர் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் குடும்பத்தை கவனிக்காதவராகவும் அமைந்துவிடுவதுண்டு!
4 கருத்துகள்:
காதல் நல்ல யோசனை பகிர்வுக்கு நன்றி
நிதர்சனப் பகிர்வுக்குப் பராட்டுக்கள்.
இன்றய அரசியல்வாதியில் எமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)
ஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்
//பொண்ணுங்க வயசுக்கு வந்தவுடன் சொந்தத்திலேயே அட்வான்ஸ் புக்கிங் செய்து விடுவதால்//
அட்வான்ஸ் புக்கிங்!! ஹா ஹா
கருத்துரையிடுக