வியாழன், 15 செப்டம்பர், 2011

ஜோசியத்தை நம்பு

ஜோசியம் உங்கள் வாழ்வின் அனைத்து விவரங்களை தெளிவாக எடுத்துரைக்கும்.

எதிர்காலத்தில் உங்கள் செயல்பாடு எப்படி இருந்தால் வெற்றி கிடைக்கும் என வழிகாட்டும்.

குடும்ப வாழ்வில் சிறந்த ஆலோசனை சொல்கிறது.
ஏமாற்றுகாரனை,உனக்கு துரோகம் செய்பவனை அடையாளம் காட்டுகிறது.

நாத்திகம் பேசி ஊரை கொள்ளையடிப்பவ்னை விட ஆத்திகம் பேசி 50 ரூபாய் வாங்குபவன் எவ்வளவோ மேல்.

ஜோசியம் இந்து மதத்துக்கு மட்டும் சொந்தமல்ல.அது ஒரு கணக்கு.அனைத்து மதத்துக்குக்கும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம்.

பட்சி தெரிந்தவனை பகைத்துகொள்ளாதே..ஓரை பார்த்து நடந்தால் துன்பமில்லை என்பது முன்னோர் சொன்ன ஜோதிட மொழி.

பிறந்த நேரமும் தேதியும் அன்றைய பிரபஞ்ச கிரக அமைப்புகளை சொல்லும் கட்டங்கள்.அவைதான் கிரக அசைவுகளை கொண்டு ஒரு மனிதனின் வாழ்நாள் பலன்களை கணிக்க உதவுகிறது.

நட்சத்திரங்கள் பார்த்து நடந்தால் நிலையான வெற்றி பெறலாம்.
ராகு காலத்தில் செய்யப்படும் ,முயற்சிக்கும் காரியங்கள் பெரும் துன்பத்தையே தரும்.

நல்ல நேரம் பார்த்து நல்லதை செய்வோம்.

ராமயணத்தில் ராமனும் தன் பிறந்த நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் வரும் நாளில் போர் தொடௌத்தால் வெற்றி என கணக்கிட்டு உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் போர் தொடுத்து வெற்றி கண்டான் என கம்பரே சொல்கிறார்.

புராணம்,இதிகாசம்,வரலாறு,உலக இலக்கியம் எதிலும் ஜோசியம் எனும் காலக்கணிப்பு இல்லாமல் எதுவும் நடந்ததில்லை.

ஜோசியத்தை நம்பினால் உனக்கு பலன்.நம்பாவிட்டால் அடுக்கு மொழியில் பேசி கடவுள் மறுப்பாளன் உன் சொத்தையே அபகரிப்பான்.



கருத்துகள் இல்லை: