நட்சத்திர
சாரம்
ஜோதிடத்தில் நட்சத்திரத்தின் முக்கிய பங்கு என்ன? ஏன் நட்சத்திரங்கள் ஒரு அங்கமாக ஜோதிடத்தில் இருக்கிறது.
ரிஷிகளும் முனிவர்களும் நட்சத்திரத்தின் வல்லமையை உணர்ந்திருந்தனர். சூரியன் போல பல மடங்கு வெளிச்சமும், ஆற்றலும் கொண்டவை நட்சத்திரங்கள்.
எனவே தான், நட்சத்திரம் பற்றிய ஆய்வு செய்து அதை பற்றி விளக்கி உள்ளனர். ஒவ்வொரு நட்சத்திரத்தை ஒவ்வொரு கிரக பலத்துடனும் காரகத்துடனும் முடிவாக வெளிட்டனர். அதில் திரிகோண ஸ்தானத்தில் வரும் நட்சத்திர காரகம் இயற்கையால் ஒரே மாதிரி அமைப்பில் இருந்ததை கண்டு வியந்து, திரிகோணத்தின் மகிமை அறிந்தனர்.
வானில் ராசி மண்டலம் என்பது, பல நட்சத்திர கூட்டங்களை உள்ளடக்கியது என்கிறது விஞ்ஞானம். ஒரு கிரகம் ஒரு ராசியில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர கூட்டம் வழியேதான் செல்கிறது. மேலும் ஒரு பாவத்தின் ஆதிபத்திய பலனை, கிரகங்கள் நட்சத்திரம் மூலமே பெற்று தருகிறது. இதில் இருந்து நட்சத்திர சாரம் என்பதன் முக்கியத்துவம் அறியலாம்.
ஒவ்வொரு கிரகமும், சூரியனின் கட்டுப்பாட்டிலும். சூரிய ஒளியை பிரதிபலிகிறது என்பதை தாண்டி, சூரியனை போல பல மடங்கு ஒளி பெற்ற நட்சத்திரங்களில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர காரகதுவதையும் பூமிக்கு பிரதிபலிகிறது என்பதே முழு உண்மை. எனவே நட்சத்திர பலம் அறிய நட்சத்திர அதிபதிகளை முனிவர்கள் வகுத்து சென்றனர்.
உங்கள் ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறது..?
அந்த கிரகத்தின் நட்சத்திரம் என்ன..? அந்த நட்சத்திர அதிபதி நல்லவரா கெட்டவரா என்பதையும்
பார்த்துக்கொள்ளுங்கள்…மிதுன லக்னத்துக்கு சுக்கிர திசை நடக்கிறது..சுக்கிரன் நன்றாக
இருக்கிறார்..ஆனால் அவர் இருப்பது செவ்வாய் நட்சத்திரத்தில்.செவ்வாய் லக்ன பாவி…அதனால்
திசை சிறப்பான யோகத்தை தரவில்லை என அறியலாம் இதுவே புதன் நட்சத்திரத்தில் இருந்தால்
புதன் சுகாதிபதி சொத்துக்களை நிறைய தருவார்.
சாரம் தரும் பலன்களின் விளக்கம்
----------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.
2. லக்ன நட்பு கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்
-------------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.
ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.
ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு ஏற்க்குறைய ஒத்து வருவதை காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக