உப்பிட்டவரை உள்ளளவும் நினை..உப்பிட்டவருக்கு துரோகம் எண்ணாதே என்ற பழமொழியின் பின்னால் நிறைய உண்மைகள் இருக்கு.உப்பு மிக சக்தி வாய்ந்தது அது சுவை மட்டும் கொடுக்கும் பொருள் அல்ல.உப்பு மகாலட்சுமியின் அம்சம்.தெய்வீக பொருளாகத்தான் இந்தியாவில் பார்க்கப்படுகிறது.நிறைய சம்பிரதாயங்கள் உப்பை வைத்தே செய்யப்படும்.உப்புக்கு வறுமையை விரட்டும் சக்தி உண்டு.உப்பை தொட்டுவிட்டு உண்மையை மட்டும் பேசனும் பொய் சொன்னால் அது முதல் உங்கள் வாழ்வில் இறங்குமுகம்தான்.
சனியின் கடுமையான தோசங்களை போக்க இரும்பு சட்டியில் உப்பு போட்டு தானமாக தருவதால் கடும் துன்பம் தீரும்.வெள்ளிக்கிழமை உப்பு வாங்குவதால் அதிர்ஷ்டம் பெருகும்.
உப்பு மீது சத்தியம் செய்து விட்டு அதை மீறினால் கடுமையான துன்பங்கள் வந்து சேரும்.இன்றளவும் உப்பு மீது சத்தியம் செய்து விட்டு கடன் வாங்குவோர் உண்டு..உப்பு சத்தியம் என்பதால் வட்டிப்பணத்தை சரியாக கொடுத்து விட வேண்டும் என்ற பயம் இருக்கும்.உப்பை தரையில் சிந்தினால் பாவம்...திருமணம் செய்து வீட்டுக்கு வரும் மணப்பெண் உப்பையும் பருப்பையும் கொண்டு வருவாள்.
கொங்கு பகுதியில் திருமண நிச்சயத்தின் போது உப்பு சாட்சியாக வைத்து திருமணத்தை உறுதி செய்வர் அதை மீறி வேறு பக்கம் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விடக்கூடாது என்பதற்காக உப்பு மையமாக வைத்து பேசப்படுகிறது.
எல்லா ஆசைகளையும் துறந்தவர் தான் ஆன்மீகவாதி... கோயிலுக்கு போவோர் எல்லாம் ஆன்மீகவாதி அல்ல.ஆன்மீகவாதி உணவின் மீதான ஆசையை கைவிட வேண்டும் அக்காலத்தில் உப்பில்லா உணவு சாப்பிட்டு துறவு வாழ்க்கையை வாழ்வர்..உப்பை கைவிட்டால்தான் உண்மையான ஆன்மீகவாதி என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மன வைராக்கியம் இருப்போர்தான் யோக சாதனையை செய்து நீண்ட காலம் வாழ முடியும்.மக்களுக்கு நல்வழி காட்ட முடியும்.முறையான சிவபூஜை தொய்வின்றி நடத்த முடியும்.மன வைராக்கியம் பெருக,நாக்கை கட்டுப்படுத்த,ஆசைகள் உணர்வுகளை கட்டுப்படுத்த உணவில் உப்பை கைவிடல் முக்கிய பயிற்சியாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக