திங்கள், 18 டிசம்பர், 2017

சனிப்பெயர்ச்சி 2017 -2020 உங்க ராசிக்கு நல்லது கெட்டது தெரிஞ்சுக்குங்க



சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 12 ராசிக்கும் சுருக்கமாக தெளிவாக ஏற்கனவே எழுதி இருக்கிறேன் அதை படிக்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பில் சென்று படிக்கவும்



                        http://www.astrosuper.com/2017/01/2017-2020.html





மேசம் ராசிக்கு அஷ்டம சனி முடிகிறது..ரிசப ராசியினருக்கு அஷ்டம சனி ஆரம்பிக்கிறது..!!!.துலாம் ராசியினருக்கு ஏழரை சனி விலகுகிறது....மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்..விருட்சிக ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது.தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ஆரம்பம் ஆகிறது!! மிதுனம் ராசிக்கு கண்டக சனி ஆரம்பம்




துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது நல்ல விசயம்..அடுத்த ஐப்பசியில் ஜென்ம குருவும் முடிந்தால்தான் முழு நிம்மதி கிடைக்கும்.ஜென்ம குரு அலைச்சல்,விரயம்,பண முடக்கம்,வருமான தடையை உண்டாக்கும்..நல்ல பெயர் மட்டும் வாங்கி என்ன செய்றது அரிசி பருப்பா வாங்க முடியும் நிலைதான்


சிம்ம ராசியினருக்கு சனி ராசிக்கு 5ல் வருகிறார் இது கெடுதலான இடம் அல்ல..கடந்த இரண்டரை ஆண்டு அர்த்தாஷ்டம சனியுடன் ஒப்பிட்டால் இனி வரும் காலம் நிம்மதியான காலமே....!!

சோம்பலும் ,சலிப்பும் சனியின் நண்பர்கள்...சனியின் தாக்கம் குறைய உங்கள் வீட்டுக்கு மேற்கு திசையில் இருக்கும் பிரபலமான கோயில் சென்று வழிபடுங்கள்..அது எந்த கோயிலாக இருந்தாலும் சரி.சனிக்கிழமையில் அல்லது அமாவாசை ,பெளர்ணமியில் போகலாம்...பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் கோயில் செல்வது ஆயுள் பலம் தரும்.


விருச்சிகம் ராசியினருக்கு பாத சனி நடக்கிறது...பாத தரிசனம் செய்தால் சனியின் பாதிப்புகள் குறையும்..தாய் தந்தைக்கோ அல்லது குருவுக்கோ பாத பூஜை செய்தாலும் பாதிப்புகள் குறையும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் எல்லா பெருமாள் கோயிலிலும் சனிக்கிழமையில் இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..ஸ்ரீரங்கம் சென்றால் இன்னும் சிறப்பு.
பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.
தமிழக – ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரையும் சனிக்கிழமையில் வழிபடலாம்

கருத்துகள் இல்லை: