சனி, 25 ஏப்ரல், 2020

அழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..? ஜோதிடம்


நல்ல மனைவி /கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும்,
ஏழாமிட அதிபதியும் கேந்திரம்(1,4,7,10)  மற்றும் கோணமேறி(1,5,9) ஆட்சி,உச்சம் பெற்று பாவிகள் பார்வையற்று சுப நட்சத்திரசாரம் பெற வேண்டும்.


( இதில் சில விதிவிலக்கு: மீனம்,மிதுனம்,கன்னி மற்றும் தனுசு ராசிகளான உபயராசிகளில் ஏழாம் அதிபதி  ஆட்சி,உச்சம் பெறாமல் வேறு மாதிரியான சூட்சும வலு பெறுதல் சுகம்.ஏனெனில் இந்ராசிகாரர்களுக்கு பாதகாதிபதியாகவும், அதேநேரத்தில்
கேந்திராதிபத்திய தோஷமும் பெற்றுவிடுகிறது.

உதாரணமாக
மீன ராசிக்கு ஏழாமிடத்தில் புதன்
ஆட்சி உச்சம் பெற்றாலும் திருமணவாழ்வில் சில பாதிப்பு இருக்கவே செய்கிறது)

அதேபோல் இரண்டாமிடத்திலும்,ஏழாமிடத்திலும் மற்றும் சுக்கிரனுடனும் பாவிகள் இணைவு,சேர்க்கை அற்று இருக்க வேண்டும்.
பெண்ணாக இருப்பின் செவ்வாயும்
பாவிகள் சேர்க்கை அற்றும் இருக்க
வேண்டும்.

                      அழகுடைய மனைவி  அமைய:


ஓருவர்  எவ்வளவுதான் அழகற்றவராகவும் இருந்தாலும்
தனக்கு வரும் மனைவி /கணவன் மட்டும் அழகுடையவராக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அழகற்றவர்களுக்கு அழகான மனைவி அமைவதும்,அழகானவர்களுக்கு அழகற்ற மனைவி அமைவதும் ஜாதகத்தில்
உள்ளபடியே நடக்கிறது.

ஒருவரின் முகதோற்றம், அழகு,நிறம்  இவற்றை நிர்ணயிப்பது
லக்கனம்,ராசி மற்றும் இரண்டாம்
பாவம்  அதில்  இருக்கும் கிரகம்,
அதன் அதிபதி  அந்த இடத்தை பார்க்கும்  கிரகம்.

8-ம் பாவத்தில் ஆட்சி,உச்சம் பெற்ற

கிரகம் ,8-ம்  அதிபதி ஆட்சி,உச்சம்
பெற்றாலும்,எட்டாமிடத்தை ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம் பார்த்தாலும்
அழகான மனைவி அமைவாள்.

ஏழாம் வீடு சுப கிரகத்தின் வீடாகவும்,
1,4,7,10,5,9  வீடுகளில் சுப கிரகமாகிய சுக்கிரன்,புதன்,குரு,வளர்பிறை சந்திரன்  அமர்ந்து காணப்பட்டால் அழகுடைய மனைவி
அமைவாள்.
  
                     




அழகற்ற மனைவி அமையக்காரணம்;

*******************

சுக்கிரனுடன் பாவ கிரகம் சேர்ந்தாலும்,அவை நிற்கும் ராசிக்கு
ஏழாமிடத்தில் பாவிகள் நின்றாலும்
அழகற்ற மனைவி அமைவாள்.

அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்யும் யோகம்
+++++++++++++++++++++++++++++

  மூன்றாம் அதிபதி லக்கனத்திற்கு
6 அல்லது 8 அல்லது அதன் அதிபதிகளுடன் இணைந்தாலும்,6,8-ம் பாவங்களை பார்த்தாலும்
அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்துகொள்ளும் யோகமாகும்.
          
                       

திருமணத்திற்கு பிறகு அயல்நாடு

செல்லும் யோகம்:

************************"*"**""*
 
திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்பட காரணம்
2-ம் அதிபதி  11- மிடத்திலும்,
11 ம் அதிபதி 2-ல் இருந்தாலும்,8-ம் அதிபதி 2-ல் இருந்தாலும் ,பார்த்தாலும்
எட்டாம்  அதிபதி  ஏழில் இருந்தாலும்,பார்த்தாலும்  ஏற்படுகிறது.

                  

ஊனமுற்ற மனைவி வாழ்க்கை துணையாக காரணம்

+++++++++++++++++++++++++++
   ஓரு பெண்  அல்லது ஆண் ஜாதகத்தில் 5,7,9  ம் வீடுகளில் சூரியன்,சுக்கிரன் அமர்ந்து காணப்பட்டாலும் அல்லது சுக்கிரன்,செவ்வாய் அமர்ந்து காணப்பட்டாலும் வாழ்க்கை துணை ஊனமாக அமைய வாய்ப்பு அமைகிறது.


செல்வந்தர் வீட்டுப்பெண் அல்லது ஏழை வீட்டுப்பெண் மருமகளாக வரக்காரணம்:

ஏழாம் வீட்டு அதிபதி  மிகவும் பலம் பெற்று காணப்பட்டால் தன்னிலும்
அதிக செல்வாக்கு பணமுடைய பெண் மனைவியாக அமைவாள்.
அதேநேரத்தில் ஏழாம் வீட்டு அதிபதி
பலம் குறைந்து காணப்பட்டால்
தனக்கு அமையும் மனைவியானவள்
தன்னை விட கீழ் நிலையில் உள்ளவளாகவும்,அதேநேரத்தில் ஏழையாகவும் இருப்பாள்.

                விதவையை திருமணம் செய்யும் யோகம்

ஏழில் செவ்வாய்,சுக்கிரன் அமர்ந்து
காணப்பட்டாலும்,ஏழாம் வீட்டு அதிபதி சனியாகி 6,8,12 ல் அமர்ந்தாலும் விதவையையோ அல்லது பிறரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மனைவியாக
அமைவாள்.

கருத்துகள் இல்லை: