செவ்வாய், 14 ஜூன், 2011

ராசிபலன் 13.6.2011 முதல்19.6.2011 வரை


மேசம்;

உங்களுக்கு என்ன சார்..அதட்டி பேசியே காரியம் சாதிச்சிடுவீங்க..இல்லைன்னா சூழ்நிலையை..கண்காணிச்சு சுதாரிப்பா நடந்துக்குவீங்க.எக்குதப்பா யார் பேசினாலும் டென்சனாக வேண்டாம்..அனுசரிச்சு போக ட்ரை பண்ணுங்க..ராசியில் .குரு உட்கார்ந்திருக்கார்.ஜென்மத்துல அவர் இருக்கிறதால.வீடு மாத்துற வேலை இருந்தா மத்திக்குங்க...தொழில் சம்பந்தமா அடிக்கடி பயணம் உண்டாகலாம்..அலைச்சல்தான்...உங்கள் பேச்சுக்கு பலம் கூடும்..பொருள் வரவு திருப்தியாக அமையும்..வருமானம் உயரும்..குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்..
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்திராஸ்டம தேதிகள்;14,15 


ரிசபம்;


என்ன சார் ரொம்ப ஜாலியா இருக்கீங்க..ஓகே..ஆனா செயலில் ஒண்ணையும் காணோம்..உங்க வேலையை சுத்தமா மறந்துட்டீங்களே...உங்கள் தொழிலில் எதிர்பாராத வருமானம் ,திடீர் பண வரத்துகள் போன வாரம் போலவே இந்த வாரமும் தொடருது..அதுக்கு காரணம் உங்க ராசினாதன் சுக்கிரன்..ராசியிலேயே ஆட்சி பெற்றதுதான்...உங்க பவர் என்னன்னு உங்களுக்கே இப்பதான் புரியுது...குடும்பத்தில் சில மனக்கசப்புகள் தொடர்கிறது..மனைவியிடம் கருத்து வேறுபாடு ,டென்சன்.அதிகமாகிறது..கொஞ்சம் கவனமா இருங்க... உங்களை மாதிரி செல்லம் கொஞ்ச ஆள் இல்லைனாலும் உங்களையும் மீறி சில வாக்குவாதம் இருக்கத்தான் செய்யுது...பணத்தை வீணடிக்காம அக்கவுண்ட்ல பத்திரப்படுத்துங்க..கடன்கள் அடைபடும் வாரம்...வங்கி கணக்கு தொகை உயரும் வாரம்..


எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்திராஸ்டம தேதிகள்;16,17


மிதுனம்;

கணக்கு புலி..உங்களை மத்தவங்க அப்பாவின்னு நினைச்சிகிட்டு இருப்பாங்க..ஆனா உங்க மனசுக்குள்ள ஓடுற கணக்கு அவங்களுக்கு எங்கே புரிய போகுது...பிசினஸ் திட்டங்கள்...கொஞ்சம் மந்தம்தான் என்றாலும்,ராசியாதிபதி புதன் மறைஞ்சதால எல்லா காரியமும் கொஞ்சம் மெதுவாகத்தான் போகும்..அதுக்காக டென்சன் ஆக வேண்டாம்..வீடு சம்பந்தமான சொத்து சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்தி வரும்..குருபலம் இருக்கிறதால தைரியமா புது முயற்சிகளில் ஈடுபடலாம்...பண வரவு திருப்திகரமாக இருக்கும்... 


எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்திராஸ்டம தேதிகள்;18,19




கடகம்;

நகைச்சுவை அரசர்,வசியகாரர் நீர்தான் அய்யா...எல்லோரையும் அனுசரித்து செல்லும் பாசக்கார நண்பன் நீங்கள்..ஆனா உங்களுக்கே கடுக்கா கொடுக்கும் நபர்கள் அதிகம்..விட்டு தள்ளுங்க...இது போல சிலபேர் இருக்கத்தான் செய்றாங்க..ஜாமீன் கையெழுத்து,சிபாரிசு பண்றது ,கடன் கொடுக்குறது இதையெல்லாம் நீங்க நிறுத்த போறதும் இல்ல..ஏமாற்றம் நிக்க போறதும் இல்ல..


ஆனாலும் உங்க உதவும் குணம் தொடரட்டும்.லாப ஸ்தானத்துல அரசு கிரகங்கள் இருப்பதால் அரசு சார்ந்த ஆதாயங்கள் கிட்டும்/..பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்...மதிப்பு,மரியாதை உயரும்படியான சம்பவங்கள் நடக்கும்...வருமானம் ,லாபம் அதிகரிக்கும்..அம்மா வழி சொந்தங்கள் மூலம் நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும்..

சிம்மம்;

காட்டுக்கு ஒரே ராஜா, சிங்க ராஜா ராசிக்காரரே....உங்கள் பிரச்சனை அலைகள் ஓய்ந்து வெளிச்ச புள்ளிகள் தெரியணுமே...புதிய தொழில் /பணியிடம் அமைதியாக செல்லும்...குருபலம் இருப்பதால் பண சிக்கல் நெருக்கடி குறையும்..தொழில் ரீதியாக புதிய திட்டம் தயார் செய்வீர்கள்...அப்பாவிடம் இணக்கம் காட்டுங்கள்...அவர் மூலமா இன்னும் சந்தோசமான செய்திகள் வரப்போகிறது...குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் நிறையும் வாரம்.

கன்னி;


ஜென்ம சனி வந்துடுச்சேன்னு கவலைப்படாதீங்க...உங்க தனித்தன்மை,உற்சாகத்தை இழக்காதீங்க...தொழிலில் முன்பு இருந்த சுறுசுறுப்பு குறைஞ்சிருக்கு..அல்லது தொழிலில் ஒரு தேக்க நிலை இருக்கு..இதுக்கா கவலைப்படுறீங்க..குரு பார்வை சிறப்பா இருக்கு சமாளிச்சிடலாம்...இன்னும் 6 மாசத்துல ஜென்ம சனி முடிஞ்சிடும்..இந்த வாரம் கடுமையாக உழைத்து பெரிய லாபம் ஒன்றை சம்பாதிப்பீர்கள்..அலைச்சல் இருந்தாலும் இறுதியில் சந்தோசம் உண்டு....வெளியூர் பயணம் இருக்கு.

துலாம்;



சுக்கிரன் ராசி நேயரே...சுக்கிரன் பலம் அடையும் போதெல்லாம் உங்க தன்னம்பிக்கை பல மடங்கு பெருகுமே! பணம் வரவு அதிகரிக்குமே..ஜாலிக்கும் குறைவில்லை..மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேத்துவீங்க..உல்லாச பயணம் போவீங்க...வங்கி கணக்கில் பணம் உயர்வதை கண்டு பூரித்து இருப்பீர்கள்..வேலை பளு அதிகரிக்கும் வாரம்..சிரமமா இருந்தாலும் முடிச்சிடுங்க..தள்ளிப்போட வேண்டாம்!

விருச்சிகம்;

நீங்க தைரியமானவராக காட்டிக்கொள்ளும் சுபாவம் உடையவர்..ஆனா நிறைய சந்தேகங்களும்,பயமும்,டென்சனும் இருப்பது உங்களுக்குத்தான் தெரியும்..கிரகம் பலமா இருக்கிற ஜாதகமா இருந்தா உங்களை துதி பாடினாத்தான், உங்களை சார்ந்து இருப்பவர்கள் தப்பிக்கலாம்...இல்லைன்னா ஆள் காலி..கொஞ்சம் கோபம் அதிகமோ...அடிக்கடி வாக்கு வாதத்துக்கு போயிடுறீங்க...அநியாயம் எங்கு நடந்தாலும் தட்டி கேட்பீங்க..ராசியில் ராகு இருப்பதால் துணிச்சல் அதிகரிக்கும் ..துணைவருடன் அதிக வாக்கு வாதமும் இருக்கும்..அதிக நெருக்கமும் இருக்கும்..எல்லாமே டாப்புதான்...ஒரு நாள் செல்லம் கொஞ்சுவதும்,அடுத்த நாள் வீடு அதிர கத்தி தீர்ப்பதும் நடக்கும்.செலவுகள் நிறைய காணப்படுகிறது....கவனமா செயல்படுங்க..

தனுசு;



குருபலம் பெற்ற ராசிக்காரர் நீங்கள்...மக்களுடன் நெருங்கி பழககூடியவர் நீங்கள்.ராசிக்கு ஐந்தில் குரு நிற்பதால் வெற்றி உங்கள் பக்கம்..சொத்து சார்ந்த பிரச்சனைகள் தீரும்.வர வேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும்.தொட்டது துலங்கும் வாரம்.

மகரம்;

உடல்நலனில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாக காரணம் நாலில் இருக்கும் குருதான்..மருந்து,மாத்திரை செலவுகள் இன்னும் இருக்கு..போனவாரம் போலவே மந்தமான வாரம்தான் என்றாலும் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள்...கோயில் வழிபாட்டிற்கு சென்று வருவீர்கள்...அலைச்சல்கள் காணப்படும்..செலவுகள் அதிகம் இருக்கு கவனம் தேவை.

கும்பம்;



அஷ்டம சனி இன்னும் விடலைன்னாலும்...போன வாரத்தை விட இந்த வாரம் உற்சாகம் தரும் வாரமாக இருக்கும்...செலவுகள் அதிகரித்த காலத்தில்,நஷ்டம் நடந்துருச்சி அதை பத்தி கவலைப்பட்டு பலன் இல்லை...இன்னும் ஆறு மாசம் அஷ்டம சனி முடிஞ்சிரும்...இந்த வாரம் 4 ல் செவ்வாய் சுக்கிரன் என இருப்பதால் அபரிதமான வருமானம் ஒன்ணு காத்திருக்கு..சொத்து சம்பந்தமான நல்ல செய்தி கிடைக்கும் விற்பனை ஆகாமல் இருந்த சொத்து லாபத்துல விக்க வாய்ப்பிருக்கு...ஒரு பிரச்சனை பைசல் ஆகிடும்...அம்மா வழி உறவில் நல்ல செய்திகள் வரும் வாரம்...

மீனம்;

தொழிலில் பரபரப்பான முன்னேற்றம் தரும் வாரம்...வர வேண்டிய வருமானம் நிற்காம வந்து சேரும்...அருமையாக பேசி காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் வல்லவரான நீங்கள்..இந்த வாரமும் ஜொலிப்பீர்கள்...குருதான் வாக்கு ஸ்தானத்தில் இருக்காரே உங்க பேச்சுக்கு நல்ல செல்வாக்குதான்..போற இடம் எல்லாம் மரியதை ,புகழ் கிடைக்கும்..சின்ன சின்ன பணிகளும் நல்ல வெற்றியை வருமானத்தை தேடித்தரும்!

தைரியமான செயல்பாடுகள் தேவை..இந்த வாரம் 3ல் பலம் வாய்ந்த கிரகங்கள் இருப்பதால்...உங்களுடைய நீண்ட நாள் பணிகளை முடியுங்கள்..மனதில் இருப்பதை செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்..தயங்க வேண்டாம்..எதுவா இருந்தாலும் வெற்றி நிச்சயம்..குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்..தெய்வ பலம் மிகுதியாக உள்ளது..தெய்வ காரியங்களை செய்து முடிப்பீர்கள்.....


Read more: http://www.astrosuper.com/2011/06/12.html#ixzz1PDhlucq0

கருத்துகள் இல்லை: