புதன், 23 டிசம்பர், 2015

திருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..?

(ஒரு பாடலுக்கே இதனை விளக்கமா
திருமந்திரத்தில் ... தலையே சுத்துது ......}
திருமந்திரம் பாடல் 1514:
---------------------------------------------
இருட்டறை மூலையில் இருந்தகுமரி
குருட்டுக் கிழவனைக் கூடல்குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.

மேற்கண்ட திருமந்திரம் மட்டுமல்ல,அனேக திருமந்திர பாடல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவிளக்கம் இருக்கிறது. படிப்பவரின் நிலை மற்றும் ஆன்மீகதன்மைக்கு ஏற்ப விளக்கம்கொடுக்கும் பாடல். எளிமையாக
சொல்லுவது என்றால் இது ஆன்மீகக் கண்ணாடி.
உங்களை சரியாக பிரதிபலிக்கும்.
 
சூழல் மற்றும் ஸ்திதியை பொருத்து இதற்கு பன்முக
விளக்கம் கொடுக்க முடியும்.
அவற்றில் சில...

ஞான யோக விளக்கம் :
-------------------------------------
ஜகத் எனும் உலகம்
இரு மஹாபொருளால்
உருவாக்கப்பட்டது.
அது பிரகிருதி மற்றும்
புருஷார்த்தம்.
பிரகிருதி என்பது பெண்
தன்மை கொண்ட இறை நிலை.
புருஷார்த்தம்
என்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம
நிலை.
பிரகிருதி புருஷனுடன்
இணைவதால்
நமக்கு கர்மேந்திரியங்கள் மற்றும்
ஞானேந்திரியங்கள் உருவாகி, சாத்வ
ரஜோ மற்றும் தமோ குண
சேர்க்கைகள் ஏற்படுகிறது. இதனால்
குணங்களை கடந்து பிரகிருதி
நிலையில் புருஷார்த்த
தன்மை இருந்தால் அதன் பெயர்
ஜீவன் முக்தி.


பக்தி யோக விளக்கம் :
----------------------------------
-
சக்தி என்பவள்
மாற்றத்திற்கு உட்பட்டவள். சிவ
நிலை என்பது மாறாதது. என்றும்
இருக்கும் சிவ
நிலையானது முதுமையானது.
சக்தியானவள் தன்னை எப்பொழுதும்
புதுப்பித்து கொள்வாள். அதனால்
தான்
சக்தியை கன்னிப்பெண்ணாகவும்,
குமரிப்பெண்ணாகவும் வணங்கும்
வழக்கம் நம்மில் உண்டு.
நம்மில் இருக்கும் சிவதன்மையில்
சக்தி நிலை ஒன்றிணந்து பரவச
நிலைக்கு கொண்டு சேர்ப்பது
பக்தியோகத்தின் திருமணம் எனலாம்.
கோவில்களில் நடக்கும்
மீனாட்சி கல்யாணம்,
சீதா கல்யாணம்
இவை இதற்கு சான்று.

குண்டலினி யோக விளக்கம் :
---------------------------------------------
--
குண்டலி எனும்
மஹாசக்தி மூலாதரத்தில்
உறங்குகிறாள். அவள்
இருப்பது தெரியாமல் அனைவரும்
குருட்டுநிலையில் இருக்கிறார்கள்.
உடலை காட்டிலும் அவள்
எப்பொழுதும் இளமையானவள்.
என்றாவது ஒருநாள் அவள் பல
சித்துக்களை நமக்கு காட்டி தன்பால்
வசமாக்கி அறியாமையை நீக்கி
சகாஸ்ராரத்தை அடைவாள்.
 
அறிவியல் விளக்கம் :
-------------------------------------
அனுக்கரு என்பது நிலையான
ஒன்று. அனு உருவாக்கத்தில்
முதலில் தோன்றுவது அனுக்கரு.
அனுவை சுற்றிவரும்
எலக்ட்ரான்கள் /புரோட்டான்கள்
ஆற்றல் நிலையில் இருப்பதால்
தன்னை புதுப்பித்துக்கொள்ளும்.
சில அறிவியல் வினையால் (குணம்
பல காட்டி) அனுக்கருவான
கிழவனை பிளந்து இவற்றுடன்
மோதசெய்வதால் வெளிப்படும்
ஆற்றல் அளவில்லாதது. திருமணம்
எப்படி தனி ஒருவனாக செய்ய
முடியாதோ, அனைவருக்கும்
தெரிந்து விடுமோ அது போல இந்த
செயலும் மறைத்து தனிமனிதனாக
செய்ய முடியாது.
 
எளிய விளக்கம் :
------------------------------
ஆன்மீகம் என்றவுடன்
ஏதோ வயதானவருக்கான விஷயம்
நமக்கு ஏன் என கேட்பவர்கள்
உண்டு. அறுபது வயசுக்கு மேல
கிருஷ்ணா ராமானு இருக்கிறது
தானே இருபது வயசுல
இது தேவையா என சிலர்
இளைஞர்களை பார்த்து கேட்பதை
பார்த்திருக்கிறேன்.

ஆன்மீகம் என்பது இளம்
பெண்ணை போன்றது. ஒரு இளம்
பெண்ணை முதிய வயதில் திருமணம்
செய்தால் எவ்வளவு சிக்கல்
வருமோ அதுபோன்றது அறுபது
வயது வரை ஆன்மீக நாட்டம்
இல்லாமல் அதன்
பிறகு ஆன்மீகத்தில் ஈடுபடுவது.
தக்கவயதில் ஆன்மீகத்தில்
ஈடுபடுவது சரியான
முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இதயம் எனும் இருட்டு அறையில்
பரமாத்மா எப்பொழுதும் ஒளியுடன்
திகள்கிறது. இருள் எனும்
அறியாமையில் இருக்கும்
மனதை ஒளிபெறச்செய்கிறது.
அவ்வாறு செய்யும் பொழுது பல
குண தோஷங்களை நீக்கியும்,
எதிர்பாராத நிகழ்வுகள் (மருட்டி)
மூலமும் 'தான்' எனும்
அகந்தையை நீக்கி இருப்பது தெய்வீக
திருமணம் அல்லவா? தான் எனும்
அகந்தை அற்று அதனுள் ஒன்றாக
இணையும் தெய்வீக
திருமணத்திற்கு முயலுங்கள்.

கருத்துகள் இல்லை: