புதன், 18 ஜூலை, 2018

வியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்


.  

வியாபார
  தொழில்

சூரியன்  சனியுஞ்சேர  சுகமொடு  வுதித்த பாலன்
பாரினில் வியாபாரத்தில்  பண்டிதன் சமர்த்து ளோனாய் 
தேரிய தாதுவர்க்கம்  செம்பு  பொன் வெள்ளிலோகம்
கூரது  பரிஷை செய்து  குறைவிலா   தனத்தைச் சேர்ப்பன்

விளக்கம்
சூரியனும்  சனியும்  கூடி  ஒரு  வீட்டில்   நிற்கபிறந்த  ஜாதகர் வியாபாரம்
செய்வதிலும்  பொன் , வெள்ளி , செம்பு , பித்தளை போன்ற  தாது  வர்க
உலோகங்களை   பரிசோதித்து   அதனாலேயே   அதிக  தனத்தை
சேர்ப்பவனாவான்   .கணக்கு  முதலானவைகளில்   மிகவும்   சமர்த்தனம்




  பெரிய  பூமிக்கு  அதிபதி

அறிஞனும்  புகரும் கூட  வவனியிலுதித்த  பாலன்
பெரிய பூமிகள்  சபைக்கும்  பிரபல  வதபனாகி
மருவிய  வார்த்தை  கூறி   மாற்றலர்  தாமொடுங்க
சரிவர  வெல்லு மிக   சமர்த்துளானென்னலாமே

விளக்கம்
புதனும்  சுக்கிரனும் கூடி இருக்க பிறந்தவன்  பூமிக்கும் பெரிய
சபைக்கும்  அதிபதியாயிருந்து   வார்த்தைகளால் மெய்பித்து எதிரிகளை
ஜெயிக்கும்  வல்லமையுடைய  சமர்த்துடையவன்  ஆவான் .

    யந்திர  கருவி   தொழில்

கதிரொடு  மதியுங்கூடி   கலந்தொரு  ராசி நிற்க
துதி பெறு   பலவாயெந்திரம்   சூட்சுமக்  கருவியாலும்
அதவித பாஷான்ங்க   ளமைத்திடும்  வல்லோனாகி
விதியுடனிருபனின்னோன்  மேன்மையாமறிவுள்ளோனே



விளக்கம்
சூரியனும்  சந்திரனும் எந்த  ராசியிலாவது  கூடியிருக்க  பிறந்தவன்
பலவிதமான  யந்திரக்  கருவிகள்  செய்பவன்  ஆகவும்  பாஷாணம்
வைப்பு சரக்கு முதலியவைகளை உற்பத்தி செய்பவனாகவும்  மிகவும்
புத்தி கூர்மை உள்ளவனாகவும்  இருப்பான் என்பதாம் .

 பல பேரை   மோசம்  செய்வான்
என்னுமால்  சனியைக்கூடி  யிருந்திடமகமாய்  வந்தோன்
மன்னுலகதிற்   பல பேரை   மயக்கியே   மோசம்  செய்து
துன்னுமா   பொருள்கைக் கொண்டே  சுகமடைந்திடுவானாகும்
உன்னித   குருவின்   வார்த்தை   யுட்கொள்ளான்   கர்வியமே

விளக்கம்
புதன் சனி  கூடியிருக்க   பிறந்தவன் உலகத்திலுள்ள  பல பேரை  மயக்கி
மோசம் செய்து  அவர்கள்  கையில் உள்ள     பொருட்களை   எடுத்துக்  கொள்வதில்   கை  தேர்ந்தவனம் . குரு  வார்த்தையை   தள்ளி  விட்டு   தன்மனம் போல  நடப்பவன்  என்பதாம் .






கருத்துகள் இல்லை: