திருமண தடை நீக்கும் பரிகாரம்
தனிசூழ் மதியை சனி சேய் பாவர்கள்
நோக்க மனமே சலிக்க சதை தலை
நரைத்தும் வாழ்க்கை படாள்
இந்த மாநிலத்தே பெண்ணே..!!
பெண்கள் ஜாதகத்தில் சந்திரனும் சனியும் பார்த்தாலும் சேர்ந்தாலும் அல்லது சனி செவ்வாய் பார்க்க சேர திருமண தடை,தாமதம் உண்டாகும் அல்லது பார்க்கும் வரனுக்கு பெண்ணை பிடிக்காது.இந்த பெண்ணை பார்க்கும் வரனுக்கு வேறு இடத்தில் சீக்கிரம் திருமணம் நடந்து விடும்.
இந்த தோசத்துக்கு பரிகாரமாக சிவனுக்கும் பார்வதிக்கும் பிரம்மா திருமணம் செய்து வைத்த இடமான திருவேள்விக்குடியையும்,இருவரும் கல்யாண கோலத்தில் தரிசனம் கொடுத்த இடமான திருமணஞ்சேரியையும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும்.திருமண தாமத பிரச்சினை உள்ளவர்கள் அனைவரும் இந்த வழிபாட்டை செய்யலாம் ..
நிச்சயித்த திருமணம் நின்று விட்டால் அதுவும் இரண்டு முறை ஊரெல்லாம் பத்திரிக்கை வைத்த பின் நின்றுவிட்டால் ஒரு மனுசனுக்கு எப்படியிருக்கும்..? அப்படியொருவரை சந்தித்தேன்.எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..என் ஜாதகத்தில் என்னதான் பிரச்சினை என நொந்து போய் கேட்டார்
.(அவர் எழுத சொன்னதால் பேஸ்புக்கில் குறிப்பிடுகிறேன் என்னிடம் ஜாதகம் பார்த்த நண்பர்கள் யாரும் கவலையுற வேண்டாம்)
அவருக்கு பரிகாரமாக சொன்ன விசயம்.அப்படி யாரும் இருந்தால் உங்கள் நட்பில் உறவில் யாரும் இருப்பின் இதை சொல்லவும்.
ஏற்கனவே நிச்சயம் செய்தோ,பத்திரிக்கை அடித்த பின்போ திருமணம் நின்று போயிருந்தால் அதன் பிறகு அடுத்த முறை திருமண நிச்சயதார்த்தம் செய்யக்கூடாது.பத்திரிக்கை அச்சான பிறகு முதல் பத்திரிக்கையை திருவேடகம் ஏடகநாதேஸ்வரருக்கு வைத்து மணமக்கள் பெயருக்கு அர்ச்சனை அபிசேகம் செய்ய வேண்டும்.திருமணத்தை ஒரு கோயிலில் நெருங்கிய உறவினர் சிலரை மட்டும் வைத்து செய்து கொள்ளவும்.அதன் பின் மாலையில் ரிசப்சன் வைத்து எல்லோருக்கும் விருந்து வைக்கலாம்.திருமணத்தின் போது விருந்து வைக்க கூடாது
கோயில் மதுரை சோழ வந்தான் அருகில் இருக்கிறது.